அஸதுத்தீன்
உவைஸி.
அண்டை மாநிலம்
ஆந்திரத்தின் அரசியல் சிங்கம்.
அரசியல்வாதி
என்றாலே அசிங்கம் என்றாகிவிட்ட சூழலில் அரசியலை தூரெடுத்து
தூய்மை செய்ய போராடிக் கொண்டிருக்கும் உண்மையான
போராளி. உண்மையிலேயே, மக்களுக்காகவே
அல்லும் பகலும் பாடுபட்டு கொண்டிருக்கும்
மனிதர்.
1969 ஆம் ஆண்டு,
மே மாதம் 13 ஆம் தேதி
1969ல் ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் சுல்தான் சலாஹுதீன் உவைசி என்ற அரசியல்
பிரமுகருக்கு மகனாய் பிறந்தார். இவருடைய தந்தை 6 முறை
தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸதுத்தீன்
உவைஸி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில்
B.A பட்டம் பெற்றார். பிறகு மேற்படிப்பிற்காக லண்டன் சென்றார். அங்கு LLB சட்டம்
பயின்று வழக்குரைஞரானார்.
இந்நிலையில், உவைஸியின்
தந்தை தலைமை தாங்கி நடத்திவந்த ‘அனைத்து
இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல்
முஸ்லிமீன்’ என்ற அரசியல் கட்சியில்
பங்கெடுத்தார். 2009ஆம்
ஆண்டிலிருந்து உவைஸி அந்த இயக்கத்தின் தலைவராகவும் உள்ளார்.
உவைஸியின் ஆதரவாளர்கள்
‘நகீப்-ஏ-மில்லத்’ என்று சிறப்புப் பெயரிட்டு இவரை அழைக்கின்றனர்.
1994 ஆம்
ஆண்டு, ஹைதராபாத்தில்
நடந்த சட்டமன்ற தேர்தலில் உவைஸி வெற்றி பெற்றார். 1999 இல், நடந்த அடுத்த தேர்தலிலும் அதே
தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது
முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். அதைத்
தொடர்ந்து மக்களவைக்கான தேர்தல்களின் போட்டியிட்டு 2004ஆம் ஆண்டு முதல்
தற்போது வரை மக்களவை உறுப்பினராகவும் உவைஸி இருந்து வருகிறார்.
டெய்ல் பீஸாக..
அண்மையில், மக்களவை
உறுப்பினர்கள் குறித்தும் மக்களவையில் அவர்களது செயல்பாடுகள் குறித்தும் ஓர் ஆய்வு
நடத்தப்பட்டது. அந்த ஆய்வின்படி, காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேசத்தின் மக்களவை உறுப்பினர்
மீனாட்சி நடராஜன் 85
விழுக்காடு நாட்கள்
மக்களவைக் கூட்டங்களில் கலந்து கொண்டு முதலிடம்
பெற்றார். அதேநேரத்தில் மக்களவையில் அவர் எழுப்பிய கேள்விகள் 135 மட்டுமேயாகும்! ஆனால், அஸதுத்தீன் உவைசி 1042 கேள்விகள் கேட்டு சாதனை படைத்துள்ளார்
என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மக்களவை செயல்படாமல்
முடக்கி வைத்தது சம்பந்தமான ஓர் ஆய்வு நடத்தப்பட்டால்..
அதில் பி.ஜே.பி முதலிடம் பெறும்
என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
தகவல்: அஹ்மது ரிஜ்வான்
உவைசி பற்றிய சரியான கோணத்தில் அலசப் பட்டிருக்கும் பதிவு.
ReplyDelete