NewsBlog

Sunday, June 30, 2013

என் கேள்விக்கு என்ன பதில்: "இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா?”

ஒருமுறை அமிர்தஸரில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் அல்லாமா ‘ஷிப்லி நுஃமானி’ (ரஹ்) அவர்கள் ‘மகளிர் உரிமைகள்’ பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் இஸ்லாம் பெண்களுக்கு நியாயமான… நிறைவான உரிமைகள் வழங்கி இருப்பதையும், அதில் ஆண் – பெண்ணுக்கு இடையே எந்த பாராபட்சமும் காட்டவில்லை என்பதையும் மௌலானா விவரித்துக் கொண்டு வந்தபோது, இடையே ஒருவர் ஒரு கேள்வியை எழுதி மேடைக்கு அனுப்பினார்.
 
“இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் பெண்களுக்கு ஆண்களைவிட ஒரு பங்கு குறைவாக வழங்கப்படுகிறதே! இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா?” – இதுதான் கேள்வி.
மெளாலான அவர்கள் இப்படி பதிலளித்தார்கள்:
“உண்மையில், இதில் பெண்களுக்கு எந்தவிதமான உரிமை இழப்பும் இல்லை.
நேர்மையாகச் சிந்தித்துப் பார்த்தால் ஆணுக்குச் சமமான பங்கு பெண்ணுக்குக் கிடைக்கிறது என்பது மட்டுமல்ல.
இந்த வாரிசுரிமைச் சட்டம் அவளுக்கு லாபகரமாக இருக்கிறது.
எப்படியென்றால்..
சொத்தில் ஒரு பங்கு ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் கிடைக்கிறது. ஆகவே அவளுக்குக் கிடைத்த சொத்துப் பங்கு அப்படியே தனியாக இருக்கும்.
அதேபோல, திருமணத்தில் கிடைத்த மஹர்த் தொகையும் அவளுடையதே!
ஆனால், சொத்தில் இரண்டு பங்கு பெற்ற ஆண் அவன்,
  • தனக்காகவும்
  • தன் மனைவிக்காகவும்
  • குழந்தைகளுக்காகவும்
  • பெற்றோருக்காகவும்
செலவழிக்க வேண்டும்.

இப்பொழுது சொல்லுங்கள்; சொத்தில் கிடைத்த பங்கின் மூலம் அதிக லாபம் பெறுவோர் யார்?"
இந்த பதிவுக்காக முகநூலில் வந்த கமெண்ட்: அடக்கடவுளே! என்னா ஒரு நியாயம்? (Adak kadavule! Enna oru Niyayam.!)

பதில்: அன்புள்ள (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) அய்யாவுக்கு, இந்த பதிவில் வாரிசுரிமை - சொத்துரிமை சம்பந்தமான ஒரு முக்கிய கேள்விக்கான பதில் உள்ளது. பதில் அளித்தவர் தலை சிறந்த அறிஞர் பெருமக்களில் ஒருவர். இந்த தீர்வை அல்லது பதிலை தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், சிறு பிள்ளைத் தனமாக 'கமெண்ட்' அடிப்பதற்கு பதிலாக அறிவார்த்த ரீதியாக இந்த கேள்விக்கான தீர்வை அளித்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன். ஒருவேளை பொறுத்தமான தீர்வாக அது இருந்தருந்தால் நான் ஏற்றுக் கொண்டிருப்பேன்கூட. ஆனால், மாற்று தீர்வு சொல்வதற்கு பதிலாக கிண்டலடித்து சென்ற லட்சக்கணக்கானோரை காலம் தன்னுள் புதைத்துக் கொண்டுள்ளது. படைத்தவன் தன் படைப்புகளுக்காக அளித்துள்ள அருள் மார்க்கம்தான் இஸ்லாம். உலகின் நான்கு பேரில் ஒருவர் பின்பற்றும் மார்க்கம்.உங்களைவிட மெத்த படித்த பேரறிஞர்கள் முதல் கடைநிலை பாமரன்வரை ஏற்று தனது வாழ்வில் செயல்படுத்தும் மார்க்கம். அதனால், விமர்சனம் என்ற போர்வையில் கிண்டலடிப்பதைவிட நல்ல தீர்வுகளை தாங்கள் சொல்வீர்கள் என்று நம்புகின்றேன்.

