'என்
தோல் வெள்ளையாக இருந்திருந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக இருந்திருப்பேன்'
என்று மனம் நொந்து அந்நாட்டு முன்னாள் கால் பந்து வீரர் சோல் கேம்ப்பெல்
தெரிவித்திருக்கிறார்.
கேம்ப்பெல், 2012-ம், ஆண்டு சர்வதேச கால்பந்து ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்ற 73 ஆட்டங்களில் அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர் என்பத குறிப்பிடத்தக்கது.
1998-ல், பெல்ஜியம் மற்றும் செக் குடியரசுக்கு எதிரான ஆட்டத்திலும், 2005-ல், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் இங்கிலாந்து அணியின் காப்டனாக இருந்தார். இந்த மூன்று ஆட்டங்களும் நட்பு ரீதியான ஆட்டங்கள்.
தேசிய அணியின் கேப்டனாக செயல்பட நினைத்த தன் கனவு நிறைவேறாதது குறித்து தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் அவர் இப்படி சொல்கிறார்:
"கிளப் அணிகளில் கேப்டனாக இருந்ததால் தேசிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவேன் என நினைத்தேன். ஆனால், கடைசிவரை நியமிக்கப்படவில்லை. இதற்கான காரணம் என்னவென்று எனக்கு நானே பலமுறை கேள்வி எழுப்பிக் கொண்டேன். தோல் நிறம்தான் பிரச்னை என்று பிறகு தெரிந்து கொண்டேன்.
என் தோல் மட்டும் வெள்ளையாக இருந்திருந்தால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்திருப்பேன். பெரும்பாலான இங்கிலாந்து ரசிகளர்கள் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கேப்டனாக செயல்படுவதை விரும்ப மாட்டார்கள் என்று கால்பந்து சங்கம் நினைத்து விட்டது" - என கேம்ப்பெல் குறிப்பிட்டுள்ளார்.
கேம்ப்பெல் ஏற்கனவே செப்.27, 2013-ல், 'தி கார்டியனுக்கு' அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. (http://www.theguardian.com/football/2013/sep/27/sol-campbell-racism-england-manager}
கேம்ப்பெல் காலத்தில் கால்பந்து சங்கத்தின் இயக்குனராக இருந்த டேவிட் டேவிஸ் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும் அந்தக் காலக்கட்டது இனவெறியைக் களைய பாடுபட்டதையும் ஒப்புக் கொள்கிறார்.
"கேப்டன் யார் என்பதை மேலாளர்கள்தான் தேர்வு செய்வர். இதில் கால்பந்து சங்கம் தலையிட்டதாக நினைவில் இல்லை. இந்த குற்றச்சாட்டு தவறானது. என் காலத்தில் கால்பந்தில் இருந்த இன வேறுபாட்டை வேரறுக்க வேண்டும் என்பதில் சிலர் உறுதியாக இருந்தனர். இது பெருமை அளிக்கும் விஷயமாகும்" - என்கிறார்.
சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்ற பெருமையுடன் என்னதான் உலகைக் கட்டி ஆண்டாலும், இனவெறியை இதுவரையிலும் வெற்றிக் கொள்ள முடியாமல் அந்தப் பேரரசர்கள் கட்டி ஆள்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.
0 comments:
Post a Comment