சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Wednesday, November 30, 2016
Tuesday, November 29, 2016
Friday, October 23, 2015
வாழ்வியல் வழிகாட்டி- 'ஓயாமல் ஓதப்படும் திருமறை - திருக்குர்ஆன்'
திருக்குர்ஆன் இறைவனின் திருவேதம். மனிதர்களுக்கு வழிகாட்ட வந்த மறைநூல். இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபிகளாருக்கு அருளப்பட்ட புனித வேதம். ஜிப்ரீயல் (காப்ரீயல்) எனப்படும் வானவர் தலைவர், இறைவனிடமிருந்து இதைக் கொண்டு வந்தார். வரலாற்றுச் சூழல்களுக்கு ஏற்ப இது சிறுக சிறுக அருளப்பட்டது. நபிகளாரால் மனனம் செய்யப்பட்டது. அவர்களின் தோழர்களால் பதிவு செய்யப்பட்டது. நபிகளாரின் வாழ்நாளிலேயே சரி பார்க்கவும் பட்டது.
திருக்குர்ஆன் 114 அத்தியாயங்கள் கொண்டது. 30 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 14 நூற்றாண்டுகளாக மாற்றப்படாமல் அருளப்பட்ட நிலையிலேயே பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இதுவே இந்த இறைவேதத்தின் சிறப்புத் தன்மையாகும். திருக்குர்ஆனில் 6666 திருவசனங்கள் உள்ளன.
திருக்குர்ஆனின் மிகச் சிறிய அத்தியாயம் 'சூரே இக்லாஸ்'. மூன்று வசனங்கள் கொண்டது. 'அல்பகறா' எனப்படும் திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் மிகப் பெரியது. 286 வசனங்கள் கொண்டது.
ஆன்மிகம், வணக்க வழிபாடுகள், சமூகம், பொருளாதாரம், வரலாறு, அறிவியல், போர்கள், மனித உரிமைகள், குடும்பயியல், வாழ்வியல், சமூகயியல் என்று மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டும் திருக்குர்ஆன் மெய்ஞான அறிவுக் கருவூலகமாகும்.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளிப்படாத காலத்தில் அதாவது 7 ஆம் நூற்றாண்டில் திருக்குர்ஆன் இறங்கியது. நபிகளார் எழுதப் படிக்கத் தெரியாதவர். அவரது வாழ்வின் 40 வயதுவரை இததகைய கருத்துக்கள் ஏதும் பேசாதவர். ஆனால், இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் வியக்கும் விதமாக திருக்குர்ஆன் நவீன அறிவியலை உள்ளடக்கியுள்ளது. இதுவே திருக்குர்ஆன் படைத்தவனால் அருளப்பட்டது என்பதற்கு போதிய சான்றாகும்.
திருக்குர்ஆனில் இறங்கிய முதல் இறைவசனம், 'இக்ரா' ஓதுவீராக!(96:1-15) என்பதாகும். அதேபோல, இறுதியாக அருளப்பட்ட திருவசனங்கள், "இன்று உங்களுடைய தீனை .. வாழ்க்கை நெறியை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை உங்களுடைய 'தீன் - வாழ்க்கை நெறியாக' ஏற்றுக் கொண்டேன்" (5:3) என்ற வசனங்களாகும்.
திருக்குர்ஆன் 23 ஆண்டு காலம் ... காலச் சூழல்களுக்கு ஏற்ப அருளப்பட்டது. இதன் இறுதி வசனம் இறங்கிய நேரத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கும் அதிகமான இறையடியார்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்கள். 10 லட்சம் சதுர மைல்கள் வரை இஸ்லாம் பரவியிருந்தது.
திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மூல மொழி அரபி. தகவல் தொடர்புக்கு மிகவும் பொருத்தமான வளம் கொண்ட மொழி இது. ஆழ்ந்த கருத்துச் செறிவு, உயரிய இலக்கிய நடை, இனிய ஓசை நயம் போன்ற எண்ணற்ற சிறப்புகள் கொண்டது. இன்றைய உலகின் 30 கோடிக்கும் அதிகமான மக்களின் தாய் மொழி. ஐ.நா.மன்றத்தின் அதிகாரப் பூர்வமான சர்வதேச அந்தஸ்து பெற்ற மொழி.
திருக்குர்ஆன் அருளப்பட்ட மூல மொழியிலேயே இன்றும் ஓதப்படுகிறது. சராசரி முஸ்லிமும் மூல மொழியிலேயே திருக்குர்ஆனின் சில வசனங்களையாவது மனனம் செய்திருப்பார்.
23 ஆண்டு காலம் சிறுகச் சிறுக அருளப்பட்ட திருக்குர்ஆன், தோல் துண்டுகள், கால்நடைகளின் எலும்புகள், பேரீச்சம் ஓலைகளில் எழுதிப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் பணிக்காக மிகச் சிறந்த எழுத்தாற்றல் மற்றும் நினைவாற்றல் கொண்டவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இயல்பாகவே அரபிகள் நினைவாற்றல் மிக்கவர்கள். மனனம் செய்வதில் வல்லவர்கள். வரலாற்றுப் பூர்வமான மூதாதையர்களின் நெடிய பெயர்பட்டியலைக் கூட அவர்கள் தலைமுறை தலைமுறையாய் மனப்பாடமாக ஒப்பிவிப்பார்கள். நீண்ட கவிதைகளைக்கூட சரளமாக மனப்பாடம் செய்துவிடுவார்கள். இத்தகைய சிறப்பியல்புகள் கொண்டநபித்தோழர்களால் திருக்குர்ஆன் மனனம் செய்யப்பட்டது.
இதன் மூலம் திருக்குர்ஆன் 'ஒலி-வரி' வடிவங்களில் அட்சரம் மாறாமல் பதிவு செய்யப்பட்டது. அத்தோடு பல நூறு நபித்தோழர்களால் மனனம் செய்யப்பட்ட திருக்குர்ஆன் தொழுகையில் ஓதப்படுவதும் அதன் பாதுகாப்பின் மற்றொரு காரணமானது.
நபிகளாரின் துணைவியார் அன்னை ஆயிஷா திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள்.
நபிகளாரின் மரணத்துக்குப் பிறகு அதாவது ஆறு மாதங்களுக்குள் திருக்குர்ஆனை நூல் வடிவில் தொகுக்கும் பணி தொடங்கியது.
நபிகளாருக்குப் பின் இஸ்லாமியப் பேரரசின் தலைவராக அதாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அபூபக்கர் இந்தத் திருப்பணியைத் துவக்கினார்கள். இதற்காக நபிகளாரின் பிரதம எழுத்தராக இருந்த நபித்தோழர் 'ஜைத் பின் ஸாபித்' தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பணியின் போது நபிகளாரின் காலத்தில் தோல்களிலும், எலும்புகளிலும், ஓலைச்சுவடிகளிலும் எழுதப்பட்டு பத்திரப்படுத்தியிருந்த திருக்குர்ஆனின் மூல வடிவம் பாதுகாப்புடன் இருந்தது. அதேபோல, நபிகளாரிடம் நேரிடையாகவே திருக்குர்ஆனின் வசனங்களைக் கேட்டு மனனம் செய்திருந்த நூற்றுக்கணக்கான நபித்தோழர்களும் உயிருடன் இருந்தார்கள்.
நபித்தோழர் ஜைத் பின் ஸாபித் அவர்களின் பொறுப்புணர்வு மிக்க மேற்பார்வையில், நபிகளார் அறிவித்திருந்த வரிசைக் கிரமப்படி தொகுக்கப்பட்டு .. நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் முன்னிலையில் ஓதப்பட்டு... சரிபார்க்கப்பட்டு... ஒரே நூலாக ஆக்கப்பட்டது. இந்த தொகுப்பு 'முஸ்ஹஃப்' அதாவது 'ஒன்றிணைக்கப்பட்ட தாள்கள்' எனப்படுகிறது.
மூன்றாம் மக்கள் தலைவராக பொறுப்பேற்ற உஸ்மான் அவர்கள் காலத்தில் இந்த மூலப் பிரதியிலிருந்து பல பிரதிகள் எடுக்கப்பட்டு, பரந்து விரிந்திருந்த இஸ்லாமிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. இந்தத் திருப்பணியும் மூலப் பிரதியை தொகுத்த நபித்தோழர் ஜைத் பின் ஸாபித் அவர்களின் தலைமையிலான குழுவினரிடமே ஒப்படைக்கப்பட்டது.
இப்படி அருளப்பட்ட காலத்திலிருந்து ஒரு புள்ளியோ, எழுத்தோ மாறாமல், அருளப்பட்ட நிலையிலேயே திருக்குர்ஆன் இன்று உலகெங்கும் உள்ள மசூதிகளிலும், ஒவ்வொரு முஸ்லிமின் இல்லத்திலும் பல கோடிப் பிரதிகளின் வடிவில் பாதுகாப்புடன் இருக்கிறது.
உலக மக்கள் தொகையின் அடிப்படையில் ஒவவொரு நான்கு பேரிலும் ஒருவர் முஸ்லிம. இதன்படி சுமார் 200 கோடி முஸ்லிம்கள் தங்களின் தினசரி ஐவேளைத் தொழுகைகளில் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதுகிறார்கள். இந்தத் தொழுகை நேரங்களும் நாடு தோறும் மாறும். இவ்வாறு மாறிவரும் காலச் சூழலில் 24 மணி நேரமும் ஓயாமல் ஓதப்படும் திருமறை உலகில் திருக்குர்ஆன் மட்டும்தான்! திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட முதல் முதல் இறைவசனம் "ஓதுவீராக!" என்ற இறைவனின் கட்டளையைத் தொடர்ந்தே இன்றுவரை அது தொடர்ந்து ஓதப்பட்டு வருகிறது.
