NewsBlog

Saturday, March 9, 2013

KIDS WORLD - குழந்தைகள் உலகம்

பிரிட்டனில், ஆண்டுதோறும்
• நான்கு பேரில் ஒருவர் மனநலம் பாதிக்கப்படுகிறார்.
• பதட்டம் மற்றும் மனஅழுத்தங்களே மனநல பாதிப்புக்குக் காரணம்.
• மனநலம் பாதிக்கப்பட்டோரில் ஆண்களைவிட பெண்கள் விரைவில் குணமடைகிறார்கள்.
• 10 விழுக்காடு குழந்தைகள் ஏதாவது ஒரு வகையான மனநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
• மனஅழுத்தங்களால் ஐந்து பேரில் ஒரு முதியவர் பாதிக்கப்படுகிறார்.
• பெண்களைவிட மூன்று மடங்கு ஆண்கள் மனஅழுத்தங்களால் தற்கொலைக்கு ஆளாகிறார்கள் - என்கின்றன பிரிட்டன் புள்ளிவிவரங்கள்.

இந்திய மக்கள் தொகையில்,
• 7 விழுக்காடு பேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.
• இந்திய மக்கள் தொகையில் மனநலம் பாதிக்கப்பட்ட 70 மில்லியன் பேரில், நகர்புறங்களில் வசிக்கும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை அளிக்கப்படாதவர்கள். இதுவே கிராமப்புறத்தாரோடு ஒப்பிடுகையில் 90 விழுக்காடு.
• மத்திய அமைச்சரவையின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையின் தகவலின்படி, இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டோரில் 25 விழுக்காடு பேர் வீடற்றவர்கள்.

மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் போன்ற இவர்களை தகுந்த மருத்துவம் மூலமாக குணமாக்கலாம்.

தொடரான அந்த மருத்துவ உதவிகளை அவசரமான உலகில் செய்ய முடியாத உறவினர்கள் இவர்களை அநாதைகளாக விட்டு விடுகிறார்கள்.

இது சக மனிதர்களிடையே மேலெழுந்து வரும் தன்னலப் போக்கின் விளைவு என்றுகூட கூறலாம்.

மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கற்பனை தையற்கலைஞராக தமது பணியில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்ட காட்சி இது!

'விழிகள்' நெஞ்சை சூழும் பெரும் சுமையோடு இந்த பதிவை வெளியிடுகிறது.

0 comments:

Post a Comment