அந்த ஆன்மா எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்றுவிட்டது.
ஆம்.. அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டார். நான்காண்டுகளுக்கு பிறகு ஏராளமான சர்ச்சைகளுடன் ஒரு மனித வரலாறு முடிக்கப்பட்டது. நீதியின் பெயரால்.. சட்டம் என்ற இருட்டறையில் சட்ட ரீதியான அரசு சார்பான கொலை என்றுகூட இதைக் கூறலாம். இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றியதையொட்டி காங்கிரஸ் மற்றும் சங்பரிவார் கூட்டம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று வெற்றி விழா எடுத்துள்ளனர்.
ஆனால், இதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் இதே இந்திய உபகண்டத்தின் மற்றொரு பகுதியில் தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டதைவிட ஒரு கொடிய சம்பவம் நடந்தது. குஜராத் மாநிலத்தில் நாட்டின் குடிமக்களின் ஒரு பகுதியினருக்கு எதிராக நடந்த வன்முறை இது. ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் சட்டவிரோதமாக ஒரு மாநிலத்தின் ஆட்சியாளர்களால் கொடுரமாகப் பறிக்கப்பட்ட துரதிஷ்டம் இது. ஆனால், அதற்கு காரணமான கொலைக்காரர்கள் யாரும் இதுவரையிலும், கழுமரம் ஏற்றப்படவில்லை. இதோ இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. மீண்டும் இதே கொலைக்காரர்கள் அரியணையில் ஏறப்போகிறார்கள்.
இந்த சூழலில் இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தை நான் இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.
யார் யார் எல்லாம் நமது நாட்டின் அநீதியாளர்களின் கரங்களில் சிக்கி நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த வரலாற்று நிகழ்வை சமர்பிக்கின்றேன்.
ஒருநாள்
ஜனாதிபதி உமர் அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு ஒரு எகிப்தியர்
வந்தார். “அஸ்ஸலாமு அலைக்கும்! – உங்கள் மீது இறைவனின் சாந்தியும் - சமாதானமும் உண்டாவதாக!
– என்று முகமன் கூறினார். “உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும்-சமாதானமும் உண்டாவதாக!”
– என்று அவரும் பதிலளித்தார்.
அந்த
வழிப்போக்கர் ஜனாதிபதியின் பக்கத்தில் அமர்ந்தார். பேச ஆரம்பித்தார்.
“ஜனாதிபதி
அவர்களே! நான் ஒரு வழக்கு சம்பந்தமாக தங்களைச் சந்திக்க வந்திருக்கின்றேன். எனக்கு
நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. அதேசமயம் பாதுகாப்பும் கிடைக்கும் என்ற பட்சத்தில்
என் வழக்கை முறையிடுவேன்!” – என்றார்.
“கண்டிப்பாக..”
- என்று கூறிய உமர் அவர்கள், “நீதியும், பாதுகாப்பும் உங்களுக்குக் கிடைக்கும் என்று
உறுதியளிக்கிறேன். அச்சப்படாமல் விஷயத்தைச் சொல்லுங்கள்!” – என்றார்.
எகிப்தியர்
சொல்லானார்.
“எகிப்தின்
கவர்னர் அமர் பின் அல் ஆஸ், குதிரைப் பந்தயம் நடத்தத் திட்டமிட்டார். அரபியர்களைப்
போலவே எகிப்துவாசிகளான நாங்களும் குதிரைகள் மீது எந்தளவு பிரியம் வைத்திருப்பவர்கள்
என்று தங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகவே பல குதிரைகள்
உண்டு.
அதனால்,
குதிரைப் பந்தய விளையாட்டுப் போட்டிகள் சம்பந்தமான அறிவிப்பு எங்களை உற்சாகமூட்டியது.
அத்துடன் அதில் பங்கெடுக்கவும் வைத்தது.
நானும்
ஓர் அழகிய அற்புதமான குதிரையை வளர்த்து வருகின்றேன். போட்டியில் என் குதிரை நிச்சயம்
வெற்றி பெறும் என்று எனக்கு உறுதியான நம்பிக்க இருந்தது.
பந்தயம்
ஆரம்பமானது.
குதிரைகள்
நாலுகால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தன.
குதிரைகள்
ஒவ்வொரு முறையும் பந்தய மைதானத்தைச் வலம் வரும் போதெல்லாம் யாருடைய குதிரை முன்னணியில்
இருந்தது என்பது தெளிவாகவே தெரிந்தது.
ஆரம்பத்தில்
பின்தங்கியிருந்த எனது குதிரை பிறகு மின்னல் வேகமெடுத்து எல்லாக் குதிரைகளையும் பின்னுக்குத்
தள்ளியது. வெற்றி இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தது.
இரண்டாவது
சுற்றிலும் இவ்வாறே நடந்தது.
மூன்றாவது
சுற்றின் போது கவர்னரின் மகன் முஹம்மது, ‘என் குதிரை முன்னால் வருகிறது..! என் குதிரை
முன்னால் வருகிறது!!’ - என்று எழுந்து நின்று சத்தம் போட ஆரம்பித்தார்.
ஆனால்,
நான் அமர்ந்திருந்த இடம் வரும்போது, வழக்கம் போலவே எனது குதிரதான் நாலு கால் பாய்ச்சலில்
முன்னால் ஓடிக் கொண்டிருந்தது. அந்தக் கணத்தில் எனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல்
போனது. அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து நின்று குதித்து நடனமாட ஆரம்பித்தேன்.
இறைவனின்
அருளால் எனது குதிரை வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டது. இந்நிலையில் என்னிடம் வந்த முஹம்மது,
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல்.. எந்தவிதமான காரணமும் இல்லாமல்.. ‘நீ வெகு சாதாரமானவன்! நானோ கவர்னரின் மகன்! பெரும்
கனவானனின் குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னோடவா போட்டி போட்டு ஜெயிக்கிறாய்?’ - என்று
என்னை சவுக்கால் விளாச ஆரம்பித்தார்.
இதற்கு
பிறகு நடந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை ஜனாதிபதி அவர்களே..! நான் எங்கே தங்களிடம்
வந்து உண்மைகளை சொல்லிவிடுவேனோ என்று பயந்து போன கவர்னரின் மகன் அப்பாவியான என்னை சிறையில்
அடைத்துவிட்டார்.
என்
கதையைக் கேள்விப்பட்ட சிறைக்காவலர் ஒருவர் என் மீது இரக்கப்படவில்லை என்றால்.. இந்நேரம்
நான் தங்கள் முன் அமர்ந்திருக்க முடியாது. என் வழக்குக் குறித்து முறையிட்டிருக்கவும்
முடியாது!’ – என்றார்.
நடந்ததைக்
கேள்விப்பட்ட ஜனாதிபதி உமர் மௌனத்தில் மூழ்கிவிட்டார். சற்று நேரம் கழித்து, “நீங்கள்
இனி நிம்மதியாக இருக்கலாம் சகோதரரே! உங்களுக்குக் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும். அதுவரை
தாங்கள் இங்கேயே தங்கியிருக்கலாம்!.- என்று கூறினார்.
பின்னர்,
ஜனாதிபதி எகிப்து கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். கவர்னரும், அவரது மகன் முஹம்மதுவும்
உடனடியாக தலைநகர் மதீனாவுக்கு வரவேண்டும் என்று ஆணையிட்டார்.
ஜனாதிபதியின்
கடிதத்தைக் கண்டதும் அமர் பின் அல் ஆஸ் பதறிவிட்டார். ஏதோ தவறு நடந்தவிட்டதைப் புரிந்துகொண்டார்.
தனது மகனை அழைத்து, “என்ன நடந்தது?” - என்று கவலையுடன் விசாரிக்கவும் செய்தார். “அதெல்லாம்
ஒன்றுமில்லையப்பா!” - மகன் அதன் விபரீதம் தெரியாமல் சமாளித்தார்.
“அப்படியென்றால்..
ஜனாதிபதி நம்மை தலைநகர் அழைத்திருப்பது எதற்காக? நீ என்னிடத்தில் எதையோ மறைக்கிறாய்!
சரி புறப்படு சீக்கிரம்..”
உடனே
மதீனாவுக்குப் புறப்பட்டார்.
நீண்ட
பயணத்துக்குப் பிறகு இருவரும் மதீனா வந்தடைந்தார்கள். நேராக மஸ்ஜிதுன் நபவி சென்றடைந்தார்கள்.
கூட்டம்
சேர்ந்துவிட்டது.
தங்களின்
பெருமதிப்பிற்குரிய தோழரும், எகிப்து கவர்னருமான அமர் பின் அல் ஆஸைக் கண்டதும் மக்கள்
குசலம் விசாரிக்க ஆரம்பித்தனர்.
