NewsBlog

சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!

இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.

சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!

மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.

வடசென்னையில் சூரிய கிரணம்

21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.

காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?

சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.

Sunday, December 30, 2012

Saturday, December 29, 2012

''வாகன வீடுகள்!''



1. 'ஸ்கூல்'  பேருந்து வீடு:

அனுதினமும் மாணவர் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த பேருந்து இது. உட்புறம் அழகான மரவேலைப்பாடுகளால் ஆனது. 

சமையலறை, குளியலறை என்று ஏகத்துக்கும் வசதிகள் கொண்டது.



2. 1925 மாடல் வீடு:

"நம்ம சாம்பார் ஜெமினி கணேசன்-முத்துராமன் காலத்து வாகனமிது. 

'ஜெனரல் மோட்டார்ஸ்' நிறுவனத்தால் 1925-இல், வடிவமைக்கப்பட்ட 'செவர்லெட்' இது. 

தற்போது வீடாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா..? உதவிக்கு வரலாமா..?"- என்று பாட மட்டும் வந்துடாதீங்க!



3. ரயில் வீடு:

வெளித் தோற்றத்தில் அழுக்கு ரயில் பெட்டி! உள்ளே நவீன வசதிகள் கொண்ட வீடு.



4. தாவர எண்ணெய்யால் ஓடும் வாகன வீடு:

எல்லாம் சூரிய சக்தி மயம்! வாஷிங்டன்வாசியான 'டேவ் வீவர்' தனது நண்பரொருவரின் உதவியுடன் பள்ளிப் பேருந்தை வீடாக மாற்றி அமைத்துள்ளார். 

எரிபொருள்: தாவர எண்ணெய்.!

நிறுத்துமிடம்: நண்பரின் புழக்கடை!



5.'ஜெட்' விமான வீடு:

1994-இல், வீசிய புயல் காற்றில் வீடு, வாசல்களை இழந்தவர் 'ஜான் உஸ்ஸேரி'. 

'மிஸ்ஸிசிப்பியின்' சிகை அலங்கார நிபுணரான இவரின் கைவண்ணத்தில் உருவான வீடு. 

2 ஆயிரம் டாலர் கொடுத்து 'காண்டினென்டல் ஏர்லைன்ஸ் 727' மாடல் விமானத்தை விலைக்கு வாங்கினார். 

தமக்கு பிடித்தாற்போல் வடிவமைத்துக் கொண்டார்.



6. குப்பை வண்டி வீடு:

இந்த வாகனத்தைத் தெருவில் பார்த்தால்.. மூக்கைப் பொத்திக் கொண்டு காத தூரம் ஓடுவார்கள்.  'குப்பை வண்டி!'

ஆனால், ஒரு குப்பை வண்டி என்ன அழகிய வீடாக மாறியிருக்கிறது என்று பாருங்களேன்!


 
7.ஆம்புலன்ஸ் வீடு:

பயப்பட வேண்டாம்! 

மருந்து வாசனை.. முதலுதவி சாதனங்கள்.. இரத்த காயங்கள் ஏதுமில்லாமல் 'பளபள'வென்றிருக்கும் ஆம்புலன்ஸ் வீடு.




8.கொஞ்சம் பேருந்து.. கொஞ்சம் டிரைலர்:

1994 மாடலான 'புளு பர்ட் 72' - பயணிகள் பேருந்து, வீடாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.



9. வேன் வீடு:

அவரது பெயர்: 'ஸ்டீவ்'', புனைப்பெயர்: 'வேன் கை'  (The Van Guy). 

"வாகனங்களை வீடாக மாற்றி அமைப்பது எப்படி?"-என்று இலவசமாக தன்னுடைய இணையத்தளத்தில் ஆலோசனை கூறுவதை ஒரு தொண்டாக செய்துவருபவர்.



10. காப்  ஹோட்டல்:

"டாக்ஸீ!"- என்று இனி அழைத்து பிரயோசனமில்லை!

லண்டன் மாநகரில் 2012-இல், கோடையில் நடைபெற்ற ஒலிம்பிக்குகளின் போது தனது டாக்ஸியை  ஹோட்டலாக மாற்றிவிட்டார் டாக்ஸி டிரைவர் டேவிட் வீக்ஸ். 

ஆம்.. நடமாடும்  ஹோட்டல் இது!

 Source: http://www.fropki.com/


-  அஹ்மதாபாத்திலிருந்து..

Thursday, December 27, 2012

"அன்புள்ள மம்தா மேடத்துக்கு.."



அன்புள்ள மம்தா மேடத்துக்கு,

ஒரு ரயில் பயணியின் கடிதம். 

ஒரு துறைச் சார்ந்த கடிதம் இதுவானாலும், மத்திய அரசில் தாங்கள்தான் எல்லாம் சர்வமயம், இரும்பு மனுஷி என்பதாலும், நம் பிரதமர் சிங் அய்யா அவர்கள் வானத்திலிருந்து இடி விழுந்தாலும் எந்த பிரதிபலிப்பும் முகத்தில் காட்டாதவர் என்பதாலும் நான் இந்த கடிதத்தை தங்களுக்கு விலாசமிட்டு எழுதுகின்றேன். நீங்கள் எனக்கு ரூ.3206.00 தர வேண்டும். அதுவும் தங்கள் சொல்லுக்குக் கட்டுப்படும் (கட்டுப்படாவிட்டால்.. என்ன நடக்கும் என்பதற்கு தினேஷ் திரிவேதி ஐயாவே சாட்சி!) மத்திய இரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்ஸால் அய்யாவிடமிருந்து இந்தத் தொகையை தாங்கள் பெற்றுத் தர வேண்டும் என்ற உறுதி மொழியுடன்.. நம்பிக்கையுடன் இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பிக்கின்றேன்.

ஆண்டு தோறும் அலுவலக விடுமுறைக்காக சென்னையிலிருந்து நான் அஹ்மதாபாத் செல்வது வழக்கம். இம்முறை தாங்கள் மன்னிக்கவும் தங்களின் பிரதிநிதி மத்திய இரயில்வே அமைச்சர் பன்ஸால் அய்யா கொண்டு வந்த தக்கல் முறையால் பெரும் அவதிக்குள்ளானதுதான் மிச்சம். ஏற்கனவே முன்பதிவு செய்ய முடியாத காரணங்களால் மூன்று நாட்கள் நான் பல்வேறு நண்பர்கள் உறவினர்கள் மூலமாக கணினி (ஆன் லைன் மற்றும் நடுஇரவே சென்று வரிசையில் நின்று) மற்றும் நேரிடையாக வரிசையில் நின்றும் கிட்டதட்ட மூன்று நாட்கள் அவதிப்பட வேண்டி வந்தது. 

இந்த அவதியில் இரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டிருந்த பல்வேறு அரசு அடையாளங்களை கொடுத்திருந்தது ஒரு சிறு குழப்பமாகிவிட்டது. 

