NewsBlog

Monday, February 3, 2014

சிறப்புக் கட்டுரை: தண்டனைப் பெறாமலேயே மரணமுற்ற ஒரு கொடும் கொலையாளி'



இஸ்ரேலின் முன்னாள் பிரதமர், நவீன உலகின் பெருங் கொலையன் என்று அழைக்கப்படும் ஏரியல் ஷரோன் 11.01.2014 சனிக்கிழமை அன்று மரணமடைந்தார். டெல்அவிக்கு அருகில் உள்ள ஷீபா மருத்துவ மையத்தில் எட்டு ஆண்டுகள் கோமா நிலையில் இருந்த அவர் மரணமுற்றார்.

மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு நிகழ்வு என்றாலும், 85 வயதான முன்னாள் ராணுவ ஜெனரலான ஷரானின் மரண வேளையில் அவர் மனித இனத்துகு இழைத்த பெரும் கொடுமைகள் நினைவுகூருவதிலிருந்து தவிர்க்க இயலாது.

ஷரான் பிரிட்டீஷாரின் ஆதிக்கத்தில் இருந்த அன்றைய பலஸ்தீனத்தில் 1928ல், பிறந்தார். அவரது 14ம் வயதில், யூதர்களின் பயங்கரவாத தலைமறைவு இயக்கமான 'ஹாக்னாவில்' சேர்ந்தார். நாசவேலைகளுக்குப் பெயர் போன கொரில்லா இயக்கம் இது.

1940ல், இந்த பயங்கரவாத இயக்கம் பிரிட்டீஷாரின் நிலைகள் மீது திடீர் தாக்குதல் தொடுக்கலாயிற்று. அதிலும் குறிப்பாக ரயில் தண்டவாளங்களைத் தகர்ப்பது, ராடர் நிலைகள் மீது குண்டுகள் எறிவது, பிரிட்டீஷாரின் காவல்நிலையங்களைத் தகர்ப்பது என்று தீவிரமான நாச வேலைகளில் ஈடுபட்டது. அதேபோல, சட்டவிரோதமான யூத குடியிருப்புகளை பலஸ்தீனத்தில் அமைத்தது.

ஆறாண்டுகளுக்குப் பிறகு 1948ல், ஷரான் காலாட்படையின் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாகவே, உலக சியோனிஸ செயற்கள தலைவராகவும், பலஸ்தீனத்துக்கான யூத ஏஜென்ஸியின் தலைவராகவும் இருந்தவர் டேவிட் பென் குரியன். இவர் மண்ணின் மைந்தர்களான பலஸ்தீனர்களை தாய் மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி இனசுத்தகரிப்பு பணிகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்தார். ஒரு கட்டத்தில், சுயமாக முன்வந்து ஒருதலைப்பட்சமாக பலஸ்தீனம் யூதர்களுக்குச் சொந்தமான இஸ்ரேல் என்று தடாலடியாக அறிக்கையும் விட்டார். பிரிட்டீஷ் அரசு பலஸ்தீனத்தை யூதர்களிடம் ஒப்படைக்கும் முன்பே இந்த பலவந்தம் அரசியல் சூழ்ச்சிகள் நடந்து முடிந்துவிட்டன.

ஆகஸ்ட், 1953ம் ஆண்டு, ஷரான் யூதர்களுக்கான பயங்கரவாத படை அமைப்பான 'இஸ்ரேலிய பாதுகாப்பு படை'  (IDF) உருவாக்கினார். டேவிட் குரியனின் உத்திரவின்படி இது நடந்தது. இந்த பயங்கரவாத படையின் முக்கிய வேலை அரபு குடியிருப்புகளின் மீது திடீர் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றொழிப்பது.

