NewsBlog

Friday, February 14, 2014

இதழியல்: காமிராவில் கைவண்ணம் - 7: 'நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்'


வெட்டி விடாதீர்கள். (படம்: இக்வான் அமீர்)
உங்களுக்கு விருப்பமானவர்களையோ, மற்றவர்களையோ கூட்டமாக நிற்கவைத்து நீங்கள் படம் எடுக்க வேண்டியிருந்தால்.. அவர்களில் எத்தனை பேரை ஒரு படத்தில் கொண்டு வர நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதை முதலில் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அது முக்கியம். அவர்களைப் பாதி படம்தான் எடுக்க விரும்புகிறீர்களா? அல்லது முழு உருவத்துடனா? அதை முதலில் தீர்மானியுங்கள். ஆனால், படத்தில் நிற்பவர்களைக் கணுக்கால்களுக்குக் கீழே வெட்டி விடாதீர்கள். அப்படிப் படம் எடுப்பது இயற்கையாக இராது. 

காமிராவை நேராக வைத்துக் கொள்ளுங்கள். சாய்க்க வேண்டாம். நீங்கள் சாய்ந்தபடிப் படம் எடுக்க நினைத்தால் தவிர காமிராவை சாய்க்காதீர்கள்.


நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். (படம்: இக்வான் அமீர்)

பெரும்பாலான காமிராக்கள் அகலவாக்கில் படம் எடுக்கக் கூடியவைதான். அதனால், நீங்கள் உயரமாகப் படம் எடுக்க விரும்பினால் ஒழிய காமிராவை சாய்க்க வேண்டியதில்லை. 

எவரையேனும் குளோசப்பாகப் படம் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் காமிராவை சாய்க்கலாம். அப்படிச் செய்யும் போது படம் உங்களுக்கு உயரவாக்கில் கிடைக்கும். அது படத்தில் உள்ளவரை அல்லது உள்ளவர்களைச் சிறப்பாகத் தனிமைப்படுத்திக் காட்டும்.

எப்படிப் படம் எடுத்தாலும் படத்தை கிளிக் செய்யும் முன் அப்படத்தில் என்ன இடம் பெற வேண்டும் என்பதைத் தெளிவாக நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். இது முக்கியம். 

- ஆரி மில்லர்
ஆரி மில்லர்

0 comments:

Post a Comment