NewsBlog

Tuesday, September 17, 2013

காலப்பெட்டகம்:'சொந்த மண்ணின் அந்நியர்கள்!'

கடந்த பத்து நாட்களில், 40 ஆயிரம் மண்ணின் மைந்தர்கள் - முஸ்லிம்கள், அகதிகளாய் புலம் பெயர்வு!

நிவாரண முகாம்கள், உறவினர்களின் வீடுகள், நலம் விரும்பிகளின் இல்லங்கள், காவல்நிலையங்கள் என்று புகலிடம் தேடிக் கொண்டு உயிர் காத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள்!

கொல்லப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த கோரக் காட்சிகளைக் காண சகியாமல் அதிர்ச்சியில் உறைந்து போன கொடுமைகள்!

"1947 இல் நாட்டு பிரிவினையின் போது இங்கேயே தங்கி அமைதியுடன் வாழலாம் என்று நேருவும், அவரது காங்கிரஸீம் சொன்னதை நம்பியதற்கான பரிசா இது?" - என்று பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பிரதமரிடம் அழுது முறையிட்ட அவலங்கள்!

நாடு மீண்டும் ஒருமுறை பிரிவினை அடைந்ததுபோன்ற வெறிச்சிட்ட கிராமங்களின் காட்சிகள்..!

இவையெல்லாம் நடந்திருப்பது.. உபியின் வடக்கு பகுதியில்.. சொந்த மண்ணில் அந்நியர்களாகிப் போன துரதிஷ்டசாலிகளின் கண்ணீர் கதைகள்.!

0 comments:

Post a Comment