NewsBlog

Friday, March 8, 2013

CANTEEN FOR PEOPLE - மலிவு விலை உணவகம்

சென்னை மாநகராட்சி ஒன்றாவது வட்டம், எண்ணூர் தாழங்குப்பத்தில் தமிழக அரசின் மலிவு விலை உணவகம் 06.03.2013 அன்று காலை துவக்கப்பட்டது. தமிழக அரசின் நல்ல திட்டங்களில் இதுவும் ஒன்று. எளிமை, தூய்மை இந்த உணவகங்ளின் சிறப்புத்தன்மை எனலாம்.

ஏழை - எளியோரின் வயிற்றுப் பசியாற்றும் இத்தகைய உணவகங்களுக்காக தமிழ முதல்வரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

அதே நேரத்தில் பல குடும்பங்களை கண்ணீரும் கம்பலையுமாக்கி சோகத்தில் ஆழ்த்தும் டாஸ்மார்க் கடைகளை மூடுவதும் தமிழக முதல்வரின் கடமையாகும்.

ஆயிரக் கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் மது கடைகளை உடனடியாக மூடிவிட்டு.. அதில் பணியாற்றும் ஊழியர்களை இத்தகைய நல்ல திட்டங்களுக்காக பயன்படுத்தலாம். இதுதான் அவர் நிரந்தர முதல்வராக இருப்பதற்கான ஊரறிந்த ரகசியமாகும்!

'விழிகளின்' மற்றுமோர் சமர்பணம் இது!

0 comments:

Post a Comment