NewsBlog

Friday, September 13, 2013

சிறப்புக் கட்டுரை: 'செயின்ட் பீட்டர்ஸிலிருந்து.. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்வரை'



"போர்.. போரைத்தான் தோற்றுவிக்கும்! வன்முறை.. வன்முறையைத்தான் உருவாக்கும்!" - வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திரளாக குழுமியிருந்த மக்கள் முன்பாக நேற்றைய ஞாயிறுக்கு முன் ஞாயிறு அன்று போப் பிரான்சிஸ் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி இது. வினை விதைத்தால் வினைதானே அறுவடை செய்ய வேண்டியிருக்கும்? விதைப்பவைதானே முளைக்கும்? ஒவ்வொரு விசையும், அதே அளவிலான எதிர்விசை கொண்டவை என்ற அறிவியல் கருத்தை போப் உணர்த்தியிருக்கிறார். 

சிரியாவில் நிலவும் நெருக்கடி நிலை மற்றும் போர் அச்சுறுத்தல் குறித்துதான் போப் இப்படி உரையாற்றியிருக்கிறார். அமைதி பேச்சு வார்த்தைக்கு சர்வதேச அளவில் நெருக்குதல் தரும்படி அவர் உலக சமூகத்துக்கு அழைப்பு விடுத்தார். அமைதி வழியிலான பேச்சு வார்த்தைகள் மட்டுமே சிரிய மக்களின் பாதுகாப்புக்கு உதவும் என்றார் அவர் அப்போது.

வாடிகனின் செயின்ட் பீட்டர்ஸிலிருந்து .. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கு மற்றும் உலக மக்களின் நம்பிக்கையை வெள்ளை மாளிகை பொய்ப்பிக்கக் கூடாது.

செயின்ட் பீட்டர்பர்க்கின் ஜி20 மாநாட்டில் சிரியாவுக்கு எதிரான ஒருமித்த கருத்தைத் திரட்ட ஒபமா முயன்றும் அது முடியாமல் போனது. இதிலிருந்து வெள்ளை மாளிகை தனித்து விடப்பட்டது எனலாம் அல்லது வெள்ளை மாளிகையின் அடாவடித்தனங்களை அதன் கூட்டாளிகள் ஒத்துக் கொள்ளவில்லை எனலாம். அதேபோல, பென்டகனின் அறிவுரையைத் தொடர்ந்து சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்து 50 க்கும் மேற்பட்ட தடவைகள் ஒத்தி வைத்ததாக பாக்ஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் வலது, இடது கரங்களாக இதுவரை விளங்கிய பிரிட்டனின் தனது 150 ஆண்டு கால வரலாற்றில் சிரியா போர் சம்பந்தமாக அந்நாட்டு பிரதமர் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்ததும் குறிப்படத்தக்கது.

0 comments:

Post a Comment