இந்திய முஸ்லிம் அமைப்புகளின் முக்கிய அமைப்பான 'ஆல் இண்டியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராத் தில்லி பிஜேபி தேர்தல் கமிட்டியின் தலைவரும், பிஜேபியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான V.K.மல்ஹோத்ராவுக்கு வெள்ளியன்று - 04.04.2014 - வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெற்கு தில்லியின் 'பாட்லா ஹவுஸ்' மற்றும் 'ஜாமியா நகர்' பகுதிகள் தீவிரவாதிகளின் உறைவிடங்களாக விளங்குகின்றன என்று மல்ஹோத்ரா முஸ்லிம்கள் மீது சுமத்திய அபாண்டம் குறித்துதான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
"குற்ற நோக்கம் கொண்ட தீய எண்ணத்தில் எழுப்பப்பட்டுள்ள பொய்யான உங்கள் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. இந்த குற்றச்சாட்டின் விளைவாக இருவேறு சமூக மக்களிடையே பிரிவினையையும், சமூகம், பிறப்பிடம், வசிப்பிடங்களில் பகைமை உணர்வையும் உருவாக்கும்.
மேலும் இது சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும்.
நீங்கள் வேண்டுமென்றே சிறுபான்மை சமூகத்தினரை அவமதித்துள்ளீர்கள். இது சராசரி மனிதரிடையே ஆத்திரமூட்டி, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் போக்குமாகும். சமூகத்துக்கு தீங்கிழைக்கும், ஆத்திரமூட்டும் அறிக்கைகள் விடுவதும், பிரசுரிப்பதும் சட்ட ரீதியான குற்றமாகும்.
குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் மேற்கூறப்பட்ட உங்கள் அறிக்கை அண்டை அயலார் உறவுகளையும், நல்லிணக்கமான சூழலையும், ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே தீய எண்ணங்களையும் உருவாக்க நினைப்பதாகும்.
இந்த பேரிழப்பை எவ்வளவு பெரிய நட்ட ஈட்டுத் தொகையாலும் ஈடு செய்யவே முடியாது!" என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'மல்ஹோத்ரா பொது மக்கள் முன்னிலையில் அதுவும் ஜாமியா நகர் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! அவ்வாறு நடந்து கொள்ள முன்வராவிட்டால் சட்ட ரீதியாக பிரச்னையை எதிர்கொள்ள தாங்கள் தள்ளப்படுவோம்!" - என்றும் ஆல் இண்டியா முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராத் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment