NewsBlog

Thursday, March 6, 2014

சிறப்புக் கட்டுரை:'தேர்தல்கள் 2014'


'அடுத்த இந்திய அதிகாரம் யாருக்கு?' - என்று தீர்மானிக்கும் மக்களவைத் தேர்தலுக்கான நாள் குறிப்பிடப்பட்டுவிட்டது. ஏப்.7-ல், தொடங்கி இந்திய தேர்தல்கள் வரலாற்றிலேயே அதிகமான 9 கட்டங்களாக, மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக அதாவது தமிழகம் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என்று மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24 –ல், வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் அறிவித்தார். ஆலந்தூர் தொகுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது எம்எல்ஏ பதவியை ராஜனாமாக செய்துவிட்டதால் அந்த தொகுதிக்கும் ஏப்ரல் 24–ல், இடைத்தேர்தல் தேர்தல் நடைபெறும். 

மக்களவைக்கான மொத்தம் 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 16-ல், எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

மக்களவையின் பதவிக் காலம் ஜுன் மாதம் 1-ம், தேதியுடன் நிறைவடைகிறது. அதனால், மே மாதம் 31-ம், தேதிக்குள் புதிய அரசு பதவியேற்றாக வேண்டும். இந்தச் சூழலை முன்வைத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையர்கள், பாதுகாப்புத்துறையினர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் ஆணையம் தீவிரமான ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளது. 


05.03.2014 புதன் அன்று தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. தெலுங்கானாவை உள்ளடக்கிய ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம் மாநில சட்டப் பேரவை தேர்தல்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய சட்டப் பேரவைக்கான இடைத் தேர்தல்கள் சம்பந்தமான விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. 

இந்த தேர்தல்களில் மொத்தம் 81.4 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய இருக்கிறார்கள். கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் இந்த எண்ணிக்கை 71.3 கோடியாக இருந்தது. தற்போது நடைபெறும் தேர்தல்களில் 18 முதல் 19 வயது வரையிலான 2.3 கோடி பேர் புதிதாக வாக்களிக்கும் தகுதியைப் பெறுகிறார்கள். 



  • முதல் கட்டமாக ஏப்ரல் 7-ல், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய 2 மாநிலங்களின் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்கு பதிவுகள் நடைபெறுகின்றன.
  • இதைத் தொடர்ந்து 2-ஆவது கட்டமாக ஏப்ரல் 9-ல், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு தேர்தல் நடைப்பெறும்.
  • 3-வது கட்டமாக ஏப்ரல் 10-ல், 14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கும்,
  • 4-வது கட்டமாக ஏப்ரல் 12-ல், 3 மாநிலங்களின் 5 தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது.
  • 5-வது கட்டமாக ஏப்ரல் 17-ல், 13 மாநிலங்களின் 122 தொகுதிகளுக்கும்,
  • 6-வது கட்டமாக ஏப்ரல் 24-ல், 12 மாநிலங்களின் 117 தொகுதிகளுக்கும்,
  • 7-வது கட்டமாக ஏப்ரல் 30-ல், நாட்டின் 9 மாநிலங்களின் 89 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடைபெறும்.
  • 8-வது கட்டமாக மே 7-ல், 7 மாநிலங்களில் உள்ள 64 தொகுதிகளுக்கும்,
  • 9-வது இறுதி கட்டமாக மே 12-ல், 3 மாநிலங்களின் 41 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 
 

ஆந்திரத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு ஏப்ரல் 30 மற்றும் மே 7-ல், தேர்தல்கள் நடைபெறும். ஏப்ரல் 30-ல், தெலுங்கானா பகுதியில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகள், 119 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மே 7-ல், சீமாந்திரா பகுதியில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளிலும், 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறும். 
 
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால், அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கம் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. 

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு கடைசி வாய்ப்பு ஒன்றை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. தங்களது பெயரை சேர்க்க நாடு முழுவதும் 9.30 லட்சம் வாக்குச் சாவடிகளில் மார்ச்ச 9-ல் சிறப்பு முகாமுக்கு அது ஏற்பாடு செய்துள்ளது. 

தேர்தலுக்காக 17 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன. தேர்தல் பணிகளுக்காக 1.1 கோடி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் படையினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று குறிப்பிடும் ‘நோட்டா’ முறை இந்த மக்களவைத் தேர்தல்களில்தான் முதன் முறையாக நாடு முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. 

அதேபோல, யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யவும் இந்தத் தேர்தல்களில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

தேர்தலில் எந்த வேட்பாளருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பதை வாக்குச் செலுத்திய உடனேயே வெளிவரும் காகித சீட்டு மூலம் வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் புதிய முறை இது. சோதனை முறையில் மக்களவைத் தேர்தல்களில் இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்த உடன் அதை உறுதி செய்யும் விதத்தில் காகித சீட்டு ஒன்று வெளியே வரும். அதில் எந்த வேட்பாளருக்கு, எந்தச் சின்னத்தில் வாக்களித்தோம் என்பது தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த காகித சீட்டு பின்னர் அருகில் உள்ள சீலிடப்பட்ட பெட்டிக்கு தானாகவே சென்றுவிடும்.


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை மார்ச் 29 முதல் தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு மே 16 அன்று நடைபெறும். என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

காங்கிரஸின் இயலாமை, வகுப்புவாத்தின் ஆர்ப்பாட்டம், ஆம் ஆத்மியின் போராட்டமுமாய் இந்த தேர்தல் இந்திய வரலாற்றில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


  

0 comments:

Post a Comment