NewsBlog

Thursday, April 3, 2014

'அச்சச்சோ..' கருணாநிதி சிறை! தலைவர் பதவி கைப்பற்ற சதி!!'


"கருணாநிதியை சிறைவைத்து தலைவர் பதவியைக் கைப்பற்ற சதி. அறிவாலயத்தில் குள்ளநரிக் கூட்டம்!" - அழகிரி குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் அவர் பேசியது:

"எனது பிறந்தநாளுக்கு ஆதரவாளர் ஒருவர் மதுரையில் பொதுக்குழு நடைபெறுகிறது என்று போஸ்டர் அடித்ததற்காக கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். அது அவ்வளவு பெரிய குற்றமா?

தனது தந்தை ஷாஜஹானை சிறை வைத்து ஓளரங்கசீப் ஆட்சியைப் பிடித்தது போல திமுத தலைவர் கருணாநிதியை சிறைவைத்து அவரது பதவியைப் பிடிக்க சிலர் முயல்கின்றனர்.

அறிவாலயத்தில் உள்ள குள்ளநரிக்கூட்டம் ஒன்று, தலைவரிடம் எக்குத்தப்பாக என்னைப் பற்றிச் சொல்லி கட்சியிலிருந்து நீக்க வைத்து விட்டனர்" - என்றார் அழகிரி.(ஆதாரம்: தினமணி, 03.04.2014 - முதல் பக்கம்)





0 comments:

Post a Comment