திருக்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்தவர்கள் நபிகளாரின் காலத்துக்குப் பிறகும் தொடர்கிறார்கள். இவர்கள் 'ஹாபிஃஸ்கள்-திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள்' என்றழைக்கப்படுகிறார்கள்.
அதேபோல, திருக்குர்ஆனை மனனம் செய்வதற்கும், அதை அடுத்தவர்க்குப் பிழையில்லாமல் ஓதிக் கொடுப்பதற்கும் உலகெங்கும் 'மதரஸாக்கள்' எனப்படும் ஆயிரமாயிரம் கல்விக்கூடங்கள் உள்ளன.
அரேபிய மக்கள் பொதுவாகவே இலக்கியத்தில் ஈடுபாடு மிக்கவர்கள். அவர்களிடையே இசைவாணர்கள் அதிகம். புலமையை வெளிப்படுத்தக் களம் அமைத்துப் போட்டிகளும் நடத்துவார்கள். வெற்றிப் பெறும் கவிதைப் படைப்பு கஅபாவின் தலைவாயிலில் மக்கள் பார்வைக்கு தொங்கவிடப்படும்.
ஒருமுறை.
வழக்கப்படி .. முதல்தர வெற்றிக் கவிதை கஅபாவின் வாசலில் தொங்கவிடப்பட்டது. இந்த நேரத்தில் திருக்குர்ஆனின் 108 ஆவது அத்தியாயமான சூரே 'கவ்ஸர்' இறங்கியது. உடனே நபித்தோழர் ஒருவர் இந்த அத்தியாயத்தை ஓர் அட்டையில் எழுதி ஏற்கனவே கஅபாவில் தொங்கிக் கொண்டிருந்த கவிதைக்குப் பக்கத்தில் தொங்கவிட்டார்.
முதல் தரக் கவிதையைப் படித்த கையோடு மக்கள் 'கவ்ர்' அத்தியாயத்தையும் படித்தார்கள். வெறும் மூன்றே மூன்று திருவசனங்களில் நச்சென்று இருந்த அத்தியாயத்தைக் கண்டு வியப்படைந்தார்கள்.
இலக்கிய நடையழகு, ஓசை நயம், உள் வாங்கியிருந்த அழகிய கருத்துவளம் ஆகியவை பிரமிக்கத்தக்கவையாக இருந்தன. வருவோர், போவோர் உள்ளங்களை ஈர்த்தன. இந்த அத்தியாயத்துக்குப் பக்கத்தில் பெரும் கவிஞர்களில் சிலர் இப்படிக் கருத்து பதித்தார்கள்:
"மா ஹாஸா கலாமுல் பஷர்! - நிச்சயமாக இது மனிதனின் சொல்லாக இருக்கவே முடியாது!"
திருக்குர்ஆன் இஸ்லாத்தின் மூல ஆதார நூல். மனித இனத்துக்கு வாழ்வியலைப் போதிக்கும் இறைநெறி. படைத்தவனால்.. படைப்புகளுக்கு இறக்கியருளப்பட்ட வாழ்கைத் திட்டம்.
"நாம் இந்தக் குர்ஆனை அறிவுரை பெறுவதற்கான எளிய வழியாக அமைத்திருக்கிறோம்!" - (54:17} என்கிறான் இறைவன் தனது திருவேதம் குறித்து.
உலகில் அறிவுரை வெறுவதற்கு இரண்டு வகையான வழிகள் உள்ளன.
ஒன்று, வரம்பு மீறி வாழ்ந்த சமுதாயங்கள் மீது இறங்கிய படிப்பினை தரும் தண்டனைகள்.
அடுத்தது, தகுந்த ஆதாரங்கள், உள்ளத்தை வருடிச் செல்லும் நல்லுரைகள், அழகிய அறிவுரைகள் போன்றவற்றால் பெறப்படும் நேர்வழி.
"முதல் வழியைவிட அறிவுரை பெறுவதற்கான இரண்டாவது வழி எளிமையாக இருக்க... பிறகு நீங்கள் ஏன் படிப்பினைப் பெறுவதில்லை? முரண்டு பிடிக்கிறீர்கள்? - என்ற வினாக்களை எழுப்பி இறைநெறியின் பக்கம் அழைக்கிறது திருக்குர்ஆன்.
Saturday, October 10, 2015
ஆய்வுக் கட்டுரை: 'பசுவதை: சில சரித்திர சத்தியங்கள்!'
- பிரஸ்தோ தாவ் