NewsBlog

Thursday, November 8, 2012

மியான்மர்: பௌத்த பயங்கரவாதம் ஒரு கட்டுக்கதை அல்ல..! (பகுதி - 2) இனி நான்தான் உங்கள் அல்லாஹ்..!



பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவொழிப்பு தேசிய அளவிலான ஒரு திட்டம் என்று திட்டவட்டமாக கூறலாம். நாட்டின் பௌத்த பிட்சுகள் அனைவரும் கலந்து பேசி ஒட்டு மொத்தமாக எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலான ‘National Project’ – என்கிறார் மலேசியாவின் பன்நூலாசிரியரும் எழுத்தாளருமான டாக்டர்  ஹபீப் சித்திகீ.
 
அதனால், ஆரம்பத்தில் குறிப்பிட்ட கரென் பௌத்தர்கள் சம்பந்தமாக நாளேட்டில் வெளிவந்த செய்தி விஷய ஞானம் உள்ளோருக்கு அவ்வளவாக வியப்புத் தராது.


‘கரென்   ஹீயூமன் ரைட் குரூப்ஸ்’ மே, 2002 இல், வெளியிட்ட ஒர் அறிக்கையில், ‘DKBA’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் – ‘தி டெமாக்ரடிக் கரென் புத்திஸ்ட் ஆர்மி’, அரசு ஆதரவு கூட்டணி, 1994-95 இல், கட்டமைக்கப்பட்டது. இது உருவானதன் நோக்கம், கரென் மாநிலத்தின் பாபுன் மாநகரின் முஸ்லிம் வீடுகளை ஒன்று விடாமல் தரைமட்டமாக்கி விட வேண்டும். அந்த இலக்கை அவர்கள் அடையவும் செய்தார்கள்.


கரென் மாநிலத்தின் பாபுன் மாநகரின் முஸ்லிம் குடியிருப்புகள் ஒன்றுவிடாமல் இடிக்கப்பட்டு தரைமட்டமாயின. இதற்காக பெரிய பெரிய புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டன. முஸ்லிம் வீடுகள் மட்டுமல்லாமல் அவர்களின் வழிபாட்டுத்தலமான மசூதியும் இடிக்கப்பட்டது. இத்தனை அக்கிரமங்களையும் செய்துவிட்டு புதிதாக பௌத்த குடியிருப்புகளை முஸ்லிம்களே கட்டித் தர வேண்டும். அதற்காகும் மொத்த செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் என்று முஸ்லிம்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.


 பஆன் மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் சொல்கிறார்:

“நாங்கள் 50 க்கு 60 அடியில் ஒரு பெரிய மசூதியைக் கட்டியிருந்தோம். அதன் முகப்பில் அழகான மினாராக்கள் வேறு. இரண்டு மாடிகள் கொண்ட அழகான மசூதி அது. அவர்கள் ‘DKBA’ யினர் திரண்டு வந்து பெரிய பெரிய புல்டோசர்களைக் கொண்டு வந்து மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டார்கள்.

எங்கள் கண்ணெதிரே இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட மசூதி இடித்து தரைமட்டமாவதை ஒன்றும் செய்ய இயலாதவர்களாய் சோகமாய் பார்த்துக் கொண்டிருந்தோம்.

இடிபாடுகளை அவர்கள் அகற்றும்போது, அமர்ந்திருந்த எங்களிடம் ‘Ma Auye Leh Ka la’ (கருப்பு (இந்திய) விபசாரிகளுக்குப் பிறந்தவர்களே!) என்று திட்டினார்கள்.

பள்ளிவாசலை இடித்த அதே இடத்தில் புத்த ஆலயத்தை நிறுவினார்கள்.

நாடற்ற கருப்பர்களே (இந்தியர்களே!), நீங்கள் இனி இங்கிருக்க முடியாது. உடனே இங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்தார்கள்.


புத்தர் கோயிலைக் கட்டும் போது அதற்கான கல்லையம், மண்ணையும் எங்களைக் கொண்டே சுமக்க வைத்தார்கள். கட்டுமான செலவுக்காக 2 லட்சம் கியாட் தொகையை (சுமார் 17 லட்சம் ரூபாய்) உடனுக்குடன் கட்டச் சொன்னார்கள். அப்படி கட்டாவிட்டால்.. எங்கள் அனைவரையும் கொன்றுவிடப் போவதாக சொன்னார்கள்.

