NewsBlog

Thursday, October 17, 2013

காலப்பெட்டகம்: 'வழக்கு எண்: 0001'

1998 ஆம் - ஆண்டு குங்குமம் இதழில் 'தீவிரவாதம்' சம்பந்தமாக புகழ்பெற்ற மனவியல் மருத்துவர் 'ருத்ரன்' ஒரு பேட்டி அளித்திருந்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலை 'சமரசம்' இதழ், 16-30 ஏப்ரல், 1998 - பக்.40 இல், வெளியிட்டிருந்தது. அந்த கேள்வி மற்றும் பதில் இது:

கேள்வி: தீவிரவாதிகளை மீண்டும் சரியான வழிக்குக் கொண்டு வருவதில், அரசு, காவல்துறை, பத்திரிகைகள், பொதுமக்கள் இவர்களது அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?

பதில்: தீவிரவாதிகளும் மனிதர்கள்தான். உள்ளுக்குள் இருக்கும் கருணை, காதல் போன்ற உணர்ச்சிகளை மழுங்கடித்துக் கொண்டவர்கள்.

வன்முறையில், ஈடுபட்டபின் அதிலிருந்து மீள முடியாமல் தொடர்பவர்களும் உண்டு; மீளவிடாமல் அவர்களை ஊக்குவிப்பவர்களும் உண்டு. அரசு வன்முறையை வித்திடும் பிரச்சாரங்களையும், பேச்சுகளையும் தடை செய்வதோடு மக்களுக்கு மனவியல் அடிப்படையில் பிரச்சாரம் செய்வது பயனளிக்கும். 

பத்திரிகைகள்  செய்திகளைப் பிரசுரிக்கும்போது, 'பரபரப்பு, சுவை, முந்திதருவது' இவற்றோடு பொறுப்புணர்ந்து சுயதணிக்கை செய்து செய்திகளை வெளியிட வேண்டும்.

நம் காவல்துறையினரும், பொதுமக்கள் நம்பிக்கையோடும், மரியாதையோடும், அன்போடும் அணுக வேண்டும். இது பெருமளவில் பயனளிக்கும்.

- ஆக ஒரு சித்தாந்தத்தையொட்டி போராடுகின்ற தீவிரவாதிகளை ஒழிக்க பெரும் சிரத்தை எடுக்க வேண்டிய நிலையில், நிரூபிக்காத குற்றங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குற்றவாளியாக்குவது என்ன நியாயம்?

காலப்பெட்டகத்தில், வழக்கு எண்: 0001 என்ற இந்த தலைப்பில் நமது நாட்டில் நடக்கும் கைதுகள் தொடர்ந்து பதியப்படும். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதிலோ அவர்கள் தண்டனை பெறுவதிலோ யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. ஆனால், அரசியல் பார்வைகளுக்காகவும், கருத்துருவாக்கங்களுக்காகவும் புனையப்படும் கதைகள் மனித உரிமைகளுக்கு எதிரானது.

வழக்கு எண்: 0001 தமிழகத்திலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. இதோ!


குற்றங்களே நிரூபிக்கப்படாத நிலையில் நமது முதல்வரோ கைது செய்யப்பட்டவர்கள் தீவிரவாதிகள்தான் என்று உறுதிப்பட குறிப்பிட்டு காவல்துறையினருக்கு பதவி உயர்வுகள், பரிசுகள் என்று பெரு மழைப் பொழிந்திருக்கிறார்.


1 comment:

  1. http://www.lalpetexpress.com/rm-haneefa-interview/
    இந்த பதிவில் குணங்குடி ஹனீபா அவர்களது சமீபத்திய பேட்டி வெளியாகி இருக்கிறது.தாம் கைது செய்யப்பட்ட சமயத்தில் எந்த மாதிரி எல்லாம் பொய் கதைகளை காவல்துறையும் பத்திரிகை துறையும் வெளியிட்டு வந்தது என்பதை பதிவு செய்துள்ளார்.பாருங்கள்.

    ReplyDelete