ஒரு தவளை கொதிக்க வைக்க இருக்கும் நீரில் விழுந்து விட்டது என்று வைத்துக்
கொள்வோம். அடுப்பை மூட்டியதும் நீரும் சிறிது சிறிதாக கொதிக்க ஆரம்பிக்கிறது.
தண்ணீரின் வெப்பம்
அதிகரிக்கும்போது, தவளை தன் உடலை
அந்த வெப்பநிலைச் சூழலுக்கு ஏற்ப
தன்னையும் மாற்றிக் கொள்ளும். வெப்பம் அதிகரிக்க..
அதிகரிக்க தவளையும் தன் இயல்பை
அந்த வெப்பநிலைக்கு
ஏற்ப மாற்றிக்
கொண்டேவரும்.
கடைசியில், தண்ணீர்
கொதிநிலையை அடையும் அந்த தருணத்தில் வெப்பத்தை தாங்கமுடியாமல் தவளை
பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து
தப்ப முயலும். ஆனால், எவ்வளவுதான் முயன்றாலும், தவளையால்
கொதிநீரிலிருந்து தப்பி வெளியேற முடியாது. பாவம் கடைசியில் அது இறப்பைத் தழுவ வேண்டியிருக்கும்.
அந்த தவளையை கொன்றது யார்?
இதைப் படிக்கும்
பெரும்பாலானோர் கொதிக்கும்
நீர் தான் அந்த தவளையை
கொன்றது என்று சொல்ல வருவீர்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல. ஆபத்திலிருந்து எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று
சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் முட்டாள்தனம்தான் அதை கொன்றது.
இந்த உதாரணம் தன்
கையாலேயே தன் உயிரைப் போக்கிக் கொண்ட அந்த அப்பாவி தவளைக்கு மட்டுமே ஆனதல்ல.
நமக்கும் இது பொருந்தும்தான்!
நாமும்
அந்த தவளைப் போன்றுதான் பலநேரங்களில்
சூழ்நிலைக்கு ஏற்ப எல்லோரிடமும் அனுசரித்து போகிறோம். எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும் இந்த அணுசரனை தொடர்கிறது.
எப்போது
அனுசரித்து போக வேண்டும், எப்போது
எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்
கொள்ளாத அறியாமையே இதற்கு காரணம்.
மனரீதியாக,
உடல்ரீதியாக, பணரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும்போது
நாமும் சுதாரித்துக் கொள்ளாமல் போனால் மீண்டும் அதையே
தொடர்ச்சியாக அவர்கள் செய்ய ஆரம்பிப்பார்கள். உடலில் வலிமைமையோடும், மனதில் தெளிவோடும், நற்சிந்தனையோடும் அவர்களிடமிருந்து
தப்பித்துவிடுதலே சாலச் சிறந்தது.
இல்லையென்றால் அந்த தவளைக்கு ஏற்பட்ட நிலைமைதான் நமக்கும்!
உண்மைதான்! நாம்
அனுமதித்தால் ஒழிய எவராலும் நம்மை அழிக்க முடியாது.
well said
ReplyDelete