NewsBlog

Saturday, September 21, 2013

காலப்பெட்டகம்: 'மோடி பிரதமரானால்.. மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டும்'



ஞானபீட விருது பெற்றவர் பிரபல கன்னட எழுத்தாளர் யூ.ஆர். ஆனந்த மூர்த்தி. மோடியைக் குறித்து இவர் விமர்சிக்கும்போது கூறியவை இவை:

"நரேந்திர மோடி பிரதமரானால், பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவார். மக்கள் அச்சத்துடனேயே வாழ வேண்டும். 

முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, நரசிம்மராவ் ஆட்சி செய்தபோது பிரதமர் பதவிக்கு கௌரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால் அந்தப் பதவியின் கௌரவம் களங்கப்பட்டுவிடும்.

பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும். பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால்... அவர் ஆட்சிக்கு வந்தால்... நிலைமை என்ன கதியாகும்?"

இந்தக் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதும், யூ.ஆர்.ஆனந்த மூர்த்தி நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பாஜக எம்.பி.ஆனந்த குமார் ஹெக்டே போன்றோர் கடும் சொற்கள் உதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment