NewsBlog

Thursday, February 27, 2014

நடப்புச் செய்தி: 'நிரூபிப்பாரா மோடி?'



மக்களவை குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை ஆண்மையற்றவர் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ‘சல்மான் குர்ஷித்’ விமர்சனம் செய்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கம் போல அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பாஜக மூத்த தலைவர் சித்தார்த் நாத் இதுகுறித்து கூறுகையில், “போர்க்களத்தில் யார் வீரத்துடன் போரிடுகிறார்களோ அவர்தான் சிறந்த ஆண்மகன். போரிட மறுத்து ஓடி ஒளிபவர் அல்ல!” – என்று ஆண்மைக்கு விளக்கம் அளித்துள்ளார். 

‘நரேந்திர மோடியை ஆண்மையற்றவர்’ - என்று தான் கூறியது சரியான வார்த்தைதான் என்று சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். பாஜகவினர் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அவர், ‘குஜராத் கலவரத்தை நரேந்திர மோடி கையாண்ட விதத்தைக் கண்டிக்க அதைவிட சிறந்த வார்த்தை ஏதாவது இரந்தால் பாஜகவினரே எனக்குத் தெரிவிக்கலாம்.

நான் அவரை உடல்ரீதியாக ‘ஆண்மையற்றவர்’ என்று கூறவில்லை. உடல்ரீதியாக அவர் ஆண்மையைப் பரிசோதித்து சொல்வது என் வேலையும் அல்ல. எதையும் செய்ய இயலாத ஒருவரைப் பார்த்து அரசியல்ரீதியாக சொல்லப்பட்ட வார்த்தைதான் அது.

மோடி வலிமையும், செயல்திறனும் மிக்கவர் என்றால் குஜராத் கலவரப் படுகொலைகளை வேண்டுமென்றே நடத்தியதாக அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், கலவரத்தை தன்னால் தடுக்க இயலவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார் சல்மான் குர்ஷித். 

கலவரம் நடந்தது உண்மை. படுகொலைகளும் உண்மை. 

குஜராத் மாநில அரசு ஒன்று கலவரத்தை திட்டமிட்டு நடத்தியிருக்க வேண்டும் அல்லது அந்த கலவரங்களை தடுக்க தவறியிருக்க வேண்டும். இந்த இரண்டே இரண்டு ‘ஆப்ஷன்’கள்தான்!

ஆப்ஷன் A, கலவரம் திட்டமிடப்பட்டதாக இருந்தால் மோடிக்கு கொலைகளுக்குக் காரணமான மரண தண்டனை அளிக்க வேண்டும்.

ஆப்ஷன் B, கலவரங்களைத் தடுக்க தவறியதற்காக கைது செய்யப்பட்டு மரண தண்டனை அளிக்க வேண்டும்.

இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு சட்டத்தின் முன் தன்னைத் தானே முன்னிறுத்தி தண்டனைப் பெறுவாரேயானால் அதுதான் உண்மையான பேராண்மை!

மோடி ஆண்மையுள்ளவர்தான் என்று நிரூபிப்பாரா?

0 comments:

Post a Comment