NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Wednesday, July 9, 2014

பலஸ்தீனம்: காஸாவின் மீது இஸ்ரேல் கொலைவெறி;100 க்கும் அதிகமான தடவை குண்டுவீசி தாக்குதல்


செவ்வாய் கிழமை அதிகாலை காஸாவின் ரபாஹ், கான் யூனுஸ் போன்ற  நகரங்கள் மீது நூறுக்கும் மேற்பட்ட தடவைகள் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி கொலை வெறித் தாக்குதல் நடத்தின.


  
 
மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 23 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். குண்டுவீச்சால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாயின.

Tuesday, July 8, 2014

'தவறான கைதுகள்: சிமியின் தலைவர் சப்தார் நாகூரியும் விடுதலை'

 
சப்தார் நாகூரி
உருதுவில்: ஹபீஸ் நுஃமானி

தமிழில்: இக்வான் அமீர்

புனித மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை அந்த மகத்தான செய்தி வந்தது; சிமியின் (SIMI-Students Islamic Movents of India) அகில இந்தியத் தலைவர் சப்தார் நாகூரியும் இன்னும் அந்த அமைப்பைச் சேர்ந்த அதிபயங்கரமான (!) நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டார்கள். போலீஸார் அவர்களுக்கு எதிராக ஏற்பாடு செய்திருந்த 8 சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக அறிவிக்கப்பட்டதால் வழக்கில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் ஆதாரமற்றவை என்று நீதிமன்றம் கண்டறிந்து விடுதலை செய்தது.

எல்.கே.அத்வானி உள்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்தபோதுதான் சிமி தடைசெய்யப்பட்டது. இதன் மூலம், தொழுகையில் பேணுதலாக இருப்பவர்கள், தவறாமல் நோன்பு நோற்பவர்கள், முஸ்லிம் தோற்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் போலீஸாரின் விருப்பப்படி கைது செய்யப்பட்டனர். இவர்கள் எழுத்து மூலமாகவும், பேச்சு மூலமாகவும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்குவதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

எந்தவிதமான வியப்புக்குரிய செய்தியாக இல்லாமல் சிமியின் எல்லா அங்கத்தினர்களும், ஒரேவிதமான குற்றச்சாட்டுகளுடனேயே, அதாவது சமூகங்களிடையே பிரிவினையை தூண்டுவதாக ஒரே குற்றச்சாட்டின் அடிப்படையில், அதற்கான எந்த முகாந்திரமும், ஆதாரமும் இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ச்சியாக போலீஸார் வெறுந்தலையோடு, நீண்ட ஆடைகளோடு மைக் முன்னர் ஆவேசமாக கைகளை ஆட்டிப் பேசும் இளைஞர்களின் காட்சிகளை தொலைக்காட்சிகளில் அரங்கேற்றினார்கள். அவர்கள் பேசியது என்ன? எந்தக் கூட்டத்தில் எப்போது பேசினார்கள் என்பதெல்லாம் சொல்லாமலேயே இந்த நாடகக் காட்சி ஊடகங்களில் காவல்துறையினர் திட்டமிட்டு பரப்பப்பட்டது.

சப்தார் நாகூரியின் இத்தகைய ஒரு காட்சி, மைக் முன்பாக கைகளை ஆட்டி ஆவேசமாக பேசும் காட்சி தேசிய ஜனநாயக கூட்டணி அரசை தூக்கி எறிவதாக சொல்லப்பட்டாலும் அதற்கான சாட்சியாக அவர் சொற்பொழிவாற்றும் உரைகள் ஆதாரமாக சமர்பிக்க முடியவில்லை. ஆனாலும், சப்தார் நாகூரியின் அனல் கக்கும் பேச்சாக அது வழக்கில் ஜோடிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் உயர்நீதி மன்றம் சிமியைத் தடை செய்வதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்று அதன் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. இந்தச் செய்தி சோனியா காந்தியை இடியாய் தாக்க உடனே அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி தடை உத்திரவு பெற்றார். அப்பாவி இளைஞர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டைப் போட்டார்.

சோனியாவின் விருப்பத்தை அன்றைய உள்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த இன்றைய பஞ்சாபின் ஆளுனராக பொறுப்பு வகிக்கும் சிவராஜ் பட்டேல் உடனுக்குடன் நிறைவேற்றுபவராகவே இருந்தார். நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும், எந்த அசம்பாவிதம் நடந்தாலும் ‘சிமி’ மந்திரத்தையே அவர் தொடர்ந்து ஜபித்துக் கொண்டிருந்தார்.