கடைசியில் ஒரு வழியாக மூன்று நாட்கள் தொடர் முயற்சியின் விளைவாக நடுஇரவில் உறவினர் ஒருவரை நிற்க வைத்து அவசர அவசரமாக பெற்ற பயணச்சீட்டு.. இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் என்று ஒரே குழுவாக ஒரு சீட்டு இரயில் ஏறப்போகும் அந்த கடைசி நிமிடத்தில் கையில் கிடைத்தது. இருந்த அனைத்து அடையாள அட்டைகளையும் அள்ளிப் போட்டுக்  கொண்டு குடும்பத்தாருடன் இரயிலும் ஏறிவிட்டோம்.

ரயில் புறப்பட்டதும் பூர்வாங்க சோதனைகள் டிக்கெட் பரிசோதகரால் செய்யப்பட்டு எங்கள் பயணம் S1 கோச்சில், 42,43,44 மற்றும் 45 இருக்கைகளில் (PNR No: 466-0147637 - Train No:12656-25.12.2012-Ticket No:82370243) ஒரு வழியாக தொடர்ந்தது. 



அது என்ன ஒரு வழி? என்று தாங்கள் கோபப்பட்டுவிட வேண்டாம். 

தாங்கள் கோபப்படப் போகிறீர்கள் என்றுதான் இதுவரையும் நான் பத்திரிகை உலகைச் சார்ந்தவன் என்று சொல்லவில்லை. அண்மைக் காலமாக நீங்கள் பத்திரிகையாளர்களை கடுமையாக எதிர்த்து வருவதும் எனக்குத் தெரியும். 

சரி நாம் விஷயத்துக்கு வருவோம். 

நான் பயணம் செய்த அந்த S1 கோச்சில் டாய்லெட்டுகளில் நீரே வரவில்லை. பிளக் பாயிண்டுகள் இருந்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைவரை செயல்படவில்லை. யார் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் அமர்ந்கொள்ளும் விதமாக ஒரு ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட் போலவே இருந்தது. இது சம்பந்தமாக டிடிஆர் மற்றும் அதற்கான பொறியியல் வல்லுநர்களிடம் புகார் செய்தும் யாரும் கண்டுக் கொள்ளவில்லை.



சரி.. இது எங்கள் தலைவிதி என்று நொந்து கொண்டே ஒரு இரவு பயணம் கழித்துவிட்ட நிலையில் வழியில் வந்தது பறக்கும் படை. 

சக பயணிகள் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் கேட்டுக் கொண்டே வர  நான் சும்மா இருக்கக் கூடாதா, "அய்யா யார் நீங்கள்? கொஞ்சம் உங்கள் அடையாள அட்டையைக் காட்டுகிறீர்களா?"- என்று கேட்டதுதான் தாமதம்.. 

அந்த பறக்கும் படை பரிசோதகர் என்னை மேலும் கீழும் பார்த்த பார்வையிலே "உன்னை வச்சுக்கிறேன் இரு!"- என்று கண்களாலேயே சொல்வது புரிந்தது. 

ஜல்காமுக்கு முன்னால்..  S.D.சவுக்கார் தலைமையில் வந்த பறக்கும் படையைச் சேர்ந்த அந்த நபர் என்னுடைய டிக்கெட்டை ஒரு எழுத்தும் விடாமல் பரிசோதனைச் செய்ய ஏதோ வம்பு என்று தெரிந்துவிட்டது. 

டிக்கெட்டில் இருந்த அடையாள எண்ணுக்குரிய அடையாள அட்டையைக் காட்டும்படி அவர் வற்புறுத்த என்னிடமிருந்த அத்தனை அடையாள அட்டைகளைக் காட்டியும் அவர் காட்டிய எண் பொருந்திப் போகவில்லை. 

இந்தப் பிரச்சினைக்கு நடுவே கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தப் போது டிக்கெட்டில் குறிப்பிட்டிருந்த எண் எங்கள் வீட்டு ரேஷன் காட்டின் என்பது தெரிந்தது.

ஏற்கனவே பரிசோதித்த டிக்கெட் பரிசோதகர் அதை குறிப்பிட்டிருந்தாலாவது சென்னைக்கு அருகிலேயே இறங்கி எங்கள் பயணத்தை ரத்தாவது செய்திருக்க முடியும்.

நடுவழியில் மொழி தெரியாத நபர்களிடம் பணயச் சீட்டு செல்லாது என்ற நிலையில் குழப்பம்தான் மிஞ்சியது. 



கடைசியில் பறக்கும் படை அதிகாரியை சந்தித்து நிலைமையை விளக்கியும் அவர் ஏற்றுக் கொள்வதாயில்லை. 

"நான்தான் இந்த பெயருக்குரியவன். ஒட்டப்பட்டிருக்கும் சார்ட்டில்கூட பெயர் இருப்பதைப் பாருங்கள்!"- என்று எடுத்துரைத்தும் அவர் அசர்வதாக காணோம். 

சட்டங்கள் நமக்காத்தான். சட்டங்களுக்காக நாமல்ல. இந்தச் சட்டங்கள் தலைக்கீழாக இருப்பதாகவே என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்!

கடைசியில் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த  ரூ.3206.00 அபராதமாகக் கட்டிவிட்டு (அபராத சீட்டு எண்: G232293) நான் பயணத்தைத் தொடர வேண்டியிருந்தது.



"ஏங்க வாய் வைச்சுகிட்டு சும்மா வரக்கூடாதா? நீங்க அந்தாள்கிட்ட அடையாள அட்டை கேட்டதாலே வந்த வினை இது!"

- இது என் அன்பு துணைவியின் அர்ச்சனை. எத்தனை வருஷம் தொடரும் என்பது தெரியவில்லை.

இத்தகைய சூழல்களில் குறிப்பிட்ட அடையாள அட்டையை காட்டத் தவறும்போது, அது டிக்கெட் இல்லாத பயணமாக கருதப்படும் என்று டிக்கெட்டில் அச்சிடப்பட்டிருக்கிறதே இது மோசடி கிடையாதா?

பணம் இருந்தது கட்டிவிட்டேன். பணமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது எங்கள் நிலை என்னாவது?

இது என்ன அபத்தமான சட்டம்! 

இந்த டிக்கெட்டில் எந்தவிதமான தில்லு முல்லு நடைப்பெறாத ஒரு சூழலில் ஒரு எண்ணுக்கான அடையாள அட்டை இல்லாதது குற்றமாக எப்படி கருதப்படும்?

ஒருவேளை அந்த எண்ணை கணிணியில் பதிவு செய்யும்போது, இரயில்வே ஊழியர் ஏதாவது தவறு செய்திருந்தால்கூட அது பயணிகளைப் பாதித்து விடுவதாகாதா?

இத்தகைய நிலைகளில் பிற அடையாள அட்டைகள் செல்லுபடியாகும் என்று ஏன் நிபந்தனைகளை தளர்த்தக் கூடாது?

இல்லை... 

"இருந்தால் பணத்தைக் கட்டிவிடுங்கள்! அல்லது பயணம் முடிந்ததும் ஒன்று அதற்கான அடையாள அட்டையைக் காட்டி பணத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்! அல்லது அபராதம் கட்டுங்கள்!"- என்று நிபந்தனைகளை தளர்த்தக் கூடாதா?

