பாலிஸ்ட்ரெயின் என்ற வேதியல் பெயர் கொண்ட தெர்மகோல் ஒரு பாலிமர்தான்! பிளாஸ்டிக்கின் எல்லா தன்மைகளும் கொண்ட அபாயகர மானது இது.
தெர்மொகோல் எல்லா துறையினராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இது பிரதானமாக பாக்கிங் செய்ய அதிகதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
அதுவும் பழம் முதற்கொண்டு செல்போன் மற்றும் தொலைக்காட்சி பெட்டி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை சந்தைக்கு அனுப்ப இது பெரிதும் கையாளப்படுகிறது. உணவு பொருள்கள்களுக்காகவும் இது பயனாகிறது. தெர்மகோல் மிகவும் லேசானது என்பதே இதன் ஆபத்துக்கு அதி தீவிரமாக உள்ளது.
நம் பூமியின் மேற்பரப்பிலேயே தங்கிவிடும் இது நமது நீர் நிலைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வீட்டு சாக்கடையிலிருந்து பாதாள கழிவுநீர் குழாய்கள் வரை அடைப்பு ஏற்படுத்துவதில் வல்லவை. மேலும் இவை நீர் உறிஞ்சும் தன்மை அற்றவை. ஆதலால் பரவி இருக்கின்ற இடங்களில் நீரை பூமிக்கு அனுப்பாமல் தடை செய்துவிடும்.
பிளாஸ்டிக் பொருட்கள் போல மக்காத தன்மை கொண்டதுதான் தெர்மகோல். இன்னும் சொல்லப்போனால்.. பிளாஸ்டிக் கூட சில நூற்றாண்டுகளில் மக்கிவிடும் தன்மை கொண்டது. ஆனால் இந்த தெர்மொகோல் என்னும் அரக்கனுக்கு மக்கும் தன்மையே கிடையாது என்பதே இதன் ஆபத்தை உணர போதுமானதாகும்.
வெளி நாடுகளில் தெர்மகோல் அழிக்கபடாமல் சேகரித்து வைத்து மறு சுழற்சிக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கழிவுகளை சேகரிக்க தனியான துறை இயங்குகிறது.
குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பொம்மைகள் அனைத்தும் இவ்வாறு மறு சுழற்சியின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டவைதான்!
தெர்மகோல் என்னும் அசுரனிடமிருந்து நாளை தலைமுறையைக் காக்க..
- முடிந்த மட்டும் சேகரித்து வைத்து (எளிதில் தீப்பற்றக் கூடியவை. எச்சரிக்கை) மறு சுழற்சிக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்.
- கைவினை பொருட்களுக்கான மூலப் பொருளாகவும் இவற்றை பயன்படுத்தலாம்.
- பிளாஸ்டிக் ஒழிப்பு போல் தெர்மொகோல் ஒழிப்பு பிரசாரத்தை முன் எடுத்து செல்லலாம்.
- தெர்மகோல் மிகவும் ஆபத்தானது. ஆகையால், இவற்றை கால்நடைகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
- இவற்றை எரித்தால் நச்சு தன்மை (பிளாஸ்டிக் போல்) கொண்ட வாயுக்கள் வெளியேறும். ஓசோன் படலத்தை ஓட்டையாக்கிவிடும்.
- முக்கியமாக குழந்தைகள் இதை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்.
- கரி விஷ வாயுக்களை உறியும் தன்மை உடையதால் ஒரு புனல் போன்ற தகரத்தில் கரியை நிரப்பி அதில் தெர்மகோலை எரிய விட்டலாம்.
0 comments:
Post a Comment