ஊழல் நிறைந்த மத்திய காங்கிரஸ் அரசை பதவியிலிருந்து இறக்க வேண்டும். வகுப்புவாத சக்தியான பாஜகாவை வளரவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இடதுசாரிகள் வரும் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றனர். புதிய பிரதமர் மட்டும் இந்த பிரச்னைக்கு தீர்வாகாது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றான கொள்கை கொண்ட மாற்று அரசு என்பதே சரியான தீர்வாகும்.
மாற்றுக் கொள்கை கொண்ட அரசு அமைய இடதுசாரிகள் பலப்பட வேண்டும். இடதுசாரி மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், மாநிலங்களவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணியில்லாத அரசியல் கட்சிகளுடன் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளனர்.
இந்த அடிப்படையிலும், புதுதில்லியில் நடத்தப்பட்ட மதவாத எதிர்ப்புக் கூட்டத்தில் அதிமுக பிரதிநிதி பங்கேற்றார் என்ற அடிப்படையிலும் தமிழகத்தில் இடதுசாரிகள் – அதிமுக கூட்டணி ஏற்பட்டது. தற்போது இடதுசாரிகளுடன் தொகுதி உடன்பாடு இல்லை என்ற நிலையை அதிமுக தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளது.
மாநில அளவிலும், தேசிய அளவிலும் இடதுசாரிகளை ஓரங்கட்டி அல்லது புறக்கணித்து மாற்று அரசை அமைக்க முடியாது.
தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கின்றன. இடதுசாரிகள் தங்களுக்கான பாதையில் மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்து இந்தத் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளன.
தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாக வெற்றிக் கண்ட கட்சிகளுடன் கைக்கோர்த்து மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மாற்று அரசை அமைக்கும் முயற்சிகளை இடதுசாரிகள் முன்னெடுப்பர்”
- தேசியப் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
0 comments:
Post a Comment