ஒரு சிறுவன் காயம்பட்ட ஒரு கழுகை தூக்கிப் பிடித்திருப்பதை பிடித்திருப்பதை இங்கு உள்ள படங்களில் காணலாம்.
முதல் படத்தில் சிறுவனின் முகம் சரியாக தெரியவில்லை. இரண்டாவது படத்தில் சிறுவனின் முகம் பளிச்சென்று உள்ளது.
இரு படங்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டவை. அப்படங்கள் உச்சி வெய்யிலில் எடுக்கப்பட்டவை. சூரியன் உச்சந்தலையில் இருக்கும்போது, சிறுவனின் முகத்தில் நிழல் விழும் என்பதுடன் அப்படி நிழல் விழாமல் படம் எடுப்பது எப்படி என்பதைக் காட்டவும்தான் இந்த முயற்சி.
முதல் படம் எடுத்து முடித்ததும், இரண்டாம் படம் எடுக்கப்பட்டது. பட்டப்பகலில், சூரிய வெளிச்சம் பளிச்சென்று இருந்த போதிலும் சிறுவனின் முகத்தில் நிழல் விழாமல் இருக்க 'பிளாஷ் லைட்' பயன்படுத்தினேன். அப்படிச் செய்ததால் சிறுவனின் முகத்தில் இருள் விழவில்லை. படமும் தெளிவாக நல்ல முறையில் வந்திருந்தது.
இதிலிருந்து தெரிவது என்ன?
சுட்டெரிக்கும் வெய்யிலில் படம் எடுக்கும் போது, 'பிளாஷ் லைட்' பயன்படுத்தலாம். அதனால், படத்தில் நிழல் விழுவதை தடுக்க முடியும். படமும் தெளிவாக பளிச்சென்று இருக்கும். இதனை இங்குள்ள போட்டோக்களில் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
பிளாஷ் லைட் பயன்படுத்தும்போது, அது அளவோடு இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.
இந்தப் படத்தில் நிழல் விழாதபடி 'பிளாஷ் லைட்' பயன்படுத்தவில்லை என்பதை கவனியுங்கள். விளையாட்டுப் பொருளை தூக்கிப் பிடித்துள்ள சிறுவனின் கைகளின் கீழும், தலையின் கீழும் நிழல் விழுந்துள்ளது. நிழல் படிந்த பகுதிகள் படத்தின் இதர பகுதிகளைவிட ஓரளவு 'கருமை' படர்ந்திருப்பதையும் அது படத்தை எவ்வகையிலும் பாதிக்கவில்லை என்பதையும், படத்தின் தரத்தை உயர்த்தி இருப்பதையும் கவனியுங்கள்.
அளவோடு 'பிளாஷ் லைட்' பயன்படுத்தவில்லையானால் என்ன நடக்கும் தெரியுமா? படம் வெளுத்துப் போய் விடும். ஒருவேளை, உங்கள் 'பிளாஷ் லைட்' மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்து அதனை மிகக் கவனமாகக் கையாளவில்லையென்றால் 'எக்ஸ்போஸ்' கூடி படத்தின் தரமும் கெட்டுவிடும். அந்தப் படத்தை விட நிழல் படிந்த படமே எவ்வளவோ பரவாயில்லை எனச் சொல்லத் தோன்றும். 'பிளாஷ் லைட்டை' எவ்வளவு பயன்படுத்தலாம் என்பது படம் எடுக்கும் சூழலைப் பொறுத்தது. சாதாரணமாக வெளிப்பகுதி வெளிச்சம் அதிகம் இல்லாத நேரத்தில் போதிய அளவு 'பிளாஷ் லைட்' ஒளியைப் பயன்படுத்தினால் படம் சிறப்பாக அமையும்.
இப்பொழுதெல்லாம் 'பிளாஷ் லைட்டுடன்' நல்ல தரமான நவீன காமிராக்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்தக் காமிராக்களில் பொருத்தப்பட்டுள்ள 'பிளாஷ் லைட்டுகள்', விசையை அழுத்தியதும் தானே இயங்கி அளவோடு ஒளி பாய்ச்சக் கூடியவை.
- ஆரி மில்லர்.
ஆரி மில்லர் |
0 comments:
Post a Comment