NewsBlog

Tuesday, January 7, 2014

வளைகுடா செய்திகள்: 'முறையற்ற கிணறுகளை உடனடியாக மூடிவிட ஆணை'


This unattended well on Ali Ibn Al-Naqeeb Street in Al-Hazm District, Riyadh, is just one of tens of thousands of abandoned wells in the Kingdom that pose a threat to residents. (AN photo)
இரண்டு வாரங்களுக்கு முன்னர் 'லமா அல் ரவ்கீஹ்' என்னும் பெயர் கொண்ட 6 வயது குழந்தை ஆழத்துளைக் கிணறு ஒன்ற்றில் வீழ்ந்து மரணமடைந்தது. மோசமான வானிலையும், மண் சரிவும் குழந்தையை மீட்க முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து ஆபத்தான மற்றும் சட்ட விரோதமாக தோண்டியுள்ள ஆழ்த்துளைக் கிணறுகளை மூடிவிட சவுதி அரசாங்கம் முடிவெடுத்து நாட்டில் உள்ள அனைத்து ஆழ்த்துளைக் கிணறுகளையும் கணக்கெடுக்கும்படி ஆணையிட்டது. அப்போது, 1 லட்சத்து 30 ஆயிரம் சட்டவிரோதமான கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏற்கனவே கடுமையாக எச்சரித்தும், அபராதங்களை விதித்தும் அந்தக் கிணறுகள் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான கிணறுகளை மூடும்படியும் அல்லது தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும் அதன் உரிமையாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்வள மேம்பாட்டுத்துறை 'டைரக்டர் ஜெனரல்' அல் தாயெர் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் சட்டவிரோதமாக கிணறுகள் தோண்டாமலிருக்க கண்காணிப்புக் குழுவினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார். 

சட்டவிரோதமாக கிணறுகள் தோண்டுவோருக்கு 5,000 சவுதி ரியால்களிலிருந்து 25,000 சவுதி ரியால்கள்வரை அபராதம் விதிக்கப்படுகிறது. 

சவுதி அரசின்  அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி நாட்டில் 1,44,000 அனுமதிப் பெற்ற கிணறுகள் உள்ளன. இவற்றில், 1,37,0000 கிணறுகள் தனியாருக்குச் சொந்தமானவை. பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் இந்தக் கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றன.

2011 ஆம், ஆண்டு நடத்தப்பட்ட கணக்கின்படி, நாட்டில் 7,114 அரசு கிணறுகளிலிருந்து நீர்வளம் பயன்படுத்தப்பட்டது. இவற்றில் 3,334 கிணறுகளின் நீர் எந்திரக் குழாய்கள் மூலமாகவும், 2,578 கிணறுகள் சாதாரண நிலையிலும் பயன்படுத்தப்பட்டன. 

இதுவே,

  • 2007 இல், 6,162 கிணறுகளும், 
  • 2008 இல், 6,422 ம், 
  • 2009 இல், 6,649,
  • 2010 இல், 6,872 கிணறுகளும் இருந்தன.

அதேபோல,

  • 2007 இல் அரசு அனுமதிப்பெற்ற தனியார் கிணறுகளின் எண்ணிக்கை 1,27,00,
  • 2008 இல், 1,29,000 கிணறுகளும், 
  • 2009 இல் 1,31,000 ம்,
  • 2011 இல், 1,37,000 கிணறுகளும் முறையாக அரசு அனுமதிப் பெற்றிருந்தன. 

இப்படி முறையாக அரசு அனுமதிப் பெற்ற தனியாருக்குச் சொந்தமான கிணறுகளில் 61,000 கிணறுகள் ரியாதில் உள்ளன. அடுத்தது காஸிம், ஹய்ல், தபூக், ஜவூப் மற்றும் வடக்கு எல்லைப்புறங்களில் 46,000 கிணறுகள் உள்ளன. பஹா, ஆஸிர், நஜ்ரான் மற்றும் ஜாஜன் 10,312 கிணறுகளும், கிழக்குப் பகுதிகளில் 10,000 கிணறுகளும், மக்கா, மதீனாவில் முறையே 8,000 கிணறுகளும் முறையாக சவுதி அரசின் அனுமதிப் பெற்று தனியாரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆதாரம்: அரப் நியூஸ்)

0 comments:

Post a Comment