சற்று
நேரத்தில் ஜனாதிபதி உமர் அவர்களும் அங்கே வந்து சேர்ந்தார்.
வழக்கமான
சம்பிரதாய உபசரிப்புகள், நலன் விசாரிப்புகள் எதுவும் இல்லை.
நேரடியாக
விசாரணையைத் துவக்கினார் ஜனாதிபதி உமர்.
“எங்கே
உமது மகன்?”
தந்தைக்குப்
பின்னால் தயங்கி தயங்கி நின்றிருந்த முஹம்மது தலை குனிந்தவாறு முன்னால் வந்து நின்றார்.
“எங்கே
அந்த எகிப்தியர்?”
“இதோ
இங்கே இருக்கிறேன் ஜனாதிபதி அவர்களே!”
ஜனாதிபதி
உமர் தம்மிடமிருந்த சவுக்கை எடுத்து எகிப்தியரிடம் நீட்டினார்.
“ம்..
உங்களைச் சவுக்கால் அடித்தது போலவே இதோ இந்த கவர்னரின் மகனையும் அடியுங்கள்..!” - என்று
ஆணை பிறப்பித்தார்.
சவுக்கைப்
பெற்றுக் கொண்ட அந்த எகிப்தியர் கவர்னரின் மகனை சாட்டையால் விளாச ஆரம்பித்தார்.
உமரோ
தமது முகத்தில் எந்தப் சலனத்தையும் காட்டவில்லை.
“..
ம்.. இன்னும் வேகமாக அடியுங்கள்..! பயப்பட வேண்டாம்! நான் இருக்கின்றேன். இன்னும் வேகமாக
அடியுங்கள்.!” - என்று ஆர்வமூட்டுவது போல சொன்னார்.
எகிப்தியர்
சவுக்கால் அடித்து முடித்ததும், கவர்னரின் மகனான முஹம்மது தலைகுனிந்தவாறே அங்கிருந்து
அகன்றார்.
இப்போது,
ஜனாதிபதி உமரின் குரலில் கடுமை ஏறியது. “யாருடைய அதிகாரமும், செல்வாக்கும் அவரது மகனை
பிறரைவிட உயர்ந்தவன் என்று எண்ண வைத்ததோ.. சமான்யமானவர்களுக்கு எதிராக குற்றமிழைக்க
தூண்டியதோ.. அந்த கவர்னருக்கும் இப்போது சில சவுக்கடிகள் கொடுங்கள்.”
இதைக்
கேட்டதும் அம்ரின் முகம் சுருங்கிவிட்டது.
சுற்றி
நின்றிருந்த மக்கள் சிலையாக சமைந்துவிட்டார்கள்.
எகிப்தியர்
தெளிவான குரலில் சொன்னார்: “இல்லை ஜனாதிபதி அவர்களே! என்னை அடிதததற்காக பழிக்குப் பழி
வாங்கியாகிவிட்டது. கவர்னரின் மீது எந்தத் தவறும் இல்லை.”
“நீங்கள்
அடிக்க விரும்பினால்..அதைத் தடுப்பவர் இங்கு யாருமில்லை!” - என்றார் ஜனாதிபதி உமர்.
அதன்
பின் கவர்னர் பக்கம் திரும்பி, “ஒவ்வொரு மனிதனும் தாயின் கருவறையிலிருந்து சுதந்திரமானவனாகப்
பிறக்க, அவர்களை நீங்கள் எப்போதிலிருந்து அடிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டீர்கள்?” –
என்று காட்டமான குரலில் கேட்டார்.
அம்ர்
தனது மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இனி அத்தகைய தவறுகள் நடக்காமல்
பார்த்துக் கொள்வதாய் உறுதி அளித்தார்.
ஜனாதிபதி உமர் எகிப்தியரின் பக்கம் திரும்பினார்.
“சகோதரரே,
இனி நீங்கள் உங்கள் நாட்டுக்குச் சென்று நிம்மதியாக வாழலாம். உங்களுக்கு திரும்பவும்
ஏதாவது பிரச்சினை என்றால்.. தயங்காமல் உடனே என் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்!” –
என்று தைரியமூட்டி அனுப்பி வைத்தார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை எகிப்தியர் கண்ணால் கண்டார். ஜனாதிபதியிடம்
விடைபெற்றுக் கொண்டார்.
இத்தகைய சம நீதியை நாம் காணப்போவது எப்போது?
0 comments:
Post a Comment