கேள்வி:  Mannikkavum Aiyya. Idhu islam sammanthappattadhu enbadharkaga kindal adikkavillai.Endha madham sammandhappattirundhalum idhaiye seithiruppen.Endha poruthamana theervaiyum idhai thandi neengal Yerka povadhillai.Ennudaiya siru pillai thanamana purithal ennavendral oru penn thanakkagavum,than kanavarukkagavum,than kuzhanthaigalukkagavum than petrorukkagavum eduvum seyya thevaiye illai enbadhu ungal mudivu.Penn thanadhu pangai vaangi vaithukkondu aanukku adangiye vazhavendum.enbadhuthan.En mudivu ennavendral Pengalukkana pangai mudivu seyya aangal yaar?Every human being is equal.There should be no gender disparity.Aanum pennum sernthathuthan ulagam,No up no down.You can't be touchy and post things like this in general."Islamiarukku mattum" endru pottirunthal Naan Nichayam Idhil thalai ittirukka matten.I am extremely sorry Had I wounded your religious sentiments.It is my mistake to have taken this as a general economical issue.Besides,You know Majority is running the country ,we know how they do.Nirka,Nambikkaiyin adippadaiyil seyyum edhaipatriyum sammandhapattavaraithavira yaarum pesa mudiyathu,Social,economical endral nambikkai ange koodathu,only scientific ,logical,reasonable solution thaan vendum.Neengal ennai islathukku ethiri endru nambugireergal adhuthan prachinai.Naan podhuvaaga sari endru nambuvathai ,sonnal ivar ketpaar ennum idathilthan solven.Naan Socrates illai,Plato illai,Karl marx,Ambedkar,periyar illai,Budha illai,adhanaal Niraya Bayam undu.

பதில்: அய்யா, நீங்கள் ஒன்று தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்திலாவது சொல்லுங்கள். ஆங்கில எழுத்து கலந்த தழிழை வாசிப்பது எனக்கு கடினமாக உள்ளது. 

அடுத்தது என்னுடைய பதிவில் விமர்சனம் கூடாது என்று நான் எங்கேயும் சொல்லவில்லை. விமர்சனங்களை வரவேற்கிறேன். அது எந்த மத கருத்தாக இருந்தாலும் நையாண்டி வேண்டாம் என்கிறேன். இதில் (நையாண்டியில்) நிச்சயம் உங்களுடன் என்னால் உடன்பட முடியாது. இன்று பொதுவாக ஒரு சிலர் தன்னை எந்த சமய அமைப்பிலும் இல்லை என்று சொல்லிக் கொள்கிறார்கள் தங்களைப் போலவே. எந்த கொள்கைகைளையும் சாராமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. 

ஒவ்வொரு கொள்கையும் .. வாதமும்.. இஸமும்.. ஒரு சமயம்தான்! ஒரு நம்பிக்கைதான்! அறிவியல் என்ற சொல்லெடுத்து கவசம் தரித்துக் கொண்டாலும் அவர்களும் சமயவாதிகள்தான்! கம்யூனிஸ்ட்டுகளுக்கு மார்க்ஸ் தெய்வம் மற்றும் தாஸ் காப்டிலிஸம் வேதம் என்பதைப் போல முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர் பின்பற்றும் இறைவன்களும், வேதங்களும் வெவ்வேறானவை. 

