NewsBlog

Monday, December 3, 2012

மக்கள் சேவையில் மகளிர் அணி!

பல்வேறு வயதுடைய 28 பெண்கள்! பல்துறைச் சார்ந்த பட்டதாரிகள்! இவர்கள் ஒன்றிணைந்து முதன் முதலில் மதீனாவில் ஒரு குழு அமைக்கப்பட்டது. மக்கள் சேவைக்கான மகளிர் அணி அது. 

மகளிரிடையே பாதுகாப்பு சம்ப்நதமான விழிப்புணர்வு இதன் தலையாயப் பணி. தேவைப்பட்டால் அவசரக் காலங்களில் விபத்துக்களின் போது மீட்புக் கழுவினரின் பின்புலம் நின்று செயல்படும்! அதிலும் குறிப்பாக, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடக்கும் விபத்துக்களின் போது துரிதமாக செயல்படும் அணியாக இருக்கும்.

"RABEE BENTH MUAWATH VOLUNTEERS GROUP' எனப்படும் எங்கள் குழுவில் பன்முக துறைச்சார்ந்த பெண்கள் உள்ளனர். டிப்ளாமோ, பட்டப் படிப்புகள், பிஹெச்டி போன்ற ஆய்வு படிப்புகள்வரை படித்த பெண்கள் அவர்கள் என்பது சிறப்புக்குரியது!"-என்கிறார் பெருமையுடன் குழுத்தலைவியான மனால் சலீம்.



"....நான்காண்டுகளுக்கு முன்பாகவே 12 பெண்களுடன் செம்பிறை பணிக்காக நியமிக்கப்பட்ட இவர்கள் எல்லாவிதமான அவசரக்கால முதலுதவி சிகிச்சைகளும்  தர வல்லவர்கள். தற்போது ஒருங்கிணைந்து மக்கள் பாதுகாப்புக்கான சேவைச் செய்ய முன்வந்துள்ளது குறிப்பிட்த்தக்கது."

"...இவர்கள் தற்போது மதீனாவில் நபிகளார் பள்ளியில் ஹஜ் பயணிகளுக்கான சேவையில் பணிக்கமர்த்த்ப்பட்டுள்ளார்கள். சர்வதேச மக்கள் பாதுகாப்பு நாளில் பெண்களைத் திரட்டி அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்."

"இக்குழு மக்கள் சேவைக்காக அனுப்பப்படுவதற்கு முன்பாக பல்வேறு சிறப்புப் பயிற்சிகளை அதற்கான நிபுணர்களிடம் பெற வேண்டும். பெண்களிடையே பாதுகாப்பு சம்பந்தமான விழப்புணர்வு ஊட்டி விபத்துகளைத் தடுப்பதும், எதிர்பாராமல் விபத்துக்கள் நிகழும்போது கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விளக்குவதுமே இக்குழுவின் தலையாய நோக்கம்!" - என்கிறார் சலீம்.

"...தங்களுடைய மக்கள் சேவைக்கான பணிக் காரணமாக இப்பெண்கள் குடும்பத்தாரிடையே நன்மதிப்பைப் பெற்று விளங்குகிறார்கள்!"- என்கிறார் பெருமையுடன் சலீம்.

"வெள்ளம்-புயல் மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கையின் சீற்றங்களின் போது ஏற்படும் நிலைமைகளைச் சமாளிக்க ஏதுவாக தகுந்த பயிற்சிகளைப் பெற தயாராக இருப்பதாக!" - மனால் சலீம் தொடர்ந்து சொல்கிறார்.

 மக்கள் பாதுகாப்புத் துறையின், திட்டம் மற்றும் பயிற்சிகள் குழுவின் இயக்குனர் 'கர்னல் மன்சூர் அல் தையார்' இல்லத்தரசிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றை குறிப்பிடுகிறார்.

அந்த அறிக்கையின் படி,
  •          46 விழுக்காடு பேர் விபத்துக்களைத் தடுப்பதற்கான எத்தகைய    பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருக்கவில்லை.
  •         36 விழுக்காடு பேர் விபத்துக்களின் போது செயல்படும் முறைகளைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள்.
  •         71 விழுக்காடு  பேர் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வைப் பெற தயாராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
பெண்கள் சம்பந்தமான மாற்றங்கள் தற்போது அரபு நாடுகளில் முறைப்படுத்தப்பட்டு வருவது அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிகோலும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

Source: Arab News

0 comments:

Post a Comment