சிமியைப் பற்றி அவருக்குத்  தெரியாவிட்டாலும், அவர்களின் கொள்கைக் கோட்பாடுகள் சம்பந்தமாக எந்த புத்தகத்தைப் படிக்காவிட்டாலும், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை புத்தாடைகளை மாற்றும் அவருக்கு அதற்கான நேரம் கிடைக்காவிட்டாலும் அடுத்த இரண்டு மணி நேரம் கழித்து எந்த ஆடை அணிவது என்று சிந்திப்பதிலேயே அவரது நேரம் சென்றுவிடுவதாலும் அவருக்கு இதற்கெல்லாம் நேரமில்லாமல் போய்விட்டது!

சிமி இயக்கத்தை தடை செய்வதற்கான அவர்கள் செய்த ஒரே ஒரு குற்றம் பாபரி மசூதியை போஸ்டராக அச்சிட்டு அதன் தலைப்பாக “இறைவா! ஒரு முஹம்மது கஜ்னவியை’ அனுப்புவாயாக!” – என்று அச்சிட்டதுதான்!

இந்து சகோதரர்களிடையே கசப்புணர்ச்சியை உண்டாக்கும், எரிச்சலூட்டும் முஸ்லிம் லீக் பாணியிலான மனப்போக்காகும் இது. ஏற்கனவே முஹம்மது கஜ்னவியைக் குறித்து ஆதாரமற்ற பல கட்டுக்கதைகள் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் இது நடந்தது. இந்திய நாட்டில் சங்பரிவார் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுதான் முழுக்க.. முழுக்க உண்மை என்ற நிலையிலும், முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதை கேட்டக் கூட தயாராக இல்லாத சூழலும் நிலவிவருவதே உண்மை.

இந்த போஸ்டரைப் பார்த்துவிட்டு திடுக்கிட்ட நான் உடனுக்குடன் ஒரு கட்டுரையை எழுதினேன். அதைப் படித்துவிட்டு சிமியின் ‘முஜாஹிதீன்கள்’ என்னுடைய அலுவலகம் வந்து வாத, விவாதங்களில் இறங்கினார்கள். அப்போது நான் அலுவலகத்தில் இல்லாத நிலையில் எனக்கு தகவல் வந்தது. நான் உடனே அவர்களை கண்ணிமாக வரவேற்று, நான் வரும்வரை அவர்களுக்கு தேனீர் அளித்து உபசரிக்கும்படியும் சொன்னேன்.

நான் அலுவலகம் திரும்பியதும், அவர்களின் கடுமையான எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது. தீப்பிழ்பாய் மாறிய அவர்கள் தாங்கள் காலித் பின் வலீத்தாய் (நபித்தோழர் காலீத் பின் வலீத் இஸ்லாத்துக்காக பல்வேறு போர்க்களங்களைச் சந்தித்தவர்; இறைவனின் வாள் என்ற சிறப்புக்குரியவர்) மாற வேண்டியிருக்கும் என்றார்கள். 

நான் அவர்களுடன் அன்போடும், கருணையோடும் உரையாடத் தொடங்கினேன். "நண்பர்களே! முஹம்மது பின் கஜ்னவீ முஸ்லிம்களுக்காகவும், அவர்களது முன்னேற்றத்துக்காகவும் செய்த ஒரே ஒரு பங்களிப்பை, நற்செயலை சொல்ல முடியுமா? ஒரு வேளை அவர் திரும்பவும் தன்னுடைய படையோடு வந்தால் ஒரே ஒரு கிராமத்தையாவது அவரால் கைப்பற்ற முடியுமா?” என்று கேட்டேன். நான் அன்பைப் பொழிந்து அவர்களுக்கு விளக்க முயன்றேன்; ஏனென்றால் அவர்கள் அனைவரும் இளைஞர்கள்; திறமையாளர்கள்.

நான் என்னுடைய உதாரணத்தையே முன் வைத்து அவர்களுடன் உரையாட வேண்டியிருந்தது. சிறப்பிதழ் ஒன்றை கொண்டு வந்ததற்காக, அதை யாருமே படிக்காத நிலையில் குருட்டுத்தனமான காங்கிரஸ் அரசால் அதில் அரசுக்கு எதிராக எதுவுமே குறிப்பிடாத நிலையிலும் பறிமுதல் செய்யப்பட்டு, அதற்காக, ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த கதை அது.

