எல்லோருமே ‘பிளாஷ் லைட்’டுடன் கூடிய நவீன காமிராக்களை அதிக விலை
கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் என்ன செய்வது? கவலை வேண்டாம். மார்க்கம்
உண்டு.
உதாரணத்துக்கு இங்குள்ள படத்தை ‘பிளாஷ் லைட்’ பொருத்தப்பட்ட விலை உயர்ந்த காமிராவில் எடுத்திருக்க வேண்டிய தேவை இல்லை.
சிறுவனின் முகத்தில் நிழல் கருமையாகப் படிவதைத் தவிர்க்க, யாரையாவது
வெள்ளை டவல் ஒன்றைப் பொருதத்தமான கோணத்தில் பிடித்துக் கொள்ளச் செய்து,
அந்த டவலில் படியும் சூரிய ஒளியைச் சிறுவன் முகத்தில் பிரபலிக்கச் செய்பது
ஒரு வழி.
வெள்ளை டவல்தான் என்றில்லை. வெள்ளை அல்லது சுமாரான வெள்ளைப் பொருளான
இருந்தாலும் சரிதான். அகலமான வெள்ளைத்தாள், ஹார்ட்போர்ட்டு, பெயிண்ட்
அடித்த போர்ட்டு அல்லது நாளிதழ் கூட இதற்குப் போதுமானது. நிழல் விழும்
இடங்களில் சூரிய ஒளியை ‘பிரதிபலிக்கச்’ செய்ய வேண்டும். முன்று பாருங்கள்.
வெள்ளிச் சரிகைத் தாள் என அழைக்கப்படும் ‘ஈயத்தாள்’ காகிதத்தைகூட
இதற்காக பயன்படுத்தலாம். அந்த ஈயத்தாளை ஒரு பலகையில் ஒட்டி வைத்து
‘பிரதிபலிப்பானக பயன்படுத்தலாம்.
வெள்ளை டவலோ, வேறெந்த பலகையோ, நாளேடோ, ஈயத்தாள் ஒட்டிய பலகையோ
எதுவாயினும் அதைப் பயன்படுத்த உங்கள் உதவியாளர்களுக்கு ஓரளவு பயிற்சி
பெற்றிருப்பது நல்லது. அந்த பயிற்சி அனுபவத்தால் மட்டுமே கிடைக்கும்
பயிற்சியாகும்.
- ஆரி மில்லர்
0 comments:
Post a Comment