 
அடுத்தது இருபாலரும் சமம் என்று ஒரு கருத்தை வைத்து பெண்ணை போகப் பொருளாக.. பணிச் சுமை மற்றும் குடும்ப சுமை என்று இரண்டு சுமைகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாக்குகிறார்கள். மேலை நாட்டுப் பெண்கள் இன்று சந்திக்கும் துயரங்களைத்தான் தங்களைப் போன்றோர் தாங்கிப் பிடிக்கிறார்கள். சமம் என்ற போர்வையில் அவர்கள் துயரப்படுவது கட்டாயம் என்கிறீர்கள். எங்களைப் போன்ற பழமைவாதிகள், பாமரர்கள் சொல்லும் அவரவர்க்கான எல்லைகள் என்ற யாதார்த்த கருத்துக்கள், எல்லா கால நடைமுறைக்கும் ஏற்ற கருத்துக்கள் தங்களுக்கு பிற்போக்குத்தனமானவையாக தெரிவதில் வியப்பில்லை. 



சட்டங்களை சொல்ல நீங்கள் யார் என்கிறீர்கள். தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உற்பத்தியின் எல்லா சட்டங்களையும் படைத்தவன் என்ற நிலையில் நீங்கள்தான் வகுக்கிறீர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். 

மனித இனத்தைப் படைத்த இறைவன்தான் சட்டங்களை சமைக்க முழு தகுதியானவன். இதைதான் இஸ்லாம் சொல்கிறது. அதை ஏற்று நடைமுறைப்படுத்துபவரே முஸ்லிம்கள். 

இஸ்லாமும் அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பெரும்பான்மை என்னும் இனத்திலிருந்து சிறுபான்மை இனமாக முளைத்தெழுந்த அதிபெரும்பான்மையினர் என்பதை மறந்திட வேண்டாம். அச்சத்திற்கு அப்பாற்பட்ட இனம் இது. எத்தனையோ இன்னல்களை.. இடுக்கண்களை கடந்துவந்தவர்கள்.(சில மாநிலங்களைத் தள்ளி உங்கள் காலத்திலேயே முஸ்லிம்கள் அடைந்த இந்த துன்பங்களை தாங்களும் பார்த்திருப்பீர்கள்) பெரும்பான்மை இனம் ஆட்சிபுரிகிறது என்ற காரணத்துக்காக எங்கள் கொள்கைகளை விட்டுத்தர சொல்கிறீர்களா? என்றும் தெரியவில்லை. 

வரலாற்றில் பதிந்துள்ள ஒவ்வொரு பேரறிஞரும் தனிநபரே! அந்த தகுதி அடைவதற்கு உங்களுக்கும் தடையில்லை! நீங்கள் பேசுங்கள்.. அதிகதிகம் பேசுங்கள்! அந்த பேச்சுக்களை முதலில் உங்கள் குடும்பத்தில் நடைமுறைப்படுத்துங்கள். அடுத்தது உங்கள் உறவினர் வட்டத்தில் மற்றும் தோழமை வட்டத்தில் செயலாக்கப்படுத்துங்கள். வெற்றி உங்களுடையதே! அதேபோல ஒவ்வொரு கருத்தையும் ஆரோக்கியமாக விமர்சனம் செய்யுங்கள். கூடவே தீர்வுகளையும் முன்வையுங்கள். 

எனது கருத்துக்கள் அனைவருக்கும் பொதுவானதுதான். இந்த கருத்துக்களை நான் செயல்படுத்துவதோடு என்னைப் பின்பற்றுபவரும் செயல்படுத்துவதை பார்க்கிறேன். 

மனித இனத்துக்கான எல்லா பிரச்னைகளுக்கான தீர்வுகளும் என்னிடம் உள்ளன. அவை வெறும் எழுத்துக்களாக மட்டுமல்லாமல் ஏற்கனவே செயலருவம் பெற்றவை என்ற உற்சாகத்தோடும் இருக்கிறேன். இறைவன் நாடினால்.. வெகுவிரைவில் செயலுருவம் பெறும் என்றும் நம்புகின்றேன். 

ஏனென்றால் எனது கருத்துக்கள் படைத்தவன் அவன் படைப்புகள் நேர்வழி பெற அருளிய உயர் கருத்துக்கள்!

0 comments:

Post a Comment