NewsBlog

Saturday, March 1, 2014

பாசிஸத்தின் கோரமுகங்கள்:'உணர்ச்சிப் பிழம்பாக்கும் அந்தத் தருணங்களில்..'


25-02-2014 அன்று நாகர் கோவில் செட்டிக்குளத்தில் அகில இந்திய இந்து மகாசபா சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டதாக சொல்லப்படும் பேச்சின் ஒரு பகுதி இது:

  • இந்தியா - பாகிஸ்தான் பிரிவு ஏற்பட்ட போதே இந்த மொட்ட துலுக்கனுகளை பாகிஸ்தானுக்கு விரட்டி விட்டிருந்தா இப்படி இந்த ஆட்டம் போட மாட்டானுங்க
  • இவனுங்க இந்த நாட்டுக்காரன் இல்லை என்று சொல்லி சட்டம் கொண்டுவந்து, ஓட்டுரிமை இல்லாமல் ஆக்கவேண்டும்.
  • மொட்டை துலுக்கன்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். "இனி ஒண்ணுக்கு ஒண்ணு கிடையாது. இனி ஒரு கீறல் எங்க மேல் விழுந்தால் கூட ஒட்டுமொத்தமா அழித்து விடுவோம்"
  • முஸ்லிம்கள் நல்லவர்கள்தான். ஆனால் குர்ஆன்தான் இந்துக்களை ரம்ஜான் மாதம் முடிந்தவுடன் வெட்டச்சொல்கிறது! எனவே இந்த நாட்டில் குர்ஆனை தடை செய்யவேண்டும்
  • லவ் ஜிஹாத் என்ற பெயரில் இந்துக்களை முஸ்லிமாக மாற்றி, பின்பு திருமணம் செய்து எல்லாம் முடிந்த பின் தலாக் தலாக் என்று சொல்லி விட்டு விடுவதுது. இச்செயலை செய்வதற்காக ஜமாஅத்கள் செயல்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து இதற்காக பணமும் வருகிறது.(தகவல்: அபு ஹாஷிமா வாவர்)

உணர்ச்சிப் பிழம்பாக்கும் இத்தகைய தருணங்களில் செய்ய வேண்டியது என்ன?

1. ஒருகாலும் உணர்ச்சிவசப்படக்கூடாது.
 
2. சட்டமும், நீதித்துறையும் முழுக்க.. முழுக்க வகுப்புமயமாகி விடவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
 
3. சங்பரிவார் கூட்டங்கள் நடக்கும்போது, அவற்றை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்காமல் அவற்றில் கலந்து கொண்டு வகுப்புவாதிகளின் நல்லிணக்கம் சீர்குலைக்கும் பேச்சுகளை பதிவு செய்ய வேண்டும். இதற்காக மேடைக்கு அருகில்தான் சென்று பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒலிபெருக்கிகள் பக்கத்தில் நின்றால்கூட போதுமானது. இந்த பதிவுக்கு செல்போனை பயன்படுத்தலாம். 
 
4. நல்லிணக்கம் என்பது பொத்தம் பொதுவானதால் இதற்காக இடதுசாரி, திராவிட கழக நண்பர்கள் மற்றும் ஒத்தக் கருத்தாளர்களின் ஆதரவையும் திரட்டலாம்.
 
5. பதிவுகளை சம்பந்தப்பட்ட காவல்நிலையம், உளவுத்துறை மற்றும் உள்துறை அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பி புகார் தெரிவிக்க வேண்டும். 
 
6. கூட்டம் நடத்த வாய்ப்பு கிடைக்கும்போது, பதிலுக்கு பதில் என்று பொரிந்து தள்ளாமல் வகுப்புவாதிகள் பேசிய முக்கிய பேச்சுகளுக்கு விளக்கம் தரலாம்.

விஷமத்தனம் புரியும் விஷமிகள், வகுப்புவெறியர்கள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் இவற்றை யாரும் விரும்புவதில்லை. அத்தோடு பதில் தருகிறேன் பேர்வழி என்று எடுக்கும் விவேகமற்ற நடவடிக்கைகளின் விளைவுகளை முஸ்லிம்கள் ஏற்கனவே சூடுபட்டு அதன் வலியும், வேதனையையும் இதுவரையிலும் அனுபவித்து வருகிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. உணர்வேற்றியவர்கள் நிம்மதியாக, கவலையில்லாமல் இருப்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அறிவார்த்த நிலையையும், விவேகத்தையும்தான் இஸ்லாம் பிரச்னைகளைக் கைக்கொள்ளும் சாதுர்யங்களாக எடுத்துரைக்கிறது.

0 comments:

Post a Comment