NewsBlog

Thursday, January 2, 2014

நடப்புச் செய்தி: 'வக்ப் வாரிய சட்டங்கள் நூல் வெளியீடு'

வக்ப் வாரிய 'புதிய' சட்டங்களை புத்தகமாக வெளியிட்டது ஆந்திராவின் மஜ்லிஸ் (MIM) கட்சி. வக்ப் சொத்துக்களை வரைமுறைப்படுத்தி விட்டால் நாம் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை என அது நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

1995ம் ஆண்டில் இயற்றப்பட்ட வக்ப் வாரிய சட்டங்களையும், அதில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்களையும் 'பொது முஸ்லிம் சமூகம்' தெரிந்துக் கொள்ளும் வகையில், விரிவான 'புத்தகம்' ஆந்திராவில் வெளியிடப்பட்டுள்ளது.

மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் (MIM) கட்சியின் தலைவர் அக்பருத்தீன் ஓவைசி
மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் (MIM) கட்சியின் எம்.எல்.ஏ.வும், ஆந்திர வக்ப் வாரியத் தலைவருமான 'சைய்யத் அப்சல் பியாபாணி குஸ்ரு பாஷா' ஆந்திர ஹஜ் ஹவுசில், இதனை வெளியிட்டார்.

மாநிலம் முழுவதிலுமுள்ள 'வக்ப்' சொத்துக்களையும், அதன் தற்போதைய நிலை குறித்தும், ஒவ்வொருவரும் தெரிந்துக் கொள்ளும் வகையில் அப்புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

சந்தை நிலவரங்களுக்கேற்ப 11 மாதங்களுக்கொருமுறை வாடகையை உயர்த்தி ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும், என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி 'வக்ப்' சொத்துகளை ஆக்கிரமிப்பதை ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்படும்.

தனிப்பட்ட மனிதர் அல்லது நிறுவனம், (அது அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி) பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ வக்ப் சொத்தை ஆக்கிரமித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

வாடகை ஒப்பந்தம் அல்லது லீஸ் ஒப்பந்தம் காலாவதியான நபர்கள் அனைவரும் 'ஆக்கிரமிப்பாளர்கள் என்று கருதப்படுவார்கள்' என்று அந்தச் சட்டத் திருத்தம் தெளிவாகக் கூறுகிறது.

இந்தியா முழுவதிலும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ஏக்கர் வக்ஃப் நிலங்கள் உள்ளன.

இவற்றின் சந்தை விலை 2006-ஆம் ஆண்டு நிலவரப்படி 1,20,000 கோடி ரூபாய் மதிப்பாகும்.

ஆனால், ஆண்டு வருமானமாக, வெறும் 163 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கிறது!

புதிய சட்டத்திருத்தம் அமுலுக்கு வந்தால், ஆண்டு தோறும் 'ஒரு லட்சம் கோடி ரூபாய்' வரை வருவாய் அதிகரிக்கும், என்று சமீபத்தில் மத்திய வக்ப் வாரிய அமைச்சர் 'ரஹ்மான் கான்' கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-தகவல்: Md Ramiz

0 comments:

Post a Comment