NewsBlog

Sunday, March 9, 2014

தேர்தல்கள் 2014: நாடாளுமன்றத்தில் பெண்கள்: 'சாமான்யோர் நாடாள்வது எப்போது?


உலகளவில்  நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான 189 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111 இடத்தில் உள்ளது. 60 விழுக்காட்டுடன் ருவாண்டா முன்னிலை வகிக்கிறது.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘தி இன்டர்-பார்லிமெண்ட் யூனியன்’ என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வருகிறது. உலக நாடுகளின் நாடாளுமன்றங்களில் அதிக பெண் உறுப்பினர்கள் கொண்ட நாடுகள் குறித்து ஆண்டுதோறும் இந்த அமைப்பால் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் அறிக்கை வெளியிடப்படுகிறது.

சாமான்யர்கள் நாடாள்வது எப்போது?
08.03.2014 சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின்படி, 545 உறுப்பினர்கள் கொண்ட இந்திய மக்களவையில் 62 பெண்கள் இடம்  பெற்றிருக்கிறார்கள். 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் 28 பேர் பெண்கள். இரு அவைகளிலும் 11.4 விழுக்காடு பெண்களே இடம் பெற்றுள்ளனர்.

இதில் எல்லோரும் மூக்கில் விரலை வைத்து வியக்கும் வண்ணம் ஆப்பிரிக்காவின் ருவாண்டா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் 60 விழுக்காடு பேர் பெண்கள். அதைத் தொடர்ந்து அன்டோரா, கியூபா, சுவீடன், தென்னாப்பிரிக்கா நாடுகள் இடம் பிடித்துள்ளன.

பட்டியலின் வரிசைப்படி, அமெரிக்கா 83 இடத்திலும், கனடா 54 இடத்திலும் உள்ளன.

தெற்கு ஆசிய நாடாளுமன்றங்களில் அதிக பெண் உறுப்பினர்கள் கொண்ட நாடாக நேபாளம் திகழ்கிறது. அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் 30 விழுக்காடு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment