பேஸ்புக்கில் பல குழுக்கள் அமைத்துக் கொண்டு அதில் கருத்து பறிமாற்றம் செய்வது வழக்கம்.
என் இளம் நண்பர் ஒருவர் எனக்கு தனது குழுவில் இணைந்துகொள்ள அழைப்பு அனுப்பியிருந்தார்.
உள்ளே நுழைந்தால்.. சங்பரிவாரின் ஒட்டு மொத்த வாரிசுகள் அந்தக் குழுவை குத்தகை எடுத்தது போன்ற ஒரு உணர்வு. வகுப்பு துவேஷிகளின் குடியிருப்புக்குள் நுழைந்தது போன்ற சங்கடம். ஓரிரு இடது சாரிகள்! நம் இளம் நண்பர் போல சிறுபான்மையினர் இன்னும் ஓரிருவர் கவுண்ட மணி -செந்தில் போல!.
ஒரு தலைப்பு எடுத்து விவாதிக்கும்போது, சங்பரிவாரின் பிரதிநிதி வெளிநாடு வாழ் இந்தியரிடமிருந்து ஒரு கணை பறக்கும். இந்தப்புறம் சென்னையிலிருந்து என்று .. மற்றொரு கணை.. நாலாபுறமும் நச்சுக்கருத்துக்களாய் சீறி வரும். உண்மையை சொல்ல வாய்த் திறந்தவர் தொலைந்தார். நச்சுக் கருத்துகள் கொட்டும்!
இத்தகைய ஒரு குழுவில் நமது இளம் நண்பர் ஒரு சூழலில் அளித்த பதிலின் முக்கியத்துவம் கருதி அதை மிஸ்டர் பாமரன் வாசகர்களுக்கு பகிர்கிறேன்.
பெருகிவரும் பாசிஸ உணர்வின் வெளிப்பாடு இது!
"திரு .... மற்றும் ..... (பெயர்களை நீக்கியிருக்கிறேன்) அவர்களின் கவனத்திற்கு.!
எல்லா விசயத்திலும் ஏன் கருத்து சொல்வதில்லை என கேட்கிறீர்கள்!
'அதுவும் முஸ்லிம்கள் ஏதாவது தவறு செய்யும் போது, நீங்களாகவே அதை இங்கே பதிவு செய்யலாமே! கருத்து சொல்லலாமே, கண்டிக்கலாமே என கேட்கிறீர்கள்.!'
முஸ்லிம்கள் தவறு செய்வதில்லையா.? செய்கிறார்கள். எல்லோரையும் போலவே.! இன்னும் முஸ்லிம்கள் செய்கிற சிறு தவறையும் உலக அளவில் விளம்பரப்படுத்த, அதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான காழ்ப்பு உணர்வை அதிகப்படுத்த சர்வதேச அளவிலும் தேசே அளவிலும் விளம்பரப்படுத்த பெரும் கூட்டம் தயாராகவே இருக்கிறது. நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை.
மலாலா விவகாரத்தை குறித்து கதறி கண்ணீர் விட்ட ...... (குழுவின் பெயர்) சொந்தங்கள், கொல்லப்படும் ஆயிரம் மலாலாக்களுக்காக வாய் கூட திறக்க சோம்பல்படுகிறது
என்பதை நான் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. அவரவர் மனசாட்சியே நன்கறியும்.
சமீபத்திய பர்மா கலவரம், அஸ்ஸாம் வன்முறைகள், காசா படுகொலைகள் குறித்து
செய்யப்பட பதிவுகளில் கண் பதித்து விட்டுப் போனோர் உங்களில் வெகு
சொற்பமானவர்களே.!
லுத்புல்லாவின் தருமபுரி விசிட் குறித்து செய்யப்பட்ட பதிவையும் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதற்கு நாமே சான்று.!
திரு .... மற்றும் .... (பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன) அவர்களின் கவனத்திற்கு.! சமீபத்தில் நீங்கள் கேட்டது ஷியா - சன்னி வன்முறைகளை பற்றி..
