NewsBlog

Friday, June 28, 2013

என் கேள்விக்கு என்ன பதில்: ஈரானின் புதிய அதிபரும் - அமெரிக்காவின் கொள்கையும்..!


கேள்வி: சமீபத்தில் ஈரானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஹசன் ரூஹாணி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று ரூஹாணி சொல்லியிருப்பதால் அந்தப் பகுதியில் நெருக்கடி குறைந்து அமைதி நிலவ வாய்ப்பிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்! 

பதில்: பெத்தண்ணா அமெரிக்காவுடன் எந்த உலக நாடும் மோதல் போக்கை மேற்கொள்வதில்லை. அண்ணன்தான் உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்து ரத்த களறியாக்கிக் கொண்டிருக்கிறது. அண்ணனுடைய வெளிவிவகார கொள்கையுடன் ஈரானின் கொள்கை ஒத்துப் போனால் நட்பு நாடு! இல்லையென்றால்.. தூக்குக்கயிறு! 

கேள்வி: நீங்கள் சொல்வதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது! வாஸ்தவம்தான் அத்திபட்டியில தண்ணி இல்லனுன்னு சொல்லிட்டு சும்மா இருந்தா எப்படி தீர்வு வரும்? முஸ்லிம் நாடுகள் அதுவும் இரண்டு ஹரம்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சவூதி அரேபியாவே அமெரிக்க அடிமையாக இருக்கிறதே தீர்வு என்ன?  

பதில்: உலக மகா யுத்தங்களைத் தொடர்ந்து சோவியத் உலகமும், மேற்கத்திய உலகமும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட நாடுகளின் முஸ்லிம் இளைஞர்களையும், யுவதிகளையும் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்துகொண்டு சித்தாந்த கல்வி அமைப்பை திணித்தனர். அவர்களை தங்கள் பொம்மை பிரதிநிதிகளாய் திரும்பவும் அந்தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிபர்களாக்கினர். மூளைச் சலவைச் செய்யப்பட்ட கம்யூனிஸ - மேற்கத்திய பெயர் தாங்கி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்லாத்தை புறம் தள்ளி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த வினை இது. எகிப்தின் ஹோஸ்னி முபாரக், லிபியாவின் கடாபி, இராக்கின் சதாம் உசேன் வரை இதுதான் தொடர்ந்தது.  இன்னும் தொடர்கிறது. 

இஸ்லாம் வேண்டும் என்று சொல்லப்பட்டவர்கள் தீவிரவாதியாக சித்தகரிக்கப்பட்டார்கள். 'அபுகாரிப்' மற்றும் 'குவாண்டனாமோ' சிறைக் கொடுமைகளைவிட மோசமான கொடுமைகள் சொந்த நாட்டு மக்கள் மீது சொந்த ஆட்சியாளர்களால் ஏவிவிடப்பட்டன.

ஹிஜாப் அணிந்த பெண்கள் 'விபச்சாரிகள்' என்று பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

கலிமாவின் 'இலாஹ்', 'இறைவன் வணக்கத்துக்குரியவன்' என்பது மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன் இன்னொரு பொருளான சட்டங்களைத் தர வல்லவன் என்பது புறக்கணிக்கப்பட்டது. இதை பறைச்சாற்றும் 'பாங்கோசை' முஸ்லிம் நாடுகளில் தடை செய்யப்பட்டது.

இதிலிருந்து மீளும் போராட்மே இன்றைய செய்திகள்.

ஆக,
  • இஸ்லாத்தைப் பின்பற்றுவதும், 
  • அதை அடுத்தவர்க்கு எடுத்துச் சொல்வதும், 
  • அதன் அடிப்படையில் கூட்டமைப்பை உருவாக்குவதும்.. 
  • அல்லது ஏற்கனவே இப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள கூட்டமைப்பை பலப்படுத்துவதும்,
  • அதன் அடிப்படையில் சமூக மாற்றத்தை உருவாக்குவதும் 
இன்று முஸ்லிம்கள் முன் உள்ள கடமையாகும்.

இது அந்தந்த நாட்டு மக்கள் அவரவர் நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஒப்ப தீர்மானிக்க வேண்டிய அதி முக்கிய விஷயம் என்பது கவனிக்கத்தக்கது. 

0 comments:

Post a Comment