1953ல், ஷரானின் ஆணைப்படி எல்லைப்புற கிராமமான 'கிப்யாவில்' 45 பலஸ்தீனியர் வீடுகள் மற்றும் ஒரு கல்விசாலை  மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டனர் (இதில் பெரும் பகுதியினர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது) இதைத் தொடர்ந்து எழுந்த சர்வேதேச நிர்பந்தத்தால் தனது படையினர் நடந்து கொண்ட வெறிச்செயலுக்கு பென் குரியன் பகிரங்மாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

1956ல் சூயல்கால்வாய் யுத்தத்தில், ஷரானின் இஸ்ரேலிய பயங்கரவாத குழுவினர் பிரிட்டீஷ் மற்றும் பிரெஞ்சு ராணுவத்துக்கு ஆதரவாக எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் மீது தாக்குதல் தொடுத்தது. 'மித்லாவில்' நடைபெற்ற இந்தப் போரில் 260 எகிப்திய படையினரும், 38 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டார்கள். இந்த தாக்குதலில் அநியாயமாக எகிப்திய கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையும் நடந்தது. இந்த பயங்கர வெறிச்செயலை இஸ்ரேலிய தலைமைத்தளபதி கண்டித்தும், ஷரான் அசையாத பதுமையாக நின்றார்.



மித்லா நிகழ்வு நீண்ட காலம் ஷரானின் ராணுவ வளர்ச்சிக்கு ஒரு தடையாகவே இருந்தது. 1964ல் இட்ழக் ராபின் ராணுவத்தின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றதும், ஷரான் கிடு கிடுவென்று பதவி உயர்வுகள் பெறலானார். மேஜர் ஜெனரல் வரை இந்த பதவி உயர்வு தொடர்ந்தது.

1967ல், ஆறு நாட்கள் தனது அரபு அண்டைநாடுகள் மீது இஸ்ரேல் தானாக முன்வந்து போர் தொடுத்தது. ஷரான் யூதர்களின் அதிபயங்கரமான படைப்பிரிவை சினாய் மீது தாக்குதல் தொடுக்க ஷரான் ஆணையிட்டார்.

1969ல் ஷரான் IDFன் தென்பகுதி தளபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 1972 வரை அவர் ராணுவத்திலிருந்து சுயமாக ராஜிநாமா செய்யும்வரை எத்தகைய பதவி உயர்வு தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1973 எகிபத்து மற்றும் சிரியாவின் மீதான் யுத்தத்தின்போது அவர் மீண்டும் ராணுவப் பணிக்கு அழைக்கப்பட்டார். அந்த போர் ஷரானின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகி அரசியலுக்குத் தள்ளீயது.

லிகியூட் கட்சியில் சேர்ந்த ஷரான் பிரிட்டீஷ் அரசால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டிருந்த மெனாசிம் பெகினுக்கு ஆதரவளித்தார். 1973ல் இஸ்ரேலிய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக இருந்த இட்ழக் ராபின் அரசில் ஷரான் ராணுவ ஆலோசகராகவும், 1977ல் வேளாண்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். அரசாங்கத்தில் ஷரானுக்கு இருந்த அபரீதமான செல்வாக்கைப் பயன்படுத்தி 1967ல் ஆக்கிரமித்த பலஸ்தீன நிலப்பகுதிகளில் பலவந்தமாக நிரந்தர யூத குடியிருப்புகளை அமைக்க திட்டமிட்டார். "நாம் அமைக்க இருக்கும் இந்த நிரந்தர குடியிருப்புகள் மூலமாக நாம் அமைதியையும், பாதுகாப்பையும் பெற முடியும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதனால், இதற்காக நாம் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகளில் இருக்கும் அபாயங்கள் நமது நிரந்தர அமைதியின் முன் ஒரு பொருட்டே அல்ல!"- என்றார். அந்த நிரந்தர குடியிருப்புகளுக்காக ஷரான் தயாரித்த திட்டம் மறக்கவே முடியாதது. அந்த சந்தர்பத்தில் 'தஜோமெட்' கட்சியின் கூட்டத்தில் ஷரான் பேசும் போது  சொன்னது இது: "எல்லோரும், இங்கிருந்து இடம் பெயர்ந்து, ஓடோடிச் சென்று ஜுதியன் மலைச்சிகரங்களில் எவ்வளவுக்கு எவ்வளவு நிலப்பரப்புகளை அபகரித்துக்  கொள்கிறோமோ, பறித்துக் கொள்கிறோமா அவை நமக்கான நிரந்தர விரிவுப்படுத்தப்பட்ட குடியிருப்புகளாகிவிடும். பறித்துக் கொள்ளும் எல்லாமும் இனி நமதாகவே இருக்கும். கைநழுவவிடும் எல்லாமும் இனி அவர்களுக்கானதாகவே இருக்கும்! (Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them.") 
Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf
Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf
Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf

Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf!
Sharon said while addressing a meeting of the Tzomet party: "Everybody has to move, run and grab as many (Judean) hilltops as they can to enlarge the (Jewish) settlements because everything we take now will stay ours. ... Everything we don't grab will go to them."  - See more at: http://www.iviews.com/Articles/articles.asp?ref=IV1401-5658#sthash.NPgqJXpO.dpuf
எகிபத்தின் அன்வர் சதாத்துக்கும், பிரதமர் பெகினுக்கும் 1978ல் நடந்த 'காம்ப் டேவிட்' உடன்படிக்கையை ஷரான் கடுமையாக எதிர்த்தார். அதேநேரத்தில், இஸ்ரேலிய அரசாங்கம் எடுத்த முடிவுகளை அமல்படுத்த உறுதுணையாக நின்றார்.

1982ல் ராணுவ அமைச்சராக பதவியேற்றதும், இஸ்ரேலின் வடக்குபுற அண்டை நாடான லெபனான் மீது படையெடுக்க ஆணையிட்டார். அதுவரை அங்கு நிலைகொண்டிருந்த பலஸ்தீன விடுதலைப் படையினரை (PLO) வெளியேற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு 14,000 பலஸ்தீன மற்றும் சிரிய போராளிகள் பெட்ரூட்டிலிருந்து வெளியேற உடன்பட்டனர். அதேநேரத்தில், மேற்கு பெய்ரூட்டின் ஷப்ரா, ஷாதிலா பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான பஸ்தீனியர்கள் முகாம்களிலேயே தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதற்கிடையில், மத்தியஸ்தில் வழக்கம்போல ஈடுபடும் செல்லப்பிள்ளை இஸ்ரேலின் பிதாமகனான அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை ஷரோன் மீறினார். இஸ்ரேலிய படைகளை மேற்கு பெய்ரூட்டுக்கு அனுப்பினார். அதற்கு அவர் சொன்ன விளக்கம்: 'அகதி முகாம்களில் இன்னும் 2,000 PLO வீரர்கள் பதுங்கி உள்ளனர்!' -என்பதுதான்.


அப்போதுதான் அந்த துக்ககரமான செப். 16-18, பாடுபாதக நிகழ்வு நடந்தது. இதற்கு ஒருநாள் முன்னதாக, லெபனானின் பஷீர் கெம்யாயெல் ஒரு கிருத்துவரால் படுகொலை செய்யப்பட்டார். இதற்கும் PLOக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் ஷரான் அந்த கொலையை PLOவின் மீது பழிசுமத்தினார். இதைத் தொடர்ந்து அவரது படைகள் பெரும் ஆயுத பலத்துடன்  நிராயுதபாணியான அகதி முகாம்களைச் சூழ்ந்து நிற்க, PLO வின் ஜன்ம பகைவர்களான 'பஹ்லான்ஜிஸ்ட்' தீவிரவாத படையை முகாம்களில் நுழைந்து கொலை வெறிச் செயல்களை அரங்கேற்ற துணை நின்றார். 3,300 அப்பாவி பலஸ்தீனயர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் படு கோரமாக கொலை செய்யப்பட்ட நிகழ்வு அது. பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்ட சோக சம்பவங்கள் அவை. இந்த வரலாற்றுப் பூர்வமான சோக நிகழ்வுக்கு ஷரான் எந்தவிதமான பொறுப்பும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விசாரணை ஆணையம், 'கஹான் கமிஷன்' "அகதிகள் முகாமில் நடந்த படுகொலைகளை ஆபத்துக்களை தடுக்கத் தவறியதற்கும், புறக்கணித்ததற்கும் ஷரான்தான் தனிப்பட்ட முறையில் அதற்கான பொறுப்பேற்க வேண்டும்!" என்று தீர்ப்பளித்த கையோடு அவர் பணி விலகவும் பரிந்துரை செய்தது. இந்த கோர சம்பவம் தொடர்பாக உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பையும் ஷரான் பொருட்படுத்தாமல் பதவி விலகவும் மறுத்துவிட்டார். 1983-1984 வரை எந்தவித பொறுப்புகளும் இல்லாமல் இஸ்ரேலிய அரசில் அமைச்சராக நீடித்தார். 1984 லிருந்து 1992 வரையிலான ஷரானின் அரசியல் வாழ்க்கை பாதித்தாலும் இஸ்ரேலிய அரசின் முக்கியத்துவம் இல்லாத பணிகளில் தலைக்காட்டியவாறே இருந்தார்.


