NewsBlog

Monday, February 10, 2014

செய்திகள் வாசிப்பது 'டுபுக்கு' தாஸ்! : மோடி - வைகோ. பிரத்யேக பேட்டி.


வாழ்த்துக்கள்..

செய்திகள் வாசிப்பது டுபாக்கூர் டுபுக்கு தாஸ்.

சென்னையில் சனிக்கிழமை இரவு நரேந்திர மோடியை வீணாய் போன திமுக - மன்னிக்கவும் - மதிமுக பொதுச் செயலாளர் வணங்கா முடி.. வேங்கை .. பதவி வெறியர் வைகோ சந்தித்துப் பேசினார்.

அந்த சந்திப்புக் குறித்து வீணாய் போன திமுக மன்னிக்கவும், மதிமுக தலைமை அலுவலகம் நமக்கு அனுப்பியுள்ள அறிக்கை. அடைப்பு குறிக்குள் இருப்பது வைகோவின் மனோநிலையாகும். அதை நேரிடையாக சொல்ல முடியாமைக்கு கழகம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.

வைகோ: நீங்கள் இந்தியில் உரையாற்றினாலும், அம்மொழியைப் புரிந்து கொள்ளாதவர்களைகூட உங்களின் உணர்ச்சிமிக்க குரல், உங்களின் கரங்களும், முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்தது. நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும். (கருமம்.. இந்தியிலே பேசும்போது, குரல்வளையைக் கடிக்கணும் போல தோணிச்சு. ரத்த வாடை அடிக்குது.. ம்.. தலையெழுத்து சீட்டு வேணுமே..!)

மோடி: மிகச் சிறந்த பேச்சாளரான நீங்களே பாராட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது. (முணுமுணுப்புடன் "வந்து வெச்சுக்கிறேன் இருங்க..!")

வைகோ: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மாநில உரிமைகளை நசுக்குவதைக் கண்டித்தது. கூட்டாட்ச்சித் தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியது. நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும் ( எவ்வளவு சீட்டு கொடுப்பீங்க மோடி?)

மோடி: தமிழ்நாட்டுக்கு இந்தக் கருத்து மிகவும் அவசியமாயிற்றே! (தத்துவமாவது மண்ணாங்கட்டியாவது. எல்லாம் எழுதிக் கொடுத்ததைதான் பேசினேம்பா. ஓவரா தள்ளாதே!)

வைகோ: தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவதையும், அதைத் தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச் சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்ற கட்சிகள் ஊழல் செய்து, அதனால் பலன் பெற்றதைப் பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக் கொள்ளும் மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் ப.சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மட்டுமே 250 முதல் 272 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி  பெறும். நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திமுக, அதிமுக என்று இதுவரை இருந்த பரிமாணம், மோடி அலையால் இம்முறை உடையும். புதிய மாற்றம் தொடங்கும்.(ச்சே..வட நாட்டானை புகழ வேண்டிய தலையெழுத்தாயிடுச்சு. ஏதோ ஒரு புள்ளி விவரம் விட்டாச்சு. கூட்டணி தோல்வியடைஞ்சுட்டால் இனி வாழ்க்கையிலேயே இத்தகைய தவறு செய்ய மாட்டேன்னு இந்த 'பாயான்களிடம்' தொப்பியைப் போட்டுக்கிட்டு, மன்னிப்பு கேட்டிட வேண்டியதுதான். அய்யோ.. எத்தனை சீட்டு தருவார்னு மனுஷன் சொல்ல மாட்டேங்கறானே!)

மோடி: நானும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன். (சிலோனுக்கும், டமிள் நாட்டுக்கும் இடையிலே இஸ்ரேல் நண்பர்களிடம் ஆலோசனைக் கேட்டு, கடல்லே ஒரு சுவர் எழுப்பிட்டா பிரச்னை தீர்ந்திடப் போவுது. இதுக்கு என்னமோ இந்த ஆளு ரொம்பவும் அலட்டிக்கிறாரே. வந்தவரைக்கும் லாபம்தான்)

கடைசியில் விவசாயிகள் மாநாட்டுக்கு மோடியை வைகோ அழைத்தார்.

இத்துடன் டுபாக்கூர் டுபுக்கு தாஸ் செய்திகள் முடிவடைகின்றன.

"வாழ்த்துக்கள்!"

0 comments:

Post a Comment