நடைமுறையில் உள்ள தக்கல் சட்டங்கள் பயணிகளுக்கு எதிரானவை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

மம்தா மேடம்,

"அன்றாடம் 2.30 கோடி பயணிகள் நம் இரயில்வேத் துறையைப் பயன்படுத்துகிறார்கள். நாள்தோறும் 36 லட்சம் சரக்குகள் சரக்குவண்டிகளில் கையாளப்படுகின்றன.

32 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில், 18 ஆயிரம் கேட்டுகளில் ஆட்களை நியமித்திருக்கிறார்கள். 14 ஆயிரம்  கேட்டுகளில் மேம்பாலம் அமைப்பதற்காக காத்திருக்கின்றன. இதற்கு மத்திய இரயில்வே அமைச்சகம் மாநில அரசுகளுக்கு 50 விழுக்காடு பங்களிப்புத் தர இருக்கிறது!"

இவை எல்லாம் அண்மையில் தங்கள் அன்புக்குரிய மத்திய இரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்ஸால் பத்திரிகையாளர் கூட்டத்தில் குறிப்பிட்டவை. 

நமது இரயில்வே அமைச்சர் மாநில அரசுகளுக்கு 50 விழுக்காடு பங்களிக்கட்டும் இன்னும் பல்வேறு சலுகைகள் செய்யட்டும். 

ஆனால், நான் அபராதமாக செலுத்திய ரூ.3206.00 ஐ திருப்பி செலுத்தும்படி தாங்கள் இரயில்வேத் துறையை வலியுறுத்த வேண்டும்.

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த ஆலோசனைகளை மக்களவையில் பயணிகள் பிரச்சினையாக கருதி அதில் மாற்றங்களைக் கொண்டுவர தாங்கள் உரத்துக் குரல் எழுப்ப வேண்டும். 

ஏசி அல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் அனைவருக்கும் எல்லா வசதிகளும், பாதுகாப்பும் அளிப்பது இரயில்வே துறையின் கட்டாயக் கடமை என்பதை தாங்கள் எங்களுக்காகப் பேசி உறுதிப்படுத்த வேண்டும். 

கடிதம் எழுத தங்களை நான் தேர்ந்தெடுத்தது தாங்கள் சாமான்யமானவர்களின் பிரச்சினைகளை எடுத்துப் போராடும் ஒரு போராளி என்று நான் கருதுவதால்தான்!

எனக்குச் சேர வேண்டிய ரூ.3206.00 கிடைக்காவிட்டால்.. நான் இறைவனிடம் மறுமையில் இது குறித்து கண்டிப்பாக முறையிடுவேன் என்பது மட்டும் நிச்சயம்!

பாதிக்கப்பட்டவனின் முறையீடுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தவொரு திரையும் இருக்காது என்று அண்ணல் நபிகளார் தெரிவித்துள்ளார்கள்.

இந்த கடிதம் நேரிடையாக தங்களுக்கு சேரலாம் அல்லது யார் மூலமாவது தங்கள் பார்வைக்கு வரலாம். அந்நிலையில் உடன் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

ஒரு சாமான்யப் பயணி!


- அஹ்மதாபாத்திலிருந்து...
 

Sunday, December 23, 2012

''பேருந்து தயாரிப்பில் அமீரகம்!''



கனரகம் மற்றும் சொகுசு ரக கார் உற்பத்தியைத் தொடர்ந்து தற்போது பேருந்து சந்தையிலும் காலடி எடுத்துவைக்கிறது சவுதி!

சவுதியில் கல்வி நிலையங்களும், தனியார் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. கல்விச்சாலைகளிலிருந்து மாணவர்களையும், நிறுவனங்களிலிருந்து ஊழியர்களையும் அழைத்துக் செல்வதற்கான ஆண்டொன்றின் தேவை 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது! 

இத்தோடு  ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரிகர்களுக்கான போக்குவரத்துத் தேவையும் பெருகிவருகிறது. 

இந்நிலையில் வாகன உற்பத்திக்கான முதலீட்டார்களும், வாகன டீலர்களும் இணைந்து இந்தத் தேவையை ஈடுசெய்ய ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

அண்மையில்தான், சவுதி அரேபியா 'ISUZU' கனரக வாகனங்கள் மற்றும் 'ஜாகுவார் லாண்ட் ரோவர்' ஆடம்பர கார்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டு அறிவிப்பு செய்தது. "தற்போதைய அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிப்பதாகவும், இதற்காக முதல் தர சர்வதேச அளவிலான நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும்' - ஹாஜி  ஹீஸைன் அலி ஜெரா அண்ட் கோ லிட்., நிறுவனத் தலைவர் (HHA) 'அலி  ஹீஸைன் அலி ஜெரா' தெரிவிக்கிறார். 

சவுதியின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முதன்மை நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'இதற்கான பூர்வாங்க பணிக்கான திட்டங்கள் துவங்கிவிட்டதாக'- தொடர்ந்து தெரிவிக்கிறார் அலி  ஹீஸைன் அலி ஜெரா.

கனரக வாகன உற்பத்திக்கான அசெம்பிளி பகுதியோடு இணைப்பாக பேருந்துகள் உற்பத்திக்கான அசெம்பிளியும் நிறுவப்படும்.

சவுதி சந்தையில் பேருந்துகளுக்கான ஆண்டுத் தேவை 30,000.  இந்த தேவையின் அளவு இன்னும் 10 ஆண்டுகளில் 60,000 ஐ தாண்டும். 

பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அத்தோடு மக்காவுக்கு வரும்  ஹாஜிகளுக்கான பேருந்து தேவையும் அதிகரித்து பேருந்து உற்பத்தியில் சவுதி தன்னிகரற்று விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!

SOURCE: ARAB NEWS

''பூவெல்லாம் புயலாகாது!''



நீயின்றி நானில்லை தாயே!
நான் சொல்வதை
செவித்தாழ்த்தி
கொஞ்சம்
கேளேன்!

கொடும் வனவிலங்குள்
உன்னைச் சுற்றி
என எச்சரித்தால்...
புள்ளிமான் நீ..
என்னுடல்
என்னுரிமை
என்கிறாய்!



வைரங்கள்..!
வைரடூரியங்கள்!
களவு போகும் என்றால்..
கள்ளர் கூட்டத்தை
நம்பி என்னை
பழமைவாதி
என்கிறாய்!




படைப்பியல் பாதிப்புகள்
உனக்கு மட்டுமே
வெளிப்படும்
அடையாளமென்றால்..
நீயோ கருக்கலைப்பு
எனதுரிமை
என்கிறாய்!



ராமர் இல்லாத ராஜ்ஜியத்தில்..
ராவணனின்றி ராமாயணமா?
இறையச்சமற்ற சமூகத்தில்..
அச்சமற்ற பெண்ணினமா?

பூவெல்லாம்
புயலாகாது!
பஞ்சாய் இருப்பதால்..
நித்தம்
எரிவது இனி
நீதான்!




Friday, December 21, 2012

''இளையவனே.. எழுந்து வா..!''