அந்த குற்றத்துக்கான சட்டப்பிரிவுகள், விளக்கவுரைகள் எதுவுமே தெரியாவிட்டாலும் என்னை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் என்னை DIR [Defense of India Rule] என்னும் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்திருந்தனர். தடா, மாகோகா மற்றும் பொடா (TADA, MACOCA and POTA) போன்ற சர்வாதிகார சட்டங்களின் துணைப் பிரிவு இது. இந்த சட்டப்பிரிவை கைது செய்பவர்கள் மீது பயன்படுத்தும்போது அவர்கள் கைதுக்கான காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

நான் அந்த சிமி உறுப்பினர்களிடம் பேச ஆரம்பித்தேன்: “என் அன்புக்குரிய சகோதரர்களே! மூன்று மொழிகளில் பிரமாண்டமாய் அச்சடித்த இந்த போஸ்டர்கள் வழியே டஜன் கணக்கில் சோமநாதர் கோயில் மீது படையெடுத்த குற்றவாளியான முஹம்மது கஜ்னவிக்கு அழைப்பு கொடுத்திருக்கிறீர்கள்!” – என்று பேசி ஒருவழியாய் அவர்களைச் சமாதானப்படுத்தி கோபத்தைத் தணித்து பிறர் எரிச்சலடையாதவாறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யுங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன். 

அடுத்த நாள் காலையில் சிமி தடைச் செய்யப்பட்டதை பத்திரிகைகள் வாயிலாக அறிந்து கொண்டேன். லக்னோ, தில்லி மற்றும் மும்பையில் நூற்றுக்கணக்கான சிமியின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இதுவரையிலும் சிறையில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜுன் 26-ம், தேதியோடு மோடியின் சர்க்கார் பதவியேற்று ஒரு மாதமே ஆன நிலையில், மோடி 60 மாதங்களை கேட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அதில் ஒரு மாதம் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் மோசமாக கழிந்துள்ளது. உண்மையில், ஒரு மாத கால அவகாசத்தில் இந்த அரசாங்கம் குறித்து எந்தத் தீர்ப்பையும் வழங்கிட முடியாதுதான்.

மோடி நாட்டு வளர்ச்சிக்கு திறம்படி செயல்பட ஓராண்டு காலம் அதாவது 12 மாதங்கள் கேட்டிருப்பதை நமது நண்பர்கள் மறந்துவிட்டார்கள் போலும்! குற்றப் பின்னணி உள்ள உறுப்பினர்களின் வழக்குகள் இந்த ஓராண்டுக்குள் அதற்கான சிறப்பு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்துவிடும். அதன் பின் வழக்குகளிலிருந்து விடுபடும் உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர்களாக செயல்பட முடியும். மற்றவர்கள் சிறைக்கு சென்றுவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கேட்கப்பட்டிருக்கும் 60 மாத கால அவகாசத்தில் 12 மாதங்கள் கழிந்துவிடும் நிலையில், குற்றப் பின்னணிக் கொண்ட மக்களவை உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக முறையான நீதி, பரிபாலன அமைப்புகளை இன்னும் நிறுவவில்லை; அதற்கான எந்த ஏற்பாடுகளும் இதுவரையிலும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விரைந்து செயல்படும் நிகழ்வுகள் எவையென்றால், மோடியின் பிரியத்துக்குரியவரான அமித் ஷாவின் பாஜக தலைமைப் பதவிக்கான நியமனங்களும், அதற்கான பாதையை செப்பனிடுவதும்தான்! அவர் மீது ஏற்கனவே கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, அதற்காக சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளி வந்துள்ளவர் அவர். ஷொராப்புத்தீன் மற்றும் அவரது  அழகிய மனைவியின் ஆத்மாக்கள் தங்கள் கொலைக்குக் காரணமான மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நபருக்காக சபித்துக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், தற்போது அவருக்காக நியமிக்கப்பட்டிருக்கும் 25 கமாண்டோக்களைப் பார்த்து இன்னும் குமைந்து போயிருக்கும்.

