இடமிருந்து: அஹ்மது தன்வீர் மற்றும் அஹ்மது யஹ்யா. |
காமிராவைக் 'கிளிக்' செய்யும்போது, கை நடுக்கம் கூடாது. அடுத்தது, எதனைப் படம் எடுக்க விரும்புகிறீர்களோ அதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து 'ஃபோக்கஸ்' செய்ய வேண்டும்.
சரி, ஒரு முழுக் குடும்பத்தையும் படம் எடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்வீர்கள்? உதாரணமாக உங்கள் மூன்று பிள்ளைகளை, அவர்களது நண்பர்களுடன், உறவு முறைகளுடன் அல்லது குடும்பத்தில் உள்ள மற்றவர்களுடன் படம் எடுக்க விரும்புகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். எப்படி எடுப்பீர்கள்?
அவர்களை சுவர் ஓரமாக வரிசையாக நிறுத்தி படம் எடுப்பீர்களா?
அப்படி செய்துவிடாதீர்கள். இப்படி படம் எடுப்பதை 'சுட்டுத் தள்ளுவது' என்று அழைக்கலாம். சுடப்படப் போகிறவர்கள் போலவா நமது பிள்ளைகளை படம் எடுப்பீர்கள்? நிச்சயம் விரும்பமாட்டீர்கள்தானே?.
பிறகு?
குளத்தில் நீச்சலடிப்பது போலவோ, ஊஞ்சலாடுவது, ஓடியாடுவது, மரம் ஏறுவது, பூனை, நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் இருப்பது என்று அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் படம் எடுத்துப் பாருங்களேன். அந்தப் படத்தில்தான் 'ஜீவன்' இருக்கும்
இதை விடுத்து அவர்களை ஒருகாலும் சுவருடன் நிற்க வைத்து படம் 'Shoot' செய்ய வேண்டாம். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே படம் எடுங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக, மலர்ந்த முகத்துடன் துள்ளித் திரிகையில் படம் எடுப்பது இயற்கையாக இருக்கும். அவர்களைச் சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு, "காமிராவைப் பாருங்கள்!" - என்று சொல்லிவிட்டு நீங்கள் படம் எடுத்தால் அவர்கள் விறைப்பாக காமிராவை முறைத்துக் கொண்டு நிற்பார்கள். அது நன்றாக இருக்காது. எனவே அதைப் போன்ற படம் எடுப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
- ஆரி மில்லர்
0 comments:
Post a Comment