என்னைப் பொருத்தவரை மாற்று நாட்டவர் மீது, வேறு மொழி பேசுவோர் மீது, மாற்று மதம், இனம், கலாச்சாரம் கொண்டோர் மீது அல்லது மாற்றுக் கருத்து கொண்டோர் மீது என எந்த அடிப்படையில் ஒருவர் மீது
வன்முறையும் தாக்குதலும் அநியாயமாக தொடுக்கப்பட்டால் அது தவறானதே!
காதியானிகள் மீது வன்முறை நடத்தப்பட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே.!
ஆனால், காதியானிகள் விவகாரம் முஸ்லிம் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல..!
(இதை புரிந்து கொள்ள முதலில் காதியானிகளின் பின்னணியை தெரிந்து கொள்ள
வேண்டும்) - http://karuthulink.blogspot.in/2012/12/blog-post.html
இஸ்லாமிய சமூக மக்களிடையே உயர்வு தாழ்வு பார்க்கிற மனப்பாங்கு யாரிடம்
இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தை குறித்து சரியாக அறியாதவர்களே.!
ஆனால், அதே வேளையில் இரு மனிதர்க்கு இடையிலான , இரு கூட்டங்கள்,
குழுக்களுக்கு இடையிலான வன்முறைகள் உலகம முழுவதும் நாள்தோறும் நடைபெற்றே
வருகிறது. இது பொதுவானதுதான்.. அந்த அடிப்படையில் தான் மாற்றுக் கருத்து
கொண்டுள்ள தனது சமயம் சார்ந்த நபராக இருப்பினும் அவன் மீது வன்முறையை
பிரயோகிக்கிற அத்துமீறலை ஒருவன் செய்கிறான்.
உலகில் அப்படி
நடைபெறுகிற வன்முறைகள் முஸ்லிம் சமூகத்தில் மட்டுமே காணப்படுகிறது என
சொல்வதற்கில்லை. கூகுள் தளத்தில் தேட உங்கள் யாருக்கும் நான் சொல்லித்தர
வேண்டியதில்லை.
அநியாயங்களைக் கூட ஆதரிப்பதற்கு இங்கே பலர் வெட்கப்படுவதில்லை. ஆனால், எந்த அடிப்படையில் செய்யப்பட்ட, எந்த ஒரு அநியாயத்தையும் நான் இதுவரை ஆதரித்தது இல்லை.
தேவையற்ற இடங்களில் மவுனம் காப்பது இங்கே இருக்கிற எல்லோரும் செய்வதே.! அதில் விதி விலக்குகள் எவரும் இல்லை.! அப்படிப்பட்ட நிலைகளில் நான் உங்கள் அனைவரின் பாலிசியிலும் சேர்ந்து கொள்கிறேன்.
சொற்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றை கச்சிதமாக உபயோகிப்பவன் அந்த
சக்தியைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உபயோகிக்கத் தெரியாதவன்
எல்லாவற்றையும் தனக்கு பாதகமாக்கிக் கொள்கிறான். தவறாகப் பயன்படுத்தப்படும்
ஒரு சொல் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ பிரச்சினைகள் உருவாகக்
காரணமாகி விடுகின்றன. எனவே என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்பதை விட அதை
எப்படிச் சொல்கிறீர்கள் என்பது அதிக முக்கியமானது.
...... (குழுவின் பெயர்) மன்றம் ஒன்றும் பாராளுமன்றமல்ல.! இங்கே பேசினால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்பதற்கு.!
சமீபத்தில் நான் பதிந்த பல்வேறு பிரச்சனைகளில் கிண்டல் செய்தவர்களும், விஷத்தை கக்கியவர்களும் சிலர்.! அவற்றில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தவர்களே அதிகம்!
காரணம் என்ன.! தங்கள் நலன் சார்ந்த பிரச்சனை அல்ல அது என்பதே.!
இன்னும் பல பேருக்கு, மற்றவர்களின் பிரச்சனைகள் எள்ளி நகையாடவும், கிண்டல் செய்யவும் உரிய ஒரு கேலிப் பொருளாய் இங்கே.!
இங்கே ..... (குழுவின் பெயர்) மன்றத்தில் ஒவ்வொருவரும் பேசுவது மட்டும் தான் அவரவரின் சமூக செயல்பாடு என்ற அர்த்தம் இல்லை.! இதைத் தாண்டி , பலர் பல்வேறு பணிகளை செய்து கொண்டு இருக்கக் கூடும். சிலர் இங்கே மட்டுமே கருத்து சொல்லி விட்டு தன் சமூகப் போராட்டத்தில் தன் பணிகளில், பங்களிப்பில் திருப்தி அடைபவராக இருக்கலாம்.