புத்த பிட்சுகளில் ஒருவன் இப்படி சொன்னான்: “இதோ பார்! நான் உறையிலிருந்து வாளை உருவி யாரையம் கொல்லாமல் உறைக்குள் இதுவரை போட்டதே இல்லை. என்னை வாளை உருவ வைத்துவிடாதே!”

கிராமவாசிகளான நாங்களோ ஏழை – பாழைகள்! உயிருக்குப் பயந்து எங்களிடமிருந்த எல்லவற்றையும் கொடுத்து உயிர்களைக் காத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எங்களுக்கு!”


சில ஆண்டுகளுக்கு முன் நடந்த பழைய சம்பவம் ஒன்றை மற்றொருவர் பகிர்ந்து கொள்கிறார்:

ஏப்ரல் 10, 2000- இல், நடந்தது இது.

‘சல்வென்’ ஆற்றின் கிழக்குப் புறம் அமைந்துள்ள கிராமம்தான் ‘’டி கிவ் போ’. 500 முஸ்லிம்களின் குடியிருப்புகள் கொண்ட கிராமம் இது. DKBA இன் தலைமையகம் அமைந்துள்ள மேயிங் கி நாகு விற்கு தென் கிழக்கில் அமைந்திருந்ததுதான் துரதிஷ்டம்.

மாலையில், பயங்கரமான ஆயுதங்களுடன் படைதிரண்டு வந்த DKBA பௌத்த பயங்கரவாதிகள் பள்ளிவாசலின் இமாமை (குருவை) அடித்து, உதைத்து பள்ளிக்கு வெளியே இழுத்து வந்தனர். பதைபதைப்புடன் நின்றிருந்த எங்கள் கண் முன்னாலேயே பள்ளிவாசலை புல்டோசரால்.. இடித்துத் தரைமட்டமாக்கினார்கள். எங்கள் பெண்டு பிள்ளைகளோட கதறி அழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எங்களுக்கு.



அவர்கள் வந்த வேலை முடிந்ததும் DKBA யின் தலைவன் எங்களை நோக்கி வந்தான். பயத்தால் வெளிறி போய் நின்றிருந்த எங்களிடம் வந்தவன் துப்பாக்கியை எங்கள் தலைகளில் அழுத்தியவாறே சொன்னான்: “Ka La (இந்திய) நாய்களே, நாளை நாங்கள் இங்கே திரும்பி வரும்போது, உங்கள் முகத்தை நான் பார்க்கக்கூடாது. இந்த இடம் Ka La (இந்தியர்களின் –கருப்பர்களின்) நாடல்ல. கருப்பர்களுக்கு இந்த மண்ணில் இடமில்லை. நீங்கள் வணங்கும் கண்ணுக்குத் தெரியாத அல்லாஹ் இதோ இனி நான்தான்! உங்களின் கடவுளான – அல்லாஹ்வான நான் சொல்வதையே இனி நீங்கள் கேட்டாக வேண்டும். என்ன புரிகிறதா?”- என்று மிரட்டலானான்.

இனி நீங்கள் அனைவரும் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். சைவ உணவுகளை உண்ண வேண்டும். அல்லாஹ்வை வணங்குவதை கைவிட்டு புத்தரையே வணங்க வேண்டும்.

கடைசியாக அவன் இப்படி சொன்னான்:

“நீங்கள் இங்கிருக்க விரும்பினால்.. நீங்கள் அனைவரும் மதம் மாறி புத்தரை வணங்க வேண்டும்!”

கடைசியில் பாட்டன்- முப்பாட்டன் காலத்துக்கு முன்னிருந்து அந்த மண்ணில் வசித்துவந்த மண்ணின் மைந்தர்கள் அந்த கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக வேண்டி வந்தது.

ஆம்..! அந்த 500 முஸ்லிம் குடும்பங்களும் அந்த மண்ணில் வாழ்ந்த தடயமே தெரியாமல் மௌன அழுகையுடன் அந்த கிராமத்தை விட்டே வெளியேற வந்தது.  
-                              
 

------ இறைவன் நாடினால்.. தொடரும்.

0 comments:

Post a Comment