1999 தேர்தல்களில் 'லிகியூட்' கட்சி தோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் வளர்ச்சிக்கு உதவும்வகையில் பெஞ்சமின் தெதன்யாகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்.28, 2000 பலஸ்தீனியர்களிடையே 'இரண்டாம் இன்திபாதாஹ்' வெடித்துக் கிளம்பிய நேரத்தில், ஷரான் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும்விதமாக நடந்து கொண்டார்.

திடீரென்று பலஸ்தீனத்தின் ஹராம் அல் ஷெரீப் புனித தலத்துக்கு பயணம் மேற்கொண்ட ஷரான் "அந்த புனித தலம் அமைந்திருக்கும் இடம் இன்னும் இஸ்ரேலியரின் கட்டுப்பாட்டிலேயேதான் உள்ளது!" - என்று அறிக்கை விட்டார். அடுத்த 6 மாதங்களில் அதாவது பிப். 2001 நடந்த தேர்தல்களில் மொத்த அரசியல் அதிகாரத்தையும் அவர் கைப்பற்றினார். 

பலஸ்தீனியரிடமிருந்து கைப்பற்றிக் கொண்ட மேற்கு கரையின் பகுதிகளில் யூத குடியிருப்புகளை உருவாக்கியதோடு, உலகின் எதிர்ப்பையும் மீறி இனவாத தடுப்புச் சுவரையும் ஷரான் பிரதமராக இருந்த காலத்தில்தான் நடந்தது. அவரது பல்வேறு ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள், யூத இன தீவிரவாதிகள் நிறைந்த 'லிகியூட்' கட்சிக்குள்ளேயே அந்நியராக்கி, தனிமைப்படுத்தின. 2005 கட்சியிலிருந்து விலகி ''காதிமா கட்சியை'' துவங்கச் செய்தன.

2005ல் ஷரான் நெஞ்சு வலி தாக்குதலுக்கு ஆளானார். அடுத்ததாக 2006ல் ஏற்பட்ட தீவிரமான நெஞ்சுவலியால் கோமாவுக்கு தள்ளப்பட்டு நினைவு திரும்பாமலேயே மரணமுற்றார்.


இதற்கு முந்தைய மற்றும் நடப்பு காலத்திலும், சியோனிஸ ஆட்சியாளர்கள் இஸ்ரேலின் 'கள்ளத்தனமான' உதயத்திலிருந்து இதுவரையிலும் பல்வேறு இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் ஏரியல் ஷரான், வாழ்க்கை முழுவதும் கடுங்குற்றச் செயல்களின் தலைமைப் பொறுப்பாளராகவும், கொடுங்கொலையாளியாகவுமே வரலாறு பதிவு செய்துள்ளது. மேற்கு கரையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களை அவர்களின் தாய் மண்ணிலிருந்த பலவந்தமாக அப்புறப்படுத்தி சட்டவிரோதமான யூத குடியிருப்புகளை உருவாக்கியவர் ஏரியல் ஷரான். யுத்த வீரனாக, ஒரு கதாநாயகனாக இஸ்ரேலியர்களால் போற்றப்பட்டாலும், இஸ்ரேலுக்கு வெளியே உலக மக்களால் ஒரு மோசமான போர் குற்றவாளியாகவும், மனித இனத்துக்கு இழைத்த கொடுமையான குற்றங்களுக்கு  உலக போர் தீர்ப்பாயகத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைப் பெறாமலேயே மரணமுற்றார்.

Source: iviews.com






0 comments:

Post a Comment