NewsBlog

Thursday, March 13, 2014

தேர்தல்கள் 2014: மதசார்பற்ற கட்சிகளிடம் பேசத் தயாராக இருக்கிறோம்:வெல்பர் பார்ட்டி


மக்களவை தேர்தல்கள் வருவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்க அரசியல் கட்சிகள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டிருக்கும் நேரமிது.

சாக்கடை என்றழைக்கப்படும் இந்திய அரசியல் அரங்கில் ஒழுக்க மாண்புகளே பிரதான கோஷமாகவும், வாக்காளர்களை ஈர்க்கும் ‘வளர்ச்சி’ மந்திரத்துடனும் களமிறங்கியுள்ள அரசியல் கட்சி ‘வெல்பர் பார்ட்டி ஆஃப் இந்தியா (WPI). அதன் ஆந்திர மாநில தலைவர் மலிக் முக்தஸின் கான். இவர் வகுப்புவாதிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற முழு வீச்சுடன் களத்தில் இருக்கிறார். அவருடன் ஒரு நேர்காணல்:

கேள்வி: அண்மையில் மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் கலந்து கொண்டு கணிசமான முறையில் வெற்றிப் பெற்றிருக்கின்ற அனுபவம் உங்கள் கட்சிக்கு உண்டு. அப்போது, கிராமப்புற மக்களோடு பழகும் போது உங்களுக்கு ஏற்பட்ட பொறுப்புணர்வுகள் என்ன?

பதில்: உண்மையிலேயே அந்த பஞ்சாயத்து தேர்தல்களில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக எந்தவிதமான ஒழுக்க விரோதமான செயல்களிலோ, சட்டவிரோதமான காரியங்களிலோ நாங்கள் இறங்கவில்லை.
மக்களும் எங்களின் எளிய நேர்மையான அணுகுமுறையைக் மிகவும் விரும்பினார்கள்.

அதேபோல, மக்களின் முன்னேற்றத்துக்காக நாங்கள் வகுத்திருந்த திட்டங்கள் மீதும் முழுமையாக நம்பிக்கை தெரிவித்தாகள்.
நாங்கள் முன் வைத்த ஒழுக்க மாண்புகளின்  அடிப்படையிலான அரசியலுக்கு அவர்கள் காட்டிய நேர்மறை அக்கறை எங்கள் மனவுறுதியை இன்னும் அதிகரிக்கவே செய்தது.

வரவிருக்கும் தேர்தல்களிலும் நாங்கள் களம் காண தயாராகவே உள்ளோம்.

கேள்வி: வெறும் இரண்டே வயது கொண்ட உங்கள் கட்சி வரவிருக்கும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்களில் பங்கெடுப்பது அவசரப்படுவதாகாதா? இது சரியானதாக இருக்குமா?

பதில்: தேர்தல்களில் பங்கெடுத்து போராடுவது என்பது தனிநபரது அல்லது கட்சியின் மனஉறுதியை அதிகரிக்கவே செய்யும்.

மக்களுக்கு சேவைச் செய்ய வேண்டும் என்று ஆசையிருந்தால், தீமைகளை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சலிருந்தால் மற்ற எதுவும் பிரச்னையாக எழாது.

ஒழுக்க மாண்புகளின் அடிப்படையிலான அரசியலுக்கு நாங்கள் உத்திரவாதம் தருகிறோம். அதேபோல எந்த கிரிமினல் பின்னணியும் இல்லாத வேட்பாளர்களையே நாங்கள் தேர்வு செய்கிறோம்.

கேள்வி: TRS, காங்கிரஸ், TDP, MIM மற்றும் YSRCP போன்ற பிரதான கட்சி போட்டியாளகளை களத்தில் எதிர்கொள்வதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: வகுப்புவாத சக்திகளை எதிர்கொள்வதே கட்சியின் நிலைபாடு.

அதனால், நாங்கள் நிச்சயமாக மதசார்பற்ற கட்சிகளுடன் பேசத் தயாராக இருக்கிறோம். வகுப்புவாத சக்திக்கு எதிராக மேடையமைக் கவும்  தயாராக உள்ளோம். மத்தியிலும், மாநிலத்திலும் கிரிமினல் அல்லாத வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்படி வாக்களர்ளை கட்சி வலியுறுத்தும்.

கேள்வி: மோடி அலையும், ஆம் ஆத்மியின் மந்திரக் கோலசைவுகளும்  பெரிதாக பேசப்படும் இத்தருணத்தில் வாக்காளர்களிடம் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?

பதில்: இந்தியா போன்ற ஒரு பரந்த, விரிந்த நாட்டில் ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள். மோடிக்கும் நிச்சயம் ஆதரவாளர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்யும். இதை வைத்து அவர் பிரதமராகிவிடுவார் என்று சொல்ல முடியாது.

இந்தியாவின் அரசியல் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் பல்வேறு தருணங்களில் மதசார்பற்றவாதிகளைதான் மக்கள் தங்கள் பிரதமராக தேர்வு செய்துள்ளார்கள்.

மோடி ஊடகங்களால் பெரிது படுத்தப்படுகிறார். ஆனால், உண்மை நிலை அப்படி இல்லை.

