NewsBlog

Friday, February 28, 2014

காலப்பெட்டகம்:'சாக்கடை, சாக்கடையாகவே இருக்க வேண்டுமா?'


1964 ஜனவரி மாதம் அன்றைய பாகிஸ்தானின் ராணுவ தளபதியும் பிரதமருமான ஜெனரல் அயூப்கான் மௌலானா மௌதூதி அவர்களை அவர்களது வீட்டில் சந்திக்கிறார். அவர்களுக்குள் இப்படி உரையாடல் நடக்கிறது.

அயூப் கான் : "ஷேக் சாஹெப்! உங்கள் அறிவார்த்த புலமை நமது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகவும் தேவைப்படுகிறது. நீங்கள் தீன் பணிகளில் அதன் ஆய்வுகளில் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். எனவே நீங்கள் அரசியல் பணிகளை விட்டு விட்டு இஸ்லாமிய பணிகளில் கவனம் செலுத்தினால் இந்த நாடும் உலக முஸ்லிம்களும் பயனடைவார்கள் அல்லவா?"

மௌலானா: "அயூப்கான், நீங்கள் உண்மையில் எந்த நோக்கத்துக்காக என்னை அரசியலை விட்டு ஒதுங்குமாறு சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை?"

அயூப்கான்: "ஷேக் சாஹெப்! அரசியல் ஒரு சாக்கடை. அது உங்களைப் போன்ற நல்லவர்களுக்கு ஒத்து வராது!"

மௌலானா: "சாக்கடை, சாக்கடையாகவே இருக்க வேண்டுமா? அதை அப்படியே நாற்றமடிக்க விட வேண்டுமா? அல்லது தூய்மைப் படுத்த வேண்டுமா? நான் அதனைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் அரசியலில் நுழைகிறேன்! இன்ஷா அல்லாஹ் தூய்மையாகும்!"

அயூப்கான்: "உங்களது பிள்ளைகள் பெயரில் தொழிற்சாலைகளை நிறுவுங்கள். அரசு அதற்கான அத்தனை உதவிகளையும் செய்யும்! உங்களுக்கு விருப்பமான நாட்டில் நமது நாட்டின் உயர் அதிகாரியாக உங்களுக்கு பதவி தருகிறோம்!"

மௌலானா: "அயூப்கான், ஸலாம், நீங்கள் இன்னும் என்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அதேபோல, என்னை இழிவு படுத்தி விட்டீர்கள். தயவுசெய்து இங்கிருந்து வெளியேறுங்கள்."

தலையைத் தொங்க விட்டவண்ணம் அந்தச் சிறுநரி சிங்கத்தின் குகையிலிருந்து வெளியேறியது.

மறுநாள் மௌலானா மௌதூதி (ரஹ்) பாகிஸ்தான் ராணுவ அரசால் கைது செய்யப் படுகிறார்.

- படம் மற்றும் தகவல்: Shafeena Ahshan (சென்னை)

0 comments:

Post a Comment