NewsBlog

Sunday, December 23, 2012

''பேருந்து தயாரிப்பில் அமீரகம்!''



கனரகம் மற்றும் சொகுசு ரக கார் உற்பத்தியைத் தொடர்ந்து தற்போது பேருந்து சந்தையிலும் காலடி எடுத்துவைக்கிறது சவுதி!

சவுதியில் கல்வி நிலையங்களும், தனியார் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. கல்விச்சாலைகளிலிருந்து மாணவர்களையும், நிறுவனங்களிலிருந்து ஊழியர்களையும் அழைத்துக் செல்வதற்கான ஆண்டொன்றின் தேவை 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது! 

இத்தோடு  ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களுக்கான போக்குவரத்துத் தேவையும் பெருகிவருகிறது. 

இந்நிலையில் வாகன உற்பத்திக்கான முதலீட்டார்களும், வாகன டீலர்களும் இணைந்து இந்தத் தேவையை ஈடுசெய்ய ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

அண்மையில்தான், சவுதி அரேபியா 'ISUZU' கனரக வாகனங்கள் மற்றும் 'ஜாகுவார் லாண்ட் ரோவர்' ஆடம்பர கார்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டு அறிவிப்பு செய்தது. "தற்போதைய அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிப்பதாகவும், இதற்காக முதல் தர சர்வதேச அளவிலான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும்' - ஹாஜி  ஹீஸைன் அலி ஜெரா அண்ட் கோ லிட்., நிறுவனத் தலைவர் (HHA) 'அலி  ஹீஸைன் அலி ஜெரா' தெரிவிக்கிறார். 

சவுதியின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதன்மை நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'இதற்கான பூர்வாங்க பணிக்கான திட்டங்கள் துவங்கிவிட்டதாக'- தொடர்ந்து தெரிவிக்கிறார் அலி  ஹீஸைன் அலி ஜெரா.

கனரக வாகன உற்பத்திக்கான அசெம்பிளி பகுதியோடு இணைப்பாக பேருந்துகள் உற்பத்திக்கான அசெம்பிளியும் நிறுவப்படும்.

சவுதி சந்தையில் பேருந்துகளுக்கான ஆண்டுத் தேவை 30,000.  இந்த தேவையின் அளவு இன்னும் 10 ஆண்டுகளில் 60,000 ஐ தாண்டும். 

பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அத்தோடு மக்காவுக்கு வரும்  ஹாஜிகளுக்கான பேருந்து தேவையும் அதிகரித்து பேருந்து உற்பத்தியில் சவுதி தன்னிகரற்று விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!

SOURCE: ARAB NEWS

0 comments:

Post a Comment