NewsBlog

Saturday, January 4, 2014

ஆய்வுக் கட்டுரை: 'தேவை: வெகு நிதானமான விமர்சனங்கள்!'

70,000 பாஜகவினர் 'ஆம் ஆத்மி கட்சி'யில் இணைந்தனர் ! முன்னாள் எம்.எல்.. 'டாக்டர் கல்சாரியா' உள்ளிட்ட பிரபலங்களும் கட்சிக்கு முழுக்கு! குஜராத் மாநில விவசாயிகளின் 'ஆபத் பாந்தவனாக' கருத்தப்படும், பாஜக முன்னாள் எம்.எல்.. டாக்டர் காணு கல்சாரியா, ஆம் ஆத்மி கட்சியில், தன்னை இணைத்துக் கொண்டார். 'ஆம்' கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் 'தினேஷ் வகேலா' முன்னிலையில் நடந்த இணைப்பு விழாவில் நவ்பாய் டோராஜியா உள்ளிட்ட ஏராளமான பாஜக பிரபலங்கள் 'ஆம் ஆத்மி கட்சி'யில் தங்களை இணைத்துக் கொண்டனர்

 

முன்னதாக, தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மோடியை வீழ்த்த நினைத்ததாகவும், காங்கிரஸ் அதைப் பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டதாகவும் கூறுகிறார், டாக்டர் கல்சாரியா. மோடிக்கு ஒரே மாற்று 'ஆம் ஆத்மி கட்சி' தான் என்பதை தாம் உணர்ந்தே 'ஆப்' கட்சியில் இணைந்துள்ளதாக விவரிக்கிறார், கல்சாரியா.

மாநில விவசாயிகளின் ஆபத் பாந்தவனாக கருதப்படும் டாக்டர் காணுவை, 2014 பாராளுமன்றத்தேர்தலில் மோடிக்கு எதிராக களம் இறக்க 'கேஜ்ரிவால்' முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த செய்திகளின் அடிப்படையிலான நிகழ்வுகளால் இந்திய அரசியல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுமா?

மதம் ஒரு அபின் என்றார் கார்ல் மார்ஸ். அந்த அபினின் உச்சக்கட்டச் சுவையை-போதையை அடைந்தவர்கள்தான் பிஜேபி மற்றும் அதன் தாய் அமைப்புக் கட்சி உறுப்பினார்கள். இவர்கள் எந்த இயக்கங்களில் இணைந்தாலும், உள்ளூர அந்த போதையின் தாக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் சிரமம்.

இங்கு மோடி தூற்றப்படுவது அவரது பாஸிஸ சிந்தனைப்போக்குக்காகவும், அந்தச் சிந்தனையால் ஏற்பட்ட பேரழிவு உயிர் பலிக்கான நீதித் தேடியும். இதில் அவர் சிந்தனை மாற்றம் செய்து தன்னை நீதியின் முன் நிறுத்தி தண்டனைக்காளாக்கிக் கொண்டால் அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன பிணக்கு இருக்க முடியும்?

அதேபோல, மோடி சார்ந்துள்ள பி.ஜே.பி அதன் தாய் இயக்கம் மற்றும் துணை இயக்கங்களும் ஒரு சித்தாந்தம் சார்ந்தவை. அது நன்மை பயப்பதோ தீமைப் பயப்பதோ எதுவானாலும் அதை அடைவதுதான் அவர்களின் இலட்சியம்.

காங்கிரஸீம் தனக்கென ஒரு சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது மறுக்க இயலாது. அதுவும் அதை நோக்கி நகரும்.

ஆனால், கேஜரிவாலுடைய இயக்கமோ ஒரு தெருவாசிகள் தங்கள் தெருவில் மின்விளக்கு வேண்டி நடத்தும் இயக்கம் போன்றது. மின்விளக்கு அமைந்துவிட்டால் அதன் செயல்பாடுகள் முடங்கிவிடுவது இயல்பு. அத்துடன் அது மேட்டுக்குடி மக்களால் சூழப்பட்டுள்ள அடிப்படைகளற்ற இயக்கம்.

400 வருடங்கள் பழமை வாய்ந்த டெல்லியிருந்த மெஹ்ரௌலி பள்ளி வாசல் மற்றும் அதைச் சுற்றியிருந்த இஸ்லாமியர்களின் வீடுகளையும் 2012 ல் டெல்லி நகர வளர்ச்சித் துறை ஆணையம் சட்டத்திற்கு புறம்பாக உரிமை கோரி இடித்துத் தள்ளியது. அதைப் பற்றிய தனது நிலைப்பாட்டை தேர்தலுக்கு முன்னரோ அல்லது வெற்றி பெற்ற பின்னரோ இதுவரை அரவிந்த் கெஜ்ரிவால் பேசவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.  ஆனால், கேஜரிவால் டெல்லியின் முதல்வரிலிருந்து  பிரதம வேட்பாளராக வடிவமெடுக்க வைக்கப்படுகிறார்.

கூடங்குளம் பிரட்சினையின் போது இடிந்த கரை என்ற ஓர் ஊரைச் சார்ந்த மக்களின் நலனுக்காக டெல்லியிருந்து வந்த கேஜரிவால், முசாபர்நகர் கலவரத்தைப் பற்றி இன்று வரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. தேசிய அரசியலில் ஈடுபட நினைக்கும் இவர், இஸ்லாமியர்களின் பாபர் மசூதி இடிப்பு, டெல்லி மெஹ்ரௌலி மசூதி மற்றும் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு, குஜராத் கலவரக் குற்றவாளிகள் பற்றிய பார்வை போன்றவற்றில் இவரது நிலைபாடு இதுவரையிலும் தெரியவில்லை.

முஸ்லிம்களின் வாக்குகள் மிகவும் வலிமையாக  மாறி வரும் நேரமிது. அதனால், வழக்கம் போல உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுப்பது அறிவுடமை ஆகாது.

இந்திய சமூக அமைப்பை ஊழலைத் தாண்டி மிக முக்கியமான எண்ணற்ற பெரும் பிணிகள் பீடித்துள்ளன. அவற்றைச் சீராக்காவிட்டால் நமது அமைப்பு சீர்குலைந்துவிடும் ஆபத்தும் உண்டு. வெறும் கிளை சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல அது. ஒரு விருட்சத்தின் ஆணி வேர்கள் சம்பந்தப்பட்ட விரிவானது.

வெறும் ஊழல் ஒழிக்க புறப்பட்டவர்களுக்கு, கேஜரிவால் செய்யும் நற்செயல்களுக்கு மட்டுமே நமது பங்களிப்பைத் தர முடியும்.

ஆக மிகவும் நிதானமாக விமர்சனங்கள் அவசியமான காலகட்டம் இது.

0 comments:

Post a Comment