ஆம் ஆத்மியை எடுத்துக் கொண்டால், மக்களுக்கு வாக்குறுதிகளை அளித்து அது தில்லியில் ஆட்சிக்கு வந்தது. ஒரு சில வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு பெரும்பகுதி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெறும் 49 நாட்களில் அது ஆட்சியையை விட்டு இறங்கிவிட்டது.

கேஜரிவாலிடமும் அவரது கட்சியினரிடமும் மக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அத்தோடு தேசிய அளவிலான பல்வேறு பிரச்னைகளுக்கு ஆம் ஆத்மியிடம் தெளிவான பதில்கள் இல்லை.

கேள்வி: ஆம் ஆத்மி மற்றும் வெல்பர் பார்ட்டியின் தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டால் அவற்றில் பல ஒற்றுமைகள் உள்ளன. இதை வைத்து ஆம் ஆத்மியுடன் வெல்பர் பார்ட்டி தேர்தல் கூட்டணி அமைக்கும் வாய்ப்புகள் உண்டா?

பதில்: ஒத்த கொள்கை, செயல்திட்டங்கள் கொண்ட அரசியல் கட்சிகளுக் கிடையே கூட்டணி ஏற்பட வாய்ப்புகள் இருப்பதை மறுப்பதிற்கில்லை. ஆனால், ஆம் ஆத்மியின் தற்போதுள்ள சூழலில் கூட்டணி அமைத்துக் கொள்ளும் வாய்ப்பில்லை.

ஆனால், மக்களுக்கு நன்மைத்தரக்கூடிய விஷயங்களில் ஒத்தக் கருத்துடைய கட்சிகள் தங்களுக்கிடையே ஆதரவளித்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

நற்பணிகளில் நாங்கள் எல்லா கட்சிகளுடனும் இணைந்திருக்கவே விரும்புகின்றோம்.

கேள்வி: நீங்கள் தனித்தெலுங்கான இயக்கத்திற்கான அதி முக்கிய ஆதரவாளர். ‘தெலுங்கானா கர்ஜனா’ ஊர்வலங்களையும் முன்னின்று நடத்தியிருக்கிறீர்கள். வரவிருக்கும் தேர்தல்களில் ஒருவேளை TRS பாஜாகவுக்கு ஆதரவளித்தால் உங்கள் நிலைப்பாடு எப்படியிருக்கும்?

பதில்: தனி மாநிலம் வேண்டி நடத்தப்பட்ட தெலுங்கானா இயக்கத்தையும், TRS யும் தனித்தனியாகவே நான் பார்க்க விரும்புகின்றேன்.

தெலுங்கான இயக்கத்தில் TRS முன்னணியில் நின்று போராடிய கட்சி.

ஒரு சமூகத்தின் தலைவன் என்ற ரீதியில் அதற்கு நான் ஆதரவு தந்தேன்.

TRS வரவிருக்கும் தேர்தல்களுக்கான நிலைப்பாட்டை இதுவரையிலும் அறிவிக்கவில்லை. அதனால், இந்தக் கேள்வியை தவிர்ப்பதே நல்லது.

கேள்வி: வரவிருக்கும் மக்களவை தேர்தல்களில் நீங்கள் போட்டியிட விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அது உண்மை என்றால், நீங்கள் போட்டியிட இருக்கும் தொகுதி எது?

பதில்: ஆம்.. மக்களவைத் தேர்தல்களில் நான் பங்கெடுக்க இருக்கிறேன். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும், நிஜாமாபாத்தையே நான் தேர்வு செய்திருக்கிறேன். அது எனக்குப் பொருத்தமான தொகுதியும்கூட.
நான் நிஜாமாபாத்தை சேர்ந்தவனாகையால் என் மக்களுக்கு சேவைச் செய்யவே நான் விரும்புகின்றேன்.

கேள்வி: அப்படியானால் என்னென்ன விஷயங்களை தொகுதி வளர்ச்சிக்காக செய்யவிருக்கிறீர்கள்? அதிலும் குறிப்பாக மக்களிடம் வாக்கு சேகரிக்கும்போது தாங்கள் அளிக்க இருக்கும் வாக்குறுதிகள் என்னென்ன..?

பதில்: நிஜாமாபாத் வளர்ச்சிக்கு என்னால் முடிந்தளவு பாடுபடுவேன்.

தற்போது மக்களிடம் வாக்குறுதி அளித்து வெற்றிப் பெற்று வரும் அரசியல்வாதிகள் அற்பமானவற்றை செய்து வளர்ச்சிக்கான சாதனைகள் என்கிறார்கள்.

முன்னுரிமையின் அடிப்படையில் இவற்றை நான் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன்:

>>>சர்க்கரை ஆலைகளுக்கு புத்துயிர் அளிப்பது.

>>>நிஜாமாபாத்துக்கும், கரீம்நகருக்கும் ரயில்பாதை அமைப்பது.

>>>உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது.

>>>அரசின் எல்லா நலத்திட்டங்களையும் செயல்படுத்துவது.

>>>சேரிப்பகுதிகளில் வாழும் மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவது.

ஒரு பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை இனத்தவன் என்ற ரீதியில் என் சமூகம் போலவே அடிமட்டத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்துப்பட்டவர் நலன்களுக்காக பாடுபடுவேன்.

Source: TwoCircle.net

0 comments:

Post a Comment