NewsBlog

Saturday, December 29, 2012

''வாகன வீடுகள்!''



1. 'ஸ்கூல்'  பேருந்து வீடு:

அனுதினமும் மாணவர் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த பேருந்து இது. உட்புறம் அழகான மரவேலைப்பாடுகளால் ஆனது. 

சமையலறை, குளியலறை என்று ஏகத்துக்கும் வசதிகள் கொண்டது.



2. 1925 மாடல் வீடு:

"நம்ம சாம்பார் ஜெமினி கணேசன்-முத்துராமன் காலத்து வாகனமிது. 

'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனத்தால் 1925-இல், வடிவமைக்கப்பட்ட 'செவர்லெட்' இது. 

தற்போது வீடாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா..? உதவிக்கு வரலாமா..?"- என்று பாட மட்டும் வந்துடாதீங்க!



3. ரயில் வீடு:

வெளித் தோற்றத்தில் அழுக்கு ரயில் பெட்டி! உள்ளே நவீன வசதிகள் கொண்ட வீடு.



4. தாவர எண்ணெய்யால் ஓடும் வாகன வீடு:

எல்லாம் சூரிய சக்தி மயம்! வாஷிங்டன்வாசியான 'டேவ் வீவர்' தனது நண்பரொருவரின் உதவியுடன் பள்ளிப் பேருந்தை வீடாக மாற்றி அமைத்துள்ளார். 

எரிபொருள்: தாவர எண்ணெய்.!

நிறுத்துமிடம்: நண்பரின் புழக்கடை!



5.'ஜெட்' விமான வீடு:

1994-இல், வீசிய புயல் காற்றில் வீடு, வாசல்களை இழந்தவர் 'ஜான் உஸ்ஸேரி'. 

'மிஸ்ஸிசிப்பியின்' சிகை அலங்கார நிபுணரான இவரின் கைவண்ணத்தில் உருவான வீடு. 

2 ஆயிரம் டாலர் கொடுத்து 'காண்டினென்டல் ஏர்லைன்ஸ் 727' மாடல் விமானத்தை விலைக்கு வாங்கினார். 

தமக்கு பிடித்தாற்போல் வடிவமைத்துக் கொண்டார்.



6. குப்பை வண்டி வீடு:

இந்த வாகனத்தைத் தெருவில் பார்த்தால்.. மூக்கைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடுவார்கள்.  'குப்பை வண்டி!'

ஆனால், ஒரு குப்பை வண்டி என்ன அழகிய வீடாக மாறியிருக்கிறது என்று பாருங்களேன்!


 
7.ஆம்புலன்ஸ் வீடு:

பயப்பட வேண்டாம்! 

மருந்து வாசனை.. முதலுதவி சாதனங்கள்.. இரத்த காயங்கள் ஏதுமில்லாமல் 'பளபள'வென்றிருக்கும் ஆம்புலன்ஸ் வீடு.




8.கொஞ்சம் பேருந்து.. கொஞ்சம் டிரைலர்:

1994 மாடலான 'புளு பர்ட் 72' - பயணிகள் பேருந்து, வீடாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.



9. வேன் வீடு:

அவரது பெயர்: 'ஸ்டீவ்'', புனைப்பெயர்: 'வேன் கை'  (The Van Guy). 

"வாகனங்களை வீடாக மாற்றி அமைப்பது எப்படி?"-என்று இலவசமாக தன்னுடைய இணையத்தளத்தில் ஆலோசனை கூறுவதை ஒரு தொண்டாக செய்துவருபவர்.



10. காப்  ஹோட்டல்:

"டாக்ஸீ!"- என்று இனி அழைத்து பிரயோசனமில்லை!

லண்டன் மாநகரில் 2012-இல், கோடையில் நடைபெற்ற ஒலிம்பிக்குகளின் போது தனது டாக்ஸியை  ஹோட்டலாக மாற்றிவிட்டார் டாக்ஸி டிரைவர் டேவிட் வீக்ஸ். 

ஆம்.. நடமாடும்  ஹோட்டல் இது!

 Source: http://www.fropki.com/


-  அஹ்மதாபாத்திலிருந்து..

0 comments:

Post a Comment