NewsBlog

Monday, March 3, 2014

நடப்புச் செய்தி: 'மதராஸில் மெட்ரோ ரயில்'


சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 45 கி.மீட்டர் நீளத்துக்கு இரு வழிதடங்களில் விரைவாக நடைபெற்று வருகின்றன. 

முதல் வழித்தடம், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையிலும், இரண்டாவது வழித்தடம் சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலும் செல்கிறது. இதற்காக 24 கிலோ மீட்டருக்கு அதாவது 55 விழுக்காடு சுரங்கப் பாதையும், 21 கிலோ மீட்டருக்கு பறக்கும் பாதையும் அமைக்கப்படுகிறது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 12 ராட்சத சுரங்கம் தோண்டும் இயந்திரங்களைக் கொண்டு நகரின் பல பகுதிகளில் உலகத் தரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலகத் தரத்தில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதையின் மூன்றில் ஒரு பங்கு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. 2016ம் ஆண்டில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

 
மெட்ரோ ரயில் குறித்த சில முக்கிய தகவல்கள்:  

  • மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றி விலை ரூ.8 கோடியாகும். 
  • ஒரு ரயிலில் 4 குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பெட்டிகள் இருக்கும்.
  • தானியங்கி கதவுகள் இதன் சிறப்பம்சம்.
  • மெட்ரோ ரயில் நவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. இதன் வேகம் மணிக்கு 90 கி.மீட்டர். ஆனால், அனுமதிக்கப்பட்ட வேகம் 80 கி.மீட்டர்.
  • சென்னையில் 1 முதல் 1.5 கி.மீ இடைவெளியில் ரயில் நிறுத்தங்கள் இருக்கும். அதனால், சராசரியாக மெட்ரோ ரயிலின் வேகம் 34 கி.மீட்டராக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
  • நான்கு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயிலில் உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் அதிகபட்சம் 1276 பயணிகள் பயணிக்கலாம்.
  • 2016ல் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்போது, நெரிசல் நேரத்தில் 3.5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். 
  • வண்ணாரப்பேட்டையில் இருந்து விமானம் நிலையத்துக்கு நாற்பதே நிமிடங்களில் சென்றடைய முடியும்.

வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் - விம்கோ நகர்வரை 9.051 கி.மீட்டருக்கு மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படுகிறது.  இதற்கான செலவு ரூ.3,001 கோடியாக இருக்கும்.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் மூலக்கடை - திருமங்கலம், மூலக்கடை - திருவான்மியூர், லஸ் - பூந்தமல்லி (ஐயப்பன் தாங்கல் வழி) இடையே புதிய மம்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்துக்கான ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

0 comments:

Post a Comment