காட்டமான ..
புகை சூழந்த வளையங்களில்..
நிறம் நிறமான மது பானங்களில்..
போதை மயக்கங்களில் மூழ்கி..
இளமையை வீணடிக்கும் இளையவனே!

இருட்டிற்கு இனமாகி..
சதை ஈனர்களுக்கு விருந்தாகி..
நெருப்புக்கு இரையாகி அல்லல்படும் - உன்
சகோதரியின் விழிநீரை துடைத்து - அவளை
கரைச் சேர்க்க வா.. இளையவனே!



மானுடம் இங்கே
கந்தக நெடிகளில் அழிகிறது!
மனிதாபிமானமோ
இரத்தக் கரைசல்களில் கரைகிறது!
மனிதம் எங்கேயிருக்கிறது?
தெரியுமா..இளையவனே?
சேற்றிக்கும் கீழே புதைக்குழியில்..

நீதி-நேர்மைகள் மறைந்து
மனிதத் தன்மைகள் மடிந்து
சத்தியங்கள் வீழ்ந்து
அசத்தியங்கள் ஆர்ப்பரிக்கும்...
இருண்ட உலகில் நீயோ_
இலக்கில்லாமல் எங்கேயோ..
சொருகும் விழிகளின் மிதப்புகளில்
அல்லவா லயித்திருக்கிறாய்?

காலங்கள் உனக்காக
காத்திருக்கும்வரை நீ காத்திராமல்..
காலங்களை பற்றிப் பிடித்து..
வெல்லவா இளையவனே!
உலக சாம்ராஜ்யம்
உனக்காகவே காத்திருக்க..
நீ ஏன் கூனி குறுகிவிட்டாய்?
இருள் கிழித்து ஒளியேற்ற வா
இளையவனே!



நாடுகள், இனங்கள்
மொழிகள், மதங்கள் என்று
பி.... ரி.... ந்...... து
பிளவுப்பட்டிருக்கும்
ஆதிபிதாவின் மைந்தர்களை
சகோதரத்துவங்களால்
பாலம் அமைக்க வா..
இளையவனே!



இவ்வுலகின் அறியாமை காரிருள்
விலக்க.. எங்கும் சாந்தியும்-சமாதானமும் தவழ..
உன் இரட்சகன்
உனக்குக் காட்டிய நேரிய
வாழ்வியலைப் பின்பற்றி..
ராஜநடைபோடு இளையவனே!


அதோ !
அடிவானத்துக்கும் அப்பால்..
உன் இலக்கு உனக்காகவே காத்திருக்க..
இறந்த காலங்களை எட்டி உதைத்து..
நிகழ்காலங்களில் தூயவனாய் புகுந்து..
எதிர்காலம் ஒளிமயமாய் படைக்க..
விரைந்து.. வா..
என் இளையவனே!

- 'சின்னக்குயில்'

Tuesday, December 18, 2012

'ஹிஜ்ரத்' இல்லாத 'மதீனா'!, பகுதிகள் 1 - 3



'தீ' ஜுவாலைகளாகி அனல் கக்கிக் கொண்டிருந்தனர் மக்கத்து குறைஷிகள்! அவர்களால் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒவ்வொரு கணமும் மக்காவில் பெரும் மாறுதல் உண்டாகிக் கொண்டிருப்பதை அவர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. காலங்காலமாக தம் மதத்தை பின்பற்றி வாழ்ந்தோரெல்லாம் இப்போது அதைப் புறக்கணித்து புதிதாக வேறொரு மார்க்கத்திற்கு மாறிப் போவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

"பாட்டன் .. பூட்டன் காலத்திலிருந்து வழி வழியாக பின்பற்றி வந்த தஙகள் மரபுகள் மூடத்தனமானவையாமே!

"விக்கிர ஆராதனைகளை விட்டொழித்து ஒரே இறைவனுக்கு மட்டுமே சிரம் பணிய வேண்டுமாமே!"

"முஹம்மதை இறைவனுடைய தூதராக ஏற்றுக் கொண்டு அவர் போதிக்கும் மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமாமே!"

தங்கள் ஆச்சாரங்களையும், குலப்பெருமைகளையும் புறக்கணித்துவிட்டு ஒரே இறைவனை ஏற்றுக் கொள்ள முடியாமல் குறைஷிகள் அனலில் இட்ட புழுவாக துடித்தார்கள்; துவண்டார்கள்!

"முடியாது..! இதை விடக்கூடாது! இனியும் தாமதித்தோமானால்.. அரபு நாடு முழவதும் முஹம்மதின் புதிய மார்க்கத்தை தழுவிவிடக்கூடும்! அவரிடம் அப்படி என்னதான் மாயம் இருக்கிறதோ.. கேட்பவரெல்லாம்.. உடனே அவரின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்கிறார்களே..!" - வியப்பும் கோபமும் கொண்ட குறைஷித் தலைவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து சதி ஆலோசனை நடத்துகிறார்கள்.

 ஆலோசனையின் முடிவில், 

திறமையும், நுண்ணறிவும் கொண்ட 'உத்பா'வை தூதராக அண்ணலாரிடம் குறைஷிகள் அனுப்பி வைக்கிறார்கள். 

சாமார்த்தியம் வாய்ந்த உத்பாவோ அண்ணலாரை தம் வழிக்கு கொண்டு வர பல வகைகளிலும் முயற்சிக்கிறார்.

"என் அன்பு மகனே! நீர் ஏன் இச்செயலைப் புரிகிறீர்? எங்களுடைய தெய்வங்களை ஏன் ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணிக்கிறீர்? அவற்றை விடுத்து கண்ணுக்குப் புலப்படாத ... எவரும் பார்த்தறியாத.. ஒரு கடவுளைப் பற்றி ஏன் எடுத்துரைக்கிறீர்?

உம்முடைய இந்த அழைப்புக்கு நோக்கம் செல்வம்தான் என்றால்... அரபு நாட்டின் மொத்த செல்வக் குவியலையும், உம்முடைய காலடியில் கொட்டத் தயாராக இருக்கிறோம்!

அல்லது, குறைஷி குலத்தின் அழகியரில் மிகச் சிறந்த பெண்தான் உம்முடைய நோக்கம் என்றால்.. 

இந்த அரபு நாட்டிலேயே பேரழகு வாய்ந்த பெண்ணை உமக்கு மண முடித்துத் தருகிறோம்!

அல்லது, உம்முடைய நோக்கம் கண்ணியமும், மதிப்பும்தான் என்றால்..உம்மை எம் தலைவராக ஏற்றுக் கொள்ள சித்தமாக இருக்கிறோம்!

உமது நோக்கம்.. ஆட்சி அதிகாரம்தான் என்றால்...

வாருங்கள்..! உம்மை அரபு நாட்டின் மன்னராக்கி மகிழ்கிறோம்! 

அல்லது..." 

சிறிது தயங்கிய உத்பா.., ".... அல்லது உம்முடைய மூளையில்தான் ஏதாவது கோளாறு என்றால்.. அதற்காகவும் நாம் சிறந்த மருத்துவரிடம் உம்மைக் கொண்டு சென்று சிகிச்சைப் பெற ஏற்பாடு செய்கிறோம்!" - என்கிறார் குத்தலாக!

