இரண்டு வாரங்களுக்கு முன் தி மியான்மர் போஸ்ட் பத்திரிகை ஒரு செய்தியை முகப்பு பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அக்.14 அன்று 'பஆனின் மாய் பவுங்கில்' நடந்த கூட்டத்தைப் பற்றிய செய்தி அது. கூட்டத்தை நடத்தியவர்கள் 'கரென் ரிலிஜியஸ் புரொடொக்ஷன் ஆர்கனைசேஷன்' என்ற அமைப்பினர்.
இதில் என்ன விசேஷம்? என்று கேட்டால்.. அந்தக் கூட்டத்தில் 100 பேருக்கும் மேலாக புத்த பிட்சுகள் கலந்து கொண்டதுதான்!
இதில் 'பாஆன்' பெருநகரத்து மாநகராட்சி முதன்மை நிர்வாகிகள் ஒன்பது பேர் கலந்து கொண்டது இன்னும் முக்கியமானது.
சாதாரண நேரத்தில் இத்தகைய கூட்டங்கள் யாருடைய புருவங்களையும் உயர்த்தாது. ஆனால், இனவாத மோதலின் அதி தீவிரப் போக்கு பர்மிய சமூகத்தில் தலைவிரித்தாடும் அசாதாரண சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
பர்மிய மக்களின் பாதுகாப்பு அமைப்பு என்று சுயமாக தன்னை அழைத்துக் கொண்ட இந்த அமைப்பு அந்தக் கூட்டத்தில் சில முக்கியமான சட்டங்களை இயற்றியது. அதில் குறிப்பாக ஒரு நான்கு சட்டங்கள்.. கட்டளைகள் முக்கியமானவை. அவை:
- பர்மிய முஸ்லிம்களுக்கு பெளத்தர்கள், வீடுவாசல்களையோ, தோட்டம் துறவுகளையோ.. விற்கவோ அல்லது வாடகைக்கோ.. குத்தகைக்கோ விடக்கூடாது.
- பௌத்தப் பெண்கள் ஒரு காலும் முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்து கொள்ளக்கூடாது.
- பெளத்த சமயத்தவர்கள்தான் பெளத்த கடைகளில் பணிக்கமர்த்தப்பட வேண்டும்.
- எக்காரணத்தைக் கொண்டும்.. பௌத்தர்கள் முன்னின்று தங்கள் பெயரால்.. முஸ்லிம்களுக்கு சொத்துப்பத்துக்களை நிலம், நீசுகளை வாங்கித் தரவே கூடாது.
இதை மீறுபவர்கள் கடுந் தண்டனைக்கு ஆளாவார்கள்.
இந்தக் கட்டளைகளை 'பஆங்' நகரம் முழுவதும் துண்டறிக்கைகளாய் வீடு தோறும் விநியோகம் செய்யப்பட்டன. அந்நகருக்கு வந்திருந்த கரென் பிரதமக்கும், மக்களவைத் தலைவர், மாநில உள்துறை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அவருடன் வந்திருந்த மற்ற அரசு பிரதிநிதிகளுக்கும் இவை விநியோகம் செய்யப்பட்டன.
நாளேட்டின் முகப்பில் வெளியான இந்தச் செய்தியை 'தென் சென்' அரசாங்கம் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. இத்தனைக்கும் அந்த அரசாங்கம்தான் முற்போக்கு அரசாங்கம் என்றழைக்கப்படுகிறது.
மியான்மர் நாட்டின் மற்றொரு அங்கமான சொந்த சமூகத்துக்கு.. முஸ்லிம்களுக்கு எதிரான இனதுவேஷங்களை அது கண்டு கொள்ளவேயில்லை என்பதே இதன் பொருள். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல என்பது இதன் செய்தியாகும்.
இனவெறிப்பிடித்த பௌத்த துறவிகளுக்கும், அவர்கள் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் பயங்கரவாதத்துக்கும் அரசு ஆதரவு தருகிறது என்று பொருள். முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரசு எதிர்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு இது.
புன்முறுவலுடன் சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் காட்சித் தரும் தலாய் லாமாவுக்கு கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக! இனி தலாய் லாமா கையில் ஜபமணிக்கு பதிலாக அரிவாள் மற்றும் வெடிபொருட்களை எடுத்துக் கொண்டு திரியலாம். பயங்கரவாதி என்று நெற்றியில் வெளிப்படையாக ஒட்டிக் கொண்டு சொற்பொழிவாற்றலாம்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் சிறுபான்மை இனமாக இருக்கும் பௌத்தர்கள் கொடுமைப்படுத்ததுகிறார்கள். அவர்களின் விடுதலைக்காகப் போராடும் மகானாகவே தலாய் லாமா முன்னிறுத்தப்படுவது மட்டுமே மேலை நாடுகளுக்குத் தெரியும். இந்த நினைப்பில்தான் அவை தலாய் லாமை தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகின்றன.
உண்மையில், 50 விழுக்காடுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட கம்போடியாவைச் சேர்ந்த சாம் முஸ்லிம்கள் கொல்லப்படுவதை யாரும் கண்டுக் கொள்வதாயில்லை. மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் அரகான் - ராகின் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட முஸ்லிம்கள் அரசாங்கம் மற்றும் பயங்கரபவாத பௌத்த துறவிகளால் கொல்லப்பட்டு இனசுத்தகரிப்புச் செய்யப்படுவதை உலகில் யாரும் சட்டை செய்வதாய் இல்லை.
கம்போடியா பௌத்த நாடாக வேண்டும் என்ற வெறியில் கமெர் ரோக் முஸ்லிம்கள் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். நம் கண்ணெதிரே அண்டை நாடான இலங்கையில் இதே இனவெறிதான் தலைவிரித்தாடுகிறது. அங்கு தமிழர்களும், தமிழ் முஸ்லிம்களும் பௌத்தவர்கள் அல்லாதவர் என்று முத்திரைக் குத்தப்பட்டு இனவொழிப்புக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தாய்லாந்தும் இதற்கு விதிவிலக்கல்ல. தாய் முஸ்லிம்களும், பயங்கரவாத பௌத்த இனவெறியர்களின் தீவிரவாதத்துக்கு ஆளாகி பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாம் உலக மகா போரின் போது தீவிரவாத பௌத்த இனவெறியர்கள் கொண்ட ஜப்பானிய ராணுவத்தால் மலேசியாவிலும், பர்மாவிலும் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகள் மறக்க முடியாதவை.
பேரரசர் 'ஹிரோ ஹிடோ' தனக்குத் தானே பௌத்தம் மற்றும் தாய் சமயங்களின் தலைவர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதும் ஒரு தனி வரலாறு.
திபெத், சீனா, கொரியா, ஜப்பான், மங்கோலியா, இலங்கை மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பௌத்த இனவெறித் தீவிரவாதிகள் நடத்திய அட்டுழியங்களை தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட நூலை வாசிக்கலாம்:
'BUDDHIST WARFARE', co-edited by Michael Jerryson and Mark Juergensmeyer, Oxford University Press (2009)
--- தொடரும்.
0 comments:
Post a Comment