NewsBlog

Sunday, April 6, 2014

நடப்புச் செய்தி: துஹ்லே வகுப்பு கலவரங்கள்: விசாரணை துவங்கியது


16வது, மக்களவைக்கான முதல் சுற்றுத் தேர்தல்கள் நாளை - 07.04.2014 - திங்கட்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் மகாராட்டிர அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஜஸ்டீஸ் ஶ்ரீகாந்த் மால்டே கமிஷன் கடந்த ஆண்டு 'துஹ்லே' வகுப்பு கலவரங்கள் சம்பந்தமான தனது விசாரணையை ஞாயிறன்று - 06.04.2014 - (இன்று) துவங்கியது. 

முதல் கட்டமாக ஜமாஅத்தே உலமா மகாராட்டிரம் (அர்ஷத் மதானீ) பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன் தனது விசாரணையை தொடங்கியது.

விசாரணைக் கமிஷனின் செயலாளர் சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் தங்கள் புகார்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 

மகாராட்டிராவின் துஹ்லேயில், ஜனவரி 2013ல், நடந்த வகுப்பு கலவரங்களை ஒட்டி போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். அத்தோடு நூற்றுக்கணக்கான வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன. 

ஜமாஅத்தே உலமாவின் சார்பாக வழக்குரைஞர்கள் நியாஸ் அஹ்மது, நெஹல் அஹ்மது அன்சாரி, ஷாஹித் நதீம் அன்சாரி, இர்பானி ஹம்தானீ மற்றும் எஸ்.எம்.ஹனபீ ஆகியோர் கமிஷனின் முன் ஆஜரானார்கள்.

இதுவரை 417 பேர் கமிஷனின் முன் ஆஜராகி பிரமாண வாக்குமூலப் பத்திரங்களை தாக்கல் செய்தார்கள்.

மார்ச், 2013ல் அரசாங்கம்  விசாரணைக் கமிஷனை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment