NewsBlog

Saturday, November 24, 2012

முஸ்லிம்களின் பின்னடைவுக்கு காரணம் என்ன? - பகுதி - 1

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்தியர் அனைவருக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்துவதில் அரசியல் தலைவர்களின் கைங்கரியங்கள், ஆதாயங்கள் இவற்றால்.. அந்த உரிமைகள் சரியாக மக்களிடம் சென்றடைவதில்லை என்பதே உண்மை. களையக்கூடிய குறைபாட்டை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அமைப்பையும் குறை சொல்வது சரியல்ல.


லஞ்சம், ஊழல், லட்சியமற்ற அரசியல்வாதிகள், இவர்களோடு கைக் கோர்த்துக்கொண்ட வளர்ந்துவிட்ட வகுப்புவாதிகள், கல்வியின்மை, சரியான தலைமையின்மை, ஒற்றுமையின்மை போன்றவை முஸ்லிம்களின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாகும். அரசியல் சுயநலங்களாலும், பிரித்தாளும் சூழ்ச்சிகளாலும் இங்கு முஸ்லிம்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடு பிரிவினை அடைவதற்கு முன்னமே விதைக்கப்பட்ட வகுப்புவாதம் என்னும் நச்சுமரங்கள் இன்று காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வளர்ந்து படர்ந்து விட்டுள்ளன. இந்த துவேஷம் காவல் துறையிலிருந்து நீதித்துறைவரை தங்கு தடையில்லாமல் ஊடுருவியுள்ளது. அதனால்தான.. பதவிக்காலம் முடிந்ததும், இத்துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் வகுப்புவாத இயக்கங்களில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.தேர்தல்களிலும் பங்கெடுக்கிறார்கள். வகுப்புவாதிகளின் 50 ஆண்டுகால முயற்சியின் அறுவடை இது.

வகுப்புவாதிகளின் வளர்ச்சியும், அவர்களின் செயல்பாட்டால்... விளையும் கொடுர நிகழ்வுகளும் முஸ்லிம்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. இனம் புரியாத பீதியிலும், அச்சத்திலும் அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

பொதுசிவில் சட்டம் கொணரும் முயற்சியால்.. ஷரீஅத் சட்டங்களுக்கு ஆபத்து!  தங்களது நம்பிக்கைகளுக்கும் தனித்தன்மைகளுக்கும் பேராபத்து என்ற சிந்தனையால்.. அவை பறிப்போகாமல் காப்பதற்கான முயற்சிகளால்.. ஒவ்வொரு காலக்கட்டத்திரும் அவர்களின் முயற்சிகள் திசைத்திருப்பப்படுகிறது. நேரம் செலவாகிறது. இதன் விளைவு தேசநிர்மாணத்தின் பக்கம் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இந்த பங்களிப்பு குறைந்ததன் விளைவாக தேச, சமுதாய, அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் பின்தள்ளப்பட்டுவிட்டார்கள்.



அடுத்தது, நாட்டு விடுதலைக்குப் பின் அவர்களுக்கு சரியான தலைமை அமையாததும் அவர்களின் பின்னடைவுக்கு ஒரு முக்கிய காரணமாகும். "40 ஆண்டுகாலம் கொடிபிடித்தே என் கைகள் காய்ப்பு காய்த்துவிட்டன!" - என்றார் ஒருமுறை மறைந்த முஸ்லிம் லீக்கின் தலைவர்களில் ஒருவரான அப்துல் லத்தீஃப் அவர்கள். காய்ப்புக் காய்த்த கைகள் மாற்றினது வேறொரு கொடி என்பது இறந்தகால வரலாறு. அவர்கள் படிப்பினைப் பெறவில்லை என்பதே இதன் பொருள்..

அரசியல் தலைவர்களால் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டார்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்ல முடியும்! அவர்கள் தங்கள் உழைப்பையும், நேரத்தையும்,  பொருளையும்  குறிப்பிட்ட  கட்சிக்கு அர்ப்பணித்து அதிலேயே கரைந்துருகி தங்களது வளர்ச்சியின் பக்கம் கவனம் செலுத்த தவறிவிட்டார்கள்.

அத்துடன் தேசப்பற்றால் அந்நிய மொழியாம் ஆங்கிலக் கல்வியை புறக்கணித்ததும் முஸ்லிம்களின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

- காரணங்கள் தொடரும்.

4 comments:

  1. முன்பு எப்படி ஆங்கிலம் கற்பது ஹராம் என்று புறக்கனிதார்களோ அதே போல் மீடியா யாவையும் புறகனித்ததன் விழைவு இன்று அதிகாரமற்ற அனாதைகளாக இருகின்றோம் . இப்படியே இருந்தால் மண்புழுக்கள் போன்று ஆகிவிடுவோம்

    ReplyDelete
  2. Sparing your valuable time for sharing your experience.

    ReplyDelete
  3. அருமையான படைப்பு.....
    சஜக்கல்லாஹ் ஹைரன்......

    ReplyDelete
  4. நாம் ஒரு உரிமைக்காக குரல் கொடுக்கும்போது நம்மை திசைதிருப்ப கைவசம் தயாராக விசயங்களை வைத்துள்ளனர் இந்த காவி கபோதிகள்.... அதை புரிந்து கொள்ளாமல் நம் சமூகமும் சமூக தலைமைகளும் குழம்பி நிற்கின்றன....! தெளிவான நேர் கொண்ட தொலை நோக்கு பார்வையுடைய தலைவன் நமது சமூகத்துக்கு கிடைப்பானா...... அல்லாஹ் நாடினால்... கண்டிப்பாக கிடைப்பான்.

    ReplyDelete