இறை உவப்பை பெறுவது மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்ட ஓர் இறை பக்தரின் பார்வையில் உலக சுகபோகங்களும், பள பளக்கும் செல்வங்களும், ஆதிக்க... அதிகாரங்களும்... நிலையற்ற இன்பங்களும் துச்சமே! இவற்றை துச்சமாகக் கருதும் இறைவனின் அடியாரை விலைக்கு வாங்கவே முடியாது! என்று பாவம் ..! உத்பா அறிந்திருக்கவில்லை.

 உத்பாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சாந்த சொரூபியான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மென்மையும், உறுதியும் வாய்ந்த குரலில் பதிலளித்தார்கள்:

"தங்களின் கருத்து ஏற்புடையதல்ல..! எனக்கு செல்வமோ, பெண்ணோ அரசு ஆதிக்கமோ தேவையில்லை. என் மூளையில் எவ்விதமான கோளாறும் இல்லை! நான் இறைவனின் சத்தியத்தை, அவனுடைய திருத்தூதைதான் கொண்டு வந்துள்ளேன். இதைப் பின்பற்றுவோருக்கு நற்செய்தியும், நிராகரிப்போருக்கு கடும் தண்டனைப் பற்றிய எச்சரிக்கையும் இதில் அடங்கியுள்ளது!"

தெள்ளத் தெளிவான.. திட்டவட்டமான.. எந்தவித நீக்குப் போக்குகள் இல்லாத.. நேரடியான பதிலை அழகிய வார்த்தைகளால்.. இறைவனின் திருத்தூதர் எடுத்து வைத்துவிடுகிறார்கள்.

கடைசியில், உத்பா தோல்வியுடன் திரும்பி செல்ல வேண்டியதாயிற்று!

தம் தூதில் தோல்வியுற்ற குறைஷிகள் மீண்டும் ஒன்று கூடி திட்டமிடுகிறார்கள். பின்பு அண்ணலாரின் பெரிய தந்தையான அபூதாலிபின் மூலமாக மிரட்டலை ஆரம்பிக்கிறார்கள்.

 "ஓ! அபூதாலிப்பே! எங்கள் மத்தியில் உம்முடைய நிலை மிகவும் உயர்வானதாகவும், கண்ணியத்திற் குரியதாகவும் உள்ளது. இதற்கு முன்னர்கூட உமது சகோதரரின் மகனை அடக்கும்படி எச்சரித்துள்ளோம்! ஆனால், அதை நீர் பொருட்படுத்தியதாகக் காணோம்! உமது சகோதரரின் மகனோ, தொடர்ந்து எமது மூதாதையரை இழிவுப்படுத்தும் விதமாக .. எமது குலப்பழக்க வழக்கங்களை கேவலப்படுத்தும் விதமாகவும், எங்கள் கடவுள்களை புறக்கணிக்கும் விதமாகவும் புதிய மார்க்கத்தை போதித்து வருகிறார். இனியும் இந்நிலையை நாங்கள் அனுமதிக்க முடியாது! இதை இனியும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது! இதனை அவர் உடனே கைவிட்டிட வேண்டும்! இல்லையெனில் நீங்கள் இருவரும் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்!! - என்று எச்சரித்துவிட்டு வெளியேறிவிடுகிறார்கள்.

 மிகவும் கவலையடைந்த அபூதாலிப் தம் சகோதரரின் மகனாரை உடனே அழைத்து வரச் செய்கிறார். நடந்ததை எல்லாம் தெரியப்படுத்திவிட்டு மிகவும் கவலையுடன் சொல்கிறார்:

"என்னுடைய சகோதரரின் மகனே! உம்மையும், என்னையும் காத்துக் கொள்ள வழி செய்வீராக! இதுவரை என் பாதுகாப்பு உமக்கு இருந்தது. நீர் தொடர்ந்து உமது அழைப்புப் பணியை நீடித்தால்.. அதனால்.. ஏற்படும் விளைவுகளுக்கு நீரே பொறுப்பாவீர். நன்றாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்!"

 தம் பெரிய தந்தையாரின் இக்கட்டான சூழலையும், அவர் தம் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பையும், உணர்ந்து கண்கலங்கிய அண்ணலார், 

"பெரிய தந்தையே! இந்த சிக்கலான சூழலைக் கண்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இறைவன் மீது ஆணையாக! இவர்கள் என் தூதை கைவிடச் சொல்லி.. என் வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும் கொண்டு வந்து வைத்தாலும்.. நான் இப்பணியிலிருந்து விலகப் போவதில்லை! இறைவாக்கில் ஓர் எழுத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ போவதில்லை! இந்த அழைப்புப் பணியில் என் உயிர் போவதாயினும சரியே!" - என்று வருத்தத்துடன் அங்கிருந்து எழுந்து செல்லலானார்கள்.

இதைக் கண்டு அபூதாலிப் அண்ணலாரை திரும்ப அழைத்துக் கூறினார்: 

"எனது சகோதரரின் மகனே! நீர் உம்முடைய கொள்கையிலேயே நிலையாக நில்லுங்கள்....!"

அண்ணலாரின் உறுதி குலையாத கொள்கையின் முன் குறைஷிகளின் திட்டம் மீணடும் தோல்வியுறுகிறது.




குறைஷிகள் தங்கள் திட்டம் தோல்வியடைந்ததைக் கண்டார்கள். 

நேரிடையான மோதலில் இறங்கினார்கள்.

இந்த தனிநபர் வார்த்தை பிரயோகங்களின்தான் எல்லா பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. தடித்த வார்த்தைகள்.. அதைத் தொடர்ந்து இனக்கலவரங்கள், சமயப்பூசல்கள் வரை இந்த வார்த்தைகள்தான் கொண்டு சேர்க்கின்றன. 

ஆனால். அண்ணல் நபிகளார் இவற்றை அழகிய முறையில் எதிர்கொள்கிறார்கள். 

"முஹம்மதே! 

"எம்மைச் சுற்றியுள்ள இம்மலைகள் அனைத்தையும், தரைமட்டமாக்கி... சிரியாவிலும், இராக்கிலும் உள்ளதைப் போல நதிகளை ஓடவிடச் செய்யும்படி உமதிறைவனிடம் கேளும்!"

"எங்களது முன்னோர்களில் சிலரை குறிப்பாக குஸையை மீண்டும் உயிர்ப்பிக்கச் சொல்லும்! உம் தூதைப்பற்றி அவரிடமே நாங்கள் கேட்டு தெளிவுப் பெறுகிறோம்!"

"இவைகளை எங்களுக்கு செய்துதர முடியாவிட்டாலும் பரவாயில்லை! உமக்காவது சில உதவிகளை இறைவனிடம் கேளும். 

உம்மிடம் ஒரு வானவரை அனுப்பி நீர் சொல்வதை உறுதிப்படுத்தியும், நாங்கள் சொல்வதைப் பிழையென காட்டும்படியும் உம் இறைவனிடம் கேளும்!"

"தோட்டங்கள், மாளிகைகள், தங்கம்-வெள்ளி முதலான செல்வங்களை தரும்படி கேளும். இதிலிருந்து உமது செல்வாக்கு உமதிறைவனிடம் எவ்வாறு உள்ளது  என்பதை நாங்கள் அறிந்து கொள்கிறோம்!"

இப்படி எல்லாம் நபிகளாரை குறைஷி இறை நிராகரிப்பாளர்கள் கிண்டலும், கேலியுமாய் பரிகாசம் செய்தனர்.

 அண்ணல் நபிகளார் (ஸல்) மிகவும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.  இந்த பரிகாசங்களுக்கு பொறுமையாகவே பதிலளித்தார்கள். உணர்ச்சிப்பூர்வமான எந்த ஒரு நடவடிக்கைகளையும் அவர்கள் பிரதிபலிக்கவில்லை. இப்படி சொன்னார்கள்:

"இப்படிப்பட்ட விஷயங்களை நான் இறைவனிடம் கேட்கக்கூடிய வனுமல்ல. நான் அதற்காக அனுப்பப்பட்டவனுமல்ல. அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவும், நன்மாராயங் கூறுபவனுமாகவே இறைவன் என்னை அனுப்பியுள்ளான்!"

கொதித்தெழுந்த குறைஷிகள், "ஓ! முஹம்மதே! நாங்கள் உம்மை  நிம்மதியாக இருக்க விடமாட்டோம்! உம்மை நாங்கள் அழிக்கும்வரை .. அல்லது நீர் எங்களை அழிக்கும்வரை ஓயமாட்டோம்!"- என்று சூளுரைத்தார்கள். 

இவை எல்லாம்,

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாத்தின் திருச்செய்தியை மக்களுக்கு எடுத்த வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதை பொறுத்துக் கொள்ள முடியாத இறை நிராகரிப்பாளர்களான குறைஷிகள் இறைத்தூதரையும், அவர்களது திருச்செய்தியையும் கடுமையாக எதிர்த்ததை விளக்கும் வரலாற்றுச் சம்பவங்கள். 

மக்காவின் மண்ணில் பிறந்து ...

அப்பாலையின் காற்றைச் சுவாசித்து...

தம் வியர்வையை அம்மண்ணிலேயே சிந்தி உழைத்து.. வாழ்ந்தவர்கள்.. 

சத்தியத்தை ஏற்று ...

அதை பிரகடனப் படுத்திய ஒரே காரணத்துக்காக..

அண்ணலார் பட்ட துன்பங்கள் வார்த்தைகளால் வடிக்க முடியாத துன்பக் காவியங்கள்.

இறைவனின் திருச்செய்தியை சமர்பித்து நல்லொழுக்க அடிப்படையில் ஒரு சமூகம் கட்டமைப்பதற்கான அண்ணலாரின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசுகள்... சித்திரவதைகள், சமூக விலக்குகள், அடக்குமுறைகள் என விதம் விதமாக நீளும் பட்டியல் அது.

சுற்றமும், நட்பும், ஒட்டு மொத்த சமூகமும் பகையாகி நின்றபோது, 

அண்ணல் நபிகளார் (ஸல்) சத்தியத்தையும், பொறுமையையும் மட்டும் ஆயுதங்களாகிக் கொண்டார்கள். ஓராண்டல்ல.. ஈராண்டல்ல பதிமூன்றாண்டுகள் தாய் மண்ணில் மௌன யுத்தம் நடத்தினார்கள்.

இந்தக் காலக்கட்டத்தில் ஒரே ஒரு முறைதான் இறை நிராகரிப்பாளன் ஒருவனை முஸ்லிம்களில் ஒருவர் ஒட்டகத்தின் தாடை எலும்பைக் கொண்டு தாக்கி காயப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது.

பகுதி - 3



மக்காவின் 13 ஆண்டுகளும், அண்ணலாரும் அவரைப் பின்பற்றி வாழ்ந்த முஸ்லிம்களும் குறைஷிகளின் கொடுமைகளுக்கு நித்தம் ஆளாகி இரத்தம் சிந்திக் கொண்டேதானிருந்தார்கள். 

இறைநெறியான இஸ்லாத்தை ஏற்று அதன்படி அமைதியாக வாழ முயன்ற முஸ்லிம்களுக்குக் கிடைத்தது கொடுமைகளும், உயிர்-இழப்புகளும்தான்! ஆனால், அவர்கள் அந்நிலையிலும், பொறுமை என்ற பூரண கவசத்தை அணிந்துதான் மௌனமான ஒரு 'விடியல் யுத்தம்' புரிந்தார்கள். சத்தியத்தைக் கட்டிக் காத்தார்கள்.

"அவர்கள் கூறுவதை சகித்துக் கொண்டு கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி இரும்..!" (73:10)

"மேலும், இந்நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளியும் (அதிகமாய்) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளியும்!" (86:17)

- என்ற திருமறையின் கட்டளைப்படி அவர்கள் வாழ்ந்தார்கள்.

குறைஷிகளின் கொடுமையின் உச்சக்கட்டத்தில்தான்...

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைக்கட்டளைப்படி மக்காவைவிட்டு  ஹிஜ்ரத் செய்கிறார்கள். பிறந்த மண்ணையும், சொந்த - பந்தங்களையும், சொத்து - சுகங்களையும் விட்டு விட்டு தாயகம் துறந்து அந்நிய நாடான மதீனாவுக்கு செல்கிறார்கள்.

இந்த  ஹிஜ்ரத்தை நினைவுறுத்த இதோ!  ஹிஜ்ரியும் பிறந்துவிட்டது. இப்புத்தாண்டின் பிறப்புக்குப் பின்னால் புதைந்திருக்கும் வரலாற்றுப் படிப்பினைகள் ஏராளம்!

இன்றும், இந்தியாவின் ஒவ்வொரு விடியலும், அதன் ஏதாவது ஒரு மூலையில், ஒரு மக்கா உயிர் பெறுகிறது! முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. நாள்தோறும் அவர்களின் உயிர், உடமைகள் சூறையாடப்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. அவர்களின் மானம் - மரியாதை உரசிப் பார்க்கப்பட்டவாறு மக்காவின் கொடுமைகள் தொடர்கின்றன. முஸ்லிம்களின் சொத்துக்கள் திட்டமிட்டு சூறையாடப்படுகின்றன. அவர்களின் பொருளாதார முதுகெலும்புகள் முறிக்கப்படுகின்றன. ஒரு துல்லியமான திட்டமிட்ட அஜெண்டாவின் அரங்கேற்றங்கள் இவை! மக்கத்து குறைஷிகளின் அதே அடக்குமுறைகள் மீண்டும் நவீன காலத்தில் தொடர்கிறது!

1434 ஆண்டுகளுக்கு முன்னர் சத்தியத்துக்கு எதிராக அதை நசுக்கிட.. அந்த மாபெரும் ஜோதியை ஊதி அணைத்திட அசத்தியங்கள் ஒன்றுபட்டு கிளர்ந்தெழுந்ததைப் போலவே இன்றும்_

இந்திய உபகண்டத்தில் மக்கத்து இறைநிராகரிப்பு குறைஷிகளின் குணாம்சத்தில் சங்பரிவார் சக்திகள் மற்றும் அதன் துணை பரிவாரங்கள் .. இந்து தீவிரவாத அமைப்புகள் கைக்கோர்த்துக் கொண்டு பணியாற்றுகின்றன.

ஆள்பலம், அதிகார பலம், பொருளாதார பலம் இவற்றுக்கும் மேலாக உத்பாக்களைக் போன்ற ஊடக பலம் என்று சர்வ சக்தியுடன் இஸ்லாத்துக்கு எதிரணியில் நிற்கின்றன. முஸ்லிம்களை நசுக்கிட .. அவர்களை வேறுடன் கிள்ளி எறிந்திட  துடிதுடித்து அணிவகுத்துள்ளன.

 தங்கள் தாயகத்தில் அமைதியாக வாழ முயலும் முஸ்லிம்களை எரிச்சலூட்டி.. வலிய வன்முறையைத் தூண்டும் செயலில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். முஸ்லிம்களை பேரத்தின் மூலமும், அச்சுறுத்தல்களின் மூலமும் வென்றுவிட கனவு கோட்டைகளை விண்ணளாவ இவர்கள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்து தீவிரவாதிகளான இவர்கள் இந்திய உபகண்டத்தின் ஊர்தோறும் மக்களின் உள்ளங்களில் நச்சு விதைகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள். பகைமைத் துவேஷங்களை தூவிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில், முஸ்லிம்கள் அன்று போல இன்றும் கடைப்பிடிக்க வேண்டியது பொறுமையைத்தான்! உணர்ச்சிவசப்பட்டு விட்டில் பூச்சிகளாய்  மாறும் நிலைமையைத் தவிர்த்தேயாக வேண்டும்.

1434 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியத்தின் அழைப்புக் கேட்டதும், உடல் - பொருள் - ஆவி அத்தனையையும் துச்சமாக மதித்து தாங்கள் ஏற்றுக் கொண்ட கொள்கையை கட்டிக் காக்க தயாராக முன் வந்த துடிப்புள்ள நபித் தோழர் பிலால்கள், கப்பாப்கள் (இவர்கள் அனைவர் மீதும் இறையருள் பொழிவதாக!) அதே துடிப்புடன் இன்றும் இந்திய உபகண்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமூக அடக்குமுறைக்கு எதிரான விடுதலை வேட்கையுடன் அவர்களின் தேடல்கள் தொடர்கிறது. ஆனால், ஒரே ஒரு வித்யாசம்! இவர்கள் இங்கு வேறு வேறு பெயர்களுடன் வேறொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமே அந்த வேறுபாடாகும். சத்தியத்திற்கான இவர்களின் தேடலுக்கும், சமூக விடுதலைக்கும் வழிகாட்ட வேண்டியது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாய கடமையாகும்.

மக்கத்து இறைநிராகரிப்பாளர் போலவே நமது நாட்டிலும் அதே சாயல்களுடன் வேறொரு பெயரில் சங்பரிவார் இந்து தீவிரவாதிகள்!

 இஸ்லாத்தை செயல்படுத்திக் காட்ட அதைப் பின்பற்றி வாழ அன்று போலவே இன்றும் போல ஒரு தியாகக் கூட்டம்!

ஆனால், 1434 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அந்த கொள்கையின் உயிர் துடிப்பு, இப்போது துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்திடம் இல்லாதது வருந்தத்தக்கது. இந்த தேக்க நிலையிலிருந்து மீண்டு முஸ்லிம் சமூகம் முழுமையான செயல்வடிவ முஸ்லிம்களாக மாற வேண்டும். திருக்குர்ஆனயும், திருநபிகளாரின் வழிமுறைகளையும் முழுக்க .. முழுக்க செயல்படுத்திக் காட்ட .. சொல்லாலும் செயலாலும் செயல்படுத்திக் காட்ட முன்வர வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின் இந்த வாழ்வியல் முறைமை, 

"... (நபியே!) பொறுமையாக இருங்கள்; அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. நம்பிக்கைக் கொள்ளாதோர் உம்மை அலட்சியத்துக்குரியவராக .. மதிப்பற்றவராக காணக்கூடாது!" ( 30:60) 

- என்ற இறைக்கட்டளைக் கேற்ப முன்னுதாரணமான வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தின் இந்த வாழ்வியல் முறைமை,

"வலது கையில் சூரியனையும், இடது கையில் சந்திரனையும்  கொடுத்தாலும் என் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டேன்!" - என்ற அண்ணலாரின் தளராத கொள்கைப் பிடிப்புள்ளதாக இருக்க வேண்டும். 

இதுதான்  ஹிஜ்ரி புத்தாண்டும் நம்மிடம் வேண்டுவதாகும்!

முஸ்லிம் சமூகம் இத்தகைய கொள்கைப் பிடிப்புடன் .. குணாம்சங்களுடன், செயலுருவ சிப்பாய்களாக வாழ முன்வருவார்களேயானால்..........   இன்ஷா அல்லாஹ் இந்திய உபகண்டம்  ஹிஜ்ரத் இல்லாத மதீனாகிவிடும்! இறைவன் அதை நிச்சயம் உருவாக்கித் தருவான்!

தில்லி பயங்கரம்: 'கால் நூற்றாண்டாயினும், மாறாத பாதக செயல்கள்'!



தில்லியில் ஓடும் பஸ்ஸில் பலாத்காரம்! மக்களவையில் சுஷ்மா ஆவேசம்!! கண்ணீர்விட்டு அழுத ஜெயா பச்சன்!!!

ஒரு படுபாதக செயல் குறித்து இன்று காரசாரமாக மக்களிடையே விவாதங்கள், அனலுரைகள், சட்ட ஆலோசனைகள் என்று எங்கும் ஆவேசங்கள்! 

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தில்லியில் இத்தகைய ஒரு படுபாதகச் செயல் நடந்தது. அதை கண்டித்து மணிச்சுடர் நாளேட்டில் 14.10.1988 'அபாபீல்' என்ற புனைப் பெயரில் நான் எழுதிய கட்டுரையை மிஸ்டர் பாமரன் வாசகர்களுக்காக மீண்டும் தருகிறேன். 

ஒரு துரும்பளவாவது நமது சமூக ஒழுக்கம் மேம்பட்டிருந்தால்... அதற்கான முயற்சிகளை நமது ஆட்சியாளர்கள் அன்று மேற்கொண்டிருந்தால்.. நமது சமூக நலன் விரும்பிகள் நற்சமூகம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டிருந்தால்.. இந்நிலையை தவிர்த்திருக்க முடியும். 

நதிகளை, மலைகளை புனிதமாக்கிய நாம் மனிதர்களை மதிக்க மறந்ததேன். அதிலும் குறிப்பாக மனுஷிகளை புனிதப்படுத்த தவறுவதேன்?

 தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவியான மோனிஷா வர்மா பகல் 11.00 மணிக்கு டிடிசி (தில்லி மாநகர போக்குவரத்துக் கழகம்) பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். 

ள்ளே ஐந்து பேருந்து ழியர்கள் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு கண்களில் வெறித்தனத்துடன் பார்வையை மோனிஷாவின் மீது வீச அவள் சங்கடத்தில் நெளிந்தாள். பேருந்திலோ அவளைத் தவிர வேறு பயணிகள் இல்லை. 

பேருந்து ஊழியர்களின் கிண்டலும்- கேலியும் அவளின் இதயத்துடிப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. 


சிறிது நேரத்தில் அவர்கள் அவளைத் தொட்டு சீண்ட ஆரம்பித்ததும், இனியும் பொறுத்தால்.. பேராபத்து என மூளை எச்சரிக்க இறங்கும் வழி நோக்கி மோனிஷா ஓடினாள். 

பேருந்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. 

னால், மோனிஷா தன்னை இறங்க விடாமல் வழிமறித்த ஒரு காமுகனையும் இழுத்துக் கொண்டு ஓடும் பேருந்திலிருந்து குதித்தே விட்டாள். பாத எலும்பு முறிந்தும்கூட அவள் துவண்டவிடவில்லை. நேராக ரிக்‌ஷாவில் ஏறி கல்லூரியை அடைந்தாள். அடுத்த சில மணி நேரத்தில் காட்டுத் தீயாய் செய்தி தலைநகர் முழுவதும் பரவியது.

குற்றத் தடுப்பு போலீசார் மூன்று படை பிரிவுகளை அமைத்து தில்லி முழுவதும் சல்லடைப்போட்டு குற்றவாளிகளைத் தேடினர்.

தில்லி மாநகர பேருந்து கழகமோ தன்னுடைய 40 ஆயிரம் ஊழியர்களில் ஒவவொருவரையும் துருவி.. துருவி.. விசாரித்தது.

அடுத்த நாள் மாலை.

ஓட்டுநர் ஜெயசந்தும், நடத்துனர் ரோஹ்தாஸ் சிங்கும் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

"நாங்கள் இந்த நிகழ்ச்சியால்.. தலைகுனிவிற்கு ஆளாகியிருக் கிறோம். இந்த பாதகர்கள் தூக்கிலிடபட வேண்டியவர்கள்"- என்று டிடிசியின் தலைவர் எஸ்.சி.வைஷ் மனம் வெதும்பி வருத்தப்பட்டார்.

மாணவர்களின் மிக பிரமாண்டமான ஊர்வலங்கள் நடந்தன. டிடிசி ஊழியர்கள் பெயர் வில்லைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அவர்களுக்கு பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள் குறித்து பயிற்சிகள் அளிக்க வேண்டும்  என்ற வலுவான கோரிக்கைகள் எழுந்தன.

மக்களவையிலும் இந்த சம்பவம் சூடான விவாதமானது.

நமது தலைநகரான தில்லியில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன.

வரதட்சணை மரணங்களும், சிறுமிகள் கற்பழிப்புகளும் நாட்டிலேயே அதிகமாக தில்லியில்தான் நடக்கின்றன.

 மோனிஷாவின் சம்பவத்தின் மூலமாக அரசின் கவனம் இத்தகைய குற்றத் தடுப்பு விவகாரங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

டிடிசியும் தன் பங்குக்கு குற்றவாளிகளான ஜெய்சந்தையும், ரோஹ்தாஸ் சிங்கையும் வேலை நீக்கம் செய்துவிடுவதாகவும், அதிகளவில் பிரத்யேக மகளிர் பேருந்துகளை விடுவதாகவும், இன்னும் அதிகமான பெண் நடத்துநர்களை வேலைக்கமர்த்துவதாகவும் உறுதியளித்துள்து.

மொத்தத்தில், இன்று நாட்டில் பட்டப்பகலிலேயே பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதையும், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழல் உருவாகி வருவதையும் இச்சம்பவம் தெளிவுபடுத்துகிறது.

நடந்துள்ள நிகழ்வு கொடியதுதான் மறுப்பதற்கில்லை! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.. உண்மை! ஆனால், மீண்டும் மோனிஷாவிற்கு உண்டான நிலைமை மற்றவர்களுக்கு உண்டாமலிருக்கக் கூடிய நிரந்திர தீர்வுகளையல்லவா நாம் உருவாக்கி இருக்க வேண்டும்?

மோனிஷா கல்லூரி மாணவியாக இருந்ததாலும், துணிச்சல் மிக்க பெண்ணாக இருந்ததாலும் ஒரு பேராபத்திலிருந்து தப்பித்துக் கொண்டாள். இத்தகைய சமூகத் தீமைகள் மீண்டும் நடைபெறா என்பதற்கு என்ன உத்திரவாதம்? இந்த தீர்வுகள் எப்படி தீமைகளைக் களைய பயன்படப்போகின்றன? இதற்கு நிரந்தர தீர்வல்லவா காண வேண்டும்?

பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் எப்போதும் நடக்கா வண்ணம் வேறுடன் களைவதல்லவா புத்திசாலித்தனம்!

அதிகமான மகளிர் ஸ்பெஷல் பேருந்துகளை இயக்குவதாலும், அதிகமான பெண் நடத்துநர்களை பணிக்கமர்த்திக் கொள்வதாலும் இத்தகைய குற்றங்கள் எப்படி குறையப் போகின்றன?

உண்மையில், இத்தகைய படுபாதக செயல்கள் நடைபெறுவதற்கு என்ன காரணம்?

நாகரீகம் என்ற போர்வையில் அணியப்படும் அரைநிர்வாண உடைகள், சமத்துவம் என்ற தவறான பொருளை பிரதிபலிக்கும் அடக்கமற்ற தன்மைகள், திரும்பும் இடமெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், மனதை கெடுக்கும் திரைப்படங்கள், மூளையை மயக்கி அடிமைப்படுத்தும் போதை வஸ்துக்கள், மது பான வகைகள், ஆணையும், பெண்ணையும் ஒரு சேர நெருக்கிக் கொண்டிருக்கும் சமூக அமைப்பு இப்படி ஓராயிரம் காரணங்கள் இந்த சமூக தீமைக்கு சாதகமாக இருக்கின்றன.

படைப்பிலேயே ஆணும்-பெண்ணும் தனித்தனி தன்மை கொண்டவர்கள். இது ஒரு பொதுவான நியதி. இருசாரருக்கும் பொருந்தக்கூடியது.

பெண்ணுக்கு சமுதாயத்தில் உயர்வான அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். பெண்களை எக்காரணம்  கொண்டும் கேளிக்கைப் பொருளாக்கக்கூடாது!  பெண்களுக்கு கண்ணியமளித்து அவளைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பால் மட்டுமே மோனிஷாக்களுக்கு கண்ணியம் ஏற்படும்.

இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது. கண்ணியத்தோடு வாழ அழைக்கிறது.

நன்றி: மணிச்சுடர் நாளேடு - 14.10.1988