இங்கே ஒருவர் அநியாயத்திற்காக வக்காலத்து வாங்குகிறார் என்றால் அது கண்டிக்க்கப்பட வேண்டியதே!
அதைத் தாண்டி ஒருவர் எல்லா விசயத்தை குறித்தும் பேச வேண்டும் என்றால், அந்த
அளவுகோலில் இங்கே ஒருவரும் மிஞ்ச மாட்டார் உங்கள் இருவரையும் சேர்த்து..!
....... (குழுவின் பெயர்) பேரறிவாளியாக, துணிச்சல் மிக்கவாரை போற்றப்படும் ....... (குழுவின் இடதுசாரி சிந்தனை கொண்ட பெண்மணி) கூட
இஸ்லாமியோபோபியாவின் பிரச்சாரத்தில் பாதிக்கப்பட்டு சமீபத்தில் ஸ்லீப்பர்
செல் குறித்து பதிவு செய்தார். (உபயம் :துப்பாக்கி திரைப்படம்).
நாள் தோறும் ஆயிரக்கணக்கான நிகழவுகள் நடக்கிறது. அவற்றை தனிப்பட்ட நபரோடு
தான் தொடர்பு படுத்துகிறீர்கள். ஆனால், எவையாவது முஸ்லிம் சார்ந்த விஷயம்
என்றால் அதை இஸ்லாத்தை நிந்தனை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
என்ன விந்தை!
எந்த ஒரு நபரின் உரிமை நசுக்கப்படும் போதும்,
அமைதியாக இருப்பதே, அவர்கள் வன்முறைக்கு திரும்ப காரணம். அப்போது 'குய்யோ
முறையோ' என கத்திப் பலனில்லை. கோவை குண்வெடிப்பைக் குறித்து நாள் முழுக்க
விவாதிக்க அறிவு இருக்கும் எவருக்கும் அதற்கு முன் நடந்த போலிஸ் துப்பாக்கி
சூடு குறித்தும், பதினெட்டு பேர் மரணம் குறித்தும் தெரிந்திருக்க
வாய்ப்பு குறைவு.
ஹிந்து முஸ்லிம் கலவரம் என்பது வெறும்
இந்துக்களோடும், முஸ்லிம்களோடும் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதாக நீங்கள்
நினைப்பீர்களானால் அது நம் குறுகிய பார்வையையே. ஹிந்துக்களோடு கலந்து விட்ட
ஹிந்துத்துவ வன்முறையாளர்களோடும், அதற்கு எதிர் வினை ஆற்றுகின்ற முஸ்லிம்
வன்முறையாளர்களோடும் சம்பந்தப்பட்ட விஷயம் தான் அது!
இதில்
வேடிக்கை பார்க்கிற, அமைதி காக்கிற நபர்கள் யாரும் அப்பாவிகள் அல்ல. ஒரு
தவறு முள் செடியாய் தளிர் விடும் போது அதை தடுக்க முயலாத யாரும், பின்னால்
அந்த முள் செடி வளரும் போது அதனால் பாதிக்கப்பட்டு அதற்காக மற்றவரை
குற்றம் சாட்ட எந்த வாய்ப்பும் இல்லாதவர்களே!
என்னைப் பொறுத்தவரை ........ (குழுவின் பெயர்) பங்கெடுப்பது என்பது நாம் ஒவ்வொருவரும் மற்றவரின் கருத்தை மாற்றி விட முடியும் என்பதற்காக அல்ல.!
நம்மை சுற்றி வாழ்கின்ற பல்வேறு சிந்தனைகளை, கொள்கைகளை கொண்டவர்களுடைய ஒரு சிறு குவியல் தான் இங்கே இருக்கும் நாம்.!
இங்கே நாம் விவாதிப்பதன் மூலம் பெரும் குவியலான மனிதர்களின் மன நிலையைக்
குறித்தும் சற்றே நாம் அறிவையும், அனுபவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்
என்பதற்காகவே.!
0 comments:
Post a Comment