ஏப்ரல் மாதத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தான் அரசில் எந்த பொறுப்பிலும் பங்கெடுக்க விரும்பவில்லை என்றும், கட்சிக்கு சேவையாற்றவே முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனால், மோடி அமித் ஷா குறித்து பெரிதும் கவலைப்பட்டார். ஏனென்றால் அமித் ஷாவை உள்துறை அமைச்சராக நியமிக்க முடியாது! அதனால், ராஜ்நாத் சிங்கின் பெயரை ஜபிக்க ஆரம்பித்தார். ராஜ்நாத் சிங் இல்லையென்றால் தன்னால் அரசாங்கத்தை நடத்த முடியாது என்றெல்லாம் பசப்பு வார்த்தைகள் கூறினார். கடைசியில் வலுக்கட்டாயமாக ராஜ்நாத் சிங் அரசில் பங்கெடுக்க வைத்தார். கடைசியில் ஒரு மாதத்துக்கு பிறகு சாமார்த்தியமாக காய்களை நகர்த்தி அமித் ஷாவுக்கான பாதையை சீர்ப்படுத்திவிட்டார். ராஜீவ் காந்தியும், சோனியா காந்தியும் எப்படி இரட்டைப் பொறுப்புகளை நிர்வகித்தார்களோ அதே வழிமுறையைப் பின்பற்றி மோடியும் வெற்றிப் பெற்றார். விமர்சனங்களைத்  தவிர்ப்பதற்காக மோடி கட்சிப் பொறுப்பை ஏற்காமல் அதைவிட பாதுகாப்பான முறையில் அதை தக்க வைத்துக் கொள்ளும்விதமாக அதுவும் 25 கமாண்டோக்கள் புடைசூழ அவர்களுக்காக லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டிய நிலையில் வலம் வரும் ஒரு நபரை உருவாக்கிவிட்டார். தனது சட்டைப் பைக்குள் உள்ள நபர் அவர்!

இந்நிலையில், மோடி ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று விரும்பினால், அவர் உடனே சிமி இளைஞர்களை விடுதலைச் செய்ய வேண்டும். அவர்கள் வெறும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். முதிர்ச்சிப்பெறாத இளைஞர்கள். அவர்களுக்கு இதுரை அளிக்கப்பட்ட தண்டனை அளவுக்கு அதிகமானது.


(ஹபீஸ் நுஃமானி புகழ்பெற்ற உருது பத்திரிகையாளர் மற்றும் பன்னூல் ஆசிரியர் ஆவார்)

Translated by Urdu Media Monitor.Com from Avadhnama, Lucknow, 5 July 2014.




வெல்டன் ஜீ: 'இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை!'



அன்றைய தினம், போரூரில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில் அவனும் ஒருவன். 

இரவெல்லாம் ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் வெறும் கைகளாலேயே பலரை உயிருடன் மீட்டுள்ளனர் இத்தகைய பல நண்பர்கள்.

அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற துறையினரும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று மீட்புப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

இவன் காலில் கல் விழுந்து அடிபட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்திருக்கிறான்.

எனது நண்பன் அங்கு நடந்த சம்பவம் ஒன்றினைச் சொன்னான்:

'விபத்து நடந்த அந்த ஆரம்பக் கட்டத்திலேயே அங்கு நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் வந்திருந்து மீட்புப் பணிகளில் உதவிடும்போது, யாரோ ஒருவர் நூற்றுக்கணக்கான் பிஸ்கெட் பாக்கட்டுகளை வாங்கி வந்து மீட்புப் பணியிலிருந்தவர்களுக்குத் தந்துள்ளார்.

இன்னுமொருவர், ஓடிச் சென்று தெருவில் சென்று கொண்டிருந்த டீ விற்கும் சைக்கிளை அப்படியே அழைத்து வந்துள்ளார். டீ வண்டிக்காரர் அங்கிருந்த எல்லோருக்கும் டீ கொடுத்துள்ளார்.

நண்பர், தனது பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து டீ வண்டிக்காரருக்கு தர முயல, அவரோ,

"அய்யே.. இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா? நா ஓடிப் போய் இன்னொரு கேன் டீ கொண்டுட்டு வரேன். நீ போய், மாட்டிட்டு இருக்கவங்க யாரையாவது தூக்க முடியுமான்னு பாரு.. அத்த வுட்டுட்டு, காசு கொடுக்குது பாரு"

இதை அவன் என்னிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு,

"நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்குடா!" - என்றான்.

"அதைத்தாண்டா, சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, என வெவ்வேறு வடிவத்தில இலக்கியம் சொல்லுது!" - என்றேன்.

சொல்லி விட்டு, மறுபடியும் யோசித்தேன்.

'ஒருவேளை இதைத் (மட்டும்) தான் நமது இலக்கியங்கள் சொல்ல வேண்டுமோ?! "


- தகவல்:  Nasar Ali Ali
Nasar Ali Ali