NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, August 30, 2020

நல்லவன் வாழ்வான்

நேற்றைய பத்திரிகைகளில் வசந்தகுமாருக்கான அஞ்சலிச் செய்திகளே பெரும் பகுதியாய் இடம் பெற்றிருந்தன. அவர் இருக்கும்போது நாம் நினைத்துப் பார்க்காத அவரது வியாபார ஆளுமைத் திறனை அவர் இறந்த பிறகுதான் பலரும் சொல்ல கேட்டு, நாம் வியந்து கொண்டிருக்கிறோம்.நிஜமாகவே அவர் ஒரு வியாபார சக்கரவர்த்தி என்பது இப்போது நமக்குப் புரிகிறது. அவர் நடத்திய அந்த சாம்ராஜ்யம் அவரது மகனால் விரிவடைய வேண்டும்.தகப்பனுக்கு...

Saturday, August 29, 2020

வண்ண நண்டு

&nb...

விமர்சனங்களைத் தாண்டி சாதனைப் படைத்த 'அரே ஓ சம்பா!' - ஷோலே

 இந்த மாதம் 45-ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது என்றும் பசுமையான இந்திப் படமான "ஷோலே" (Cult movie).கமல், ஸ்ரீவித்யா, ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அபூர்வ ராகங்கள்’ வெளிவந்த ஆகஸ்ட் 15, 1975-ஆம் ஆண்டில்தான் இந்தப் படமும் வெளிவந்தது.அப்பா தயாரிப்பில் மகன் ரமேஷ் சிப்பி இயக்க,  ஆர்.டி.பர்மன், சலீம்-ஜாவேத் கூட்டணி அமைந்திருந்தனர்.‘அந்தாஸ்’...

Friday, August 28, 2020

வெற்றிப்படிகட்டுகளை தொட்டுக் காட்டியவர்!

 இனி பணியாளராகவே இருக்க கூடாது; முதலாளியாகதான் இருக்க வேண்டும் என்று லட்சிய வேட்கையுடன் செயல்பட்டு கடைசியில் தனது இலக்கை அடையவும் செய்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்~இக்வான் அமீர்''''''''''''''''''''''''''''கையில் ஒரு பைசாவும் இல்லாத்தால் மூடிகிடந்த நண்பரின் கடையை கேட்டு வாங்கி திறந்தார். பெயர் பலவை மாட்டவும் வசதி இல்லாத்தால் எதிர் கடையிலிருந்த ஒரு பலகையில் தன் கையாலேயே சொந்தமாக...

Thursday, August 27, 2020

உலக நாடுகளுக்கு, சமநீதி பாடத்தை போதிக்கும் நியூஸிலாந்து

"நீங்கள் செய்த குற்றங்கள் கொடுமையானவை. சாகும் வரை உங்களை சிறையில் வைத்தாலும், நீங்கள் செய்த குற்றத்துக்கு அந்த தண்டனை போதாது"குற்றவாளியின் நடவடிக்கைகள் ‘மனித நேயமற்ற செயல். அவர் யார் மீதும் கருணை காட்டவில்லை"நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....

அந்த இரண்டு இளம் மீட்பாளரும், தூக்கணாம் குருவி குஞ்சுகளும்

 மித்ரன் மற்றும் வர்சா எப்போதும் போல் தங்கள் ஊரை சுற்றி சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.அப்போது மழை நீர் தேங்கிய சதுப்பு நிலத்தில் வளர்ந்திருந்த யானைத்தட்டை புற்கள் செழித்த புதர் காட்டின் கரையோரம் அநாதரவாக தரையில் கிடந்த தூக்கணாங்குருவி கூடு ஒன்றை கண்டனர்.யாரோ மாட்டுக்கு புல் அறுத்தவர்கள் உச்சிப் புல்லை வளைத்து, கோர்த்து, இணைத்து கட்டியிருந்த கூட்டை அகற்றி பொருட்படுத்தாமல்...

Wednesday, August 26, 2020

பையன்னா பரவாயில்ல; பொண்ணுன்னா செலவா?

 "யார் மூன்று பெண் குழந்தைகள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்வரை கருணையுடனும், பரிவுடனும் அவர்களிடம் நடந்து கொள்கிறார்களோ அத்தகையோருக்கு இறைவன் சுவனத்தைக் கடமையாக்கிவிட்டான்” – என்று நபிகளார் கூறினார். அப்போது, அங்கிருந்தவர்களில் ஒருவர், ”ஒரு பெண் குழந்தை இருந்தபோதும் இந்த உயர் பதவி கிடைக்குமா? இறைவனின்...

Saturday, August 22, 2020

'பலியாடுகளா தப்லீக் ஜமாஅத்தினர்?' போலீஸாரின் பொய் வழக்கை ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்

டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் கூட்டத்தில் பங்குபெற்ற 29 வெளிநாட்டவர்கள் மீதான வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து சிறப்பு மிக்க ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஐவரி கோஸ்ட், கானா, தான்சானியா, ஜிபெளடி, பெனின் மற்றும் இந்தோனீசியா ஆகிய நாடுகளை சேர்ந்த மனுதாரர்கள் தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி...

Thursday, August 20, 2020

எண்ணூர் உப்பங்கழியும், அரங்கேற்றப்படும் அத்துமீறல்களும்!

பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெறும் முப்பது, நாற்பதாண்டுகளில் நதி நிறம் மாறிப்போனது. பெரும் பகுதி நீர் வாழ் உயிரினங்கள் அடையாளம் தெரியாமல் போயின. கிடைக்கும் சொற்ப வகை மீன்களும் மண்ணெண்ணெய் தொட்டிக்குள் வளர்வது போல உண்பதற்கு லாயக்கற்று சுவை மாறிப் போயின >>> இக்வான் அமீர் '''''''''''''''''''''''''''''''''வடசென்னை மக்களால் நதி எனக் குறிப்பிடப்படும் எண்ணூர் உப்பங்கழி,...

Wednesday, August 19, 2020

ஒளியே கதை எழுது..1 - நெஞ்சோடு கொஞ்சம்

பிரியத்துக்குரிய தோழர், தோழியரே.. வாழ்த்துகள்!நான் இக்வான் அமீர். தமிழ் இலக்கியம், இதழியல் மற்றும் மனித உரிமைகள் என்று மூன்று மேல்நிலை பட்டப்படிப்புகளை முடித்து 40 ஆண்டுகளாய் பல்வேறு வெகுஜன ஊடகங்களில் சுதந்திர இதழியலாளனாக எழுதி கொண்டிருப்பவன். பல்வேறு பத்திரிகைகளுக்கு சிறப்பு செய்தியாளராக பணியாற்றியவன். குழந்தை எழுத்தாளனாக 15 புத்தகங்களை எழுதியிருப்பவன். ஒளிப்படக்காரன். முழுநேர...

காக்டெஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை ஒடித்து நடலாமா?

  ஓரளவு முற்றிய கள்ளியை திருக முடிந்தால் திருகி எடுங்கள் அல்லது பிளேட் போன்ற கூரான கத்தியை பயன்படுத்தி வெட்டி எடுங்கள். பால் வடியும்வரை நிழலான பகுதியில் வைத்து ஓரிரு நாள் கழித்து நடுங்கள். பொடி கற்கள், ஆற்று மணல், சிறிதளவு தோட்ட மண், கிடைத்தால் அடுப்பு கரி இவற்றை கலந்து நல்ல வடிகால் வசதியோடு கூடிய ஒரு மண் கலவையை தயார் செய்து நடுங்கள். அப்படி நடும்போது, மண்ணில்...

Monday, August 17, 2020

இப்படிதான் யானை கவுணி 'மினி ராஜஸ்தான் ஆனது!

 ஒரு காலத்தில், யானை கவுணியில்தான், அநேக பிராமணர்கள் வசித்தனர். இவர்கள் பெரும்பாலும், ஆற்காடு, ஆரணி, வந்தவாசி ஊர்களிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள். கொச்சையான கிராமிய தமிழுக்கு சொந்தக்காரர்கள். கரிய நிறங்கொண்டவரகளாக (பிராமணரா என்று யூகிக்கும் வகையில்) இருப்பினும், தீர்க்கமான கருட மூக்கு கொண்டவர்கள்.அப்போதெல்லாம் அனுமாருக்கு சாத்தப்படும் வெங்காய நிறத்தில் ஶ்ரீசுர்ணம் தான்...

Wednesday, August 12, 2020

முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி மறைந்தார்.

 முதுபெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி உடல்நலக் குறைவால் தனது 102 ஆம் வயதில் இன்று காலமானார்.மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?சின்னச் சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்துஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து - போன்ற பல வெற்றிப் பாடல்களை இயற்றியவர்தான் இந்த வெண்பாக் கவிஞர் பி.கே. முத்துசாமி.கண்களுக்குக் கண்ணாடி ஏதுமின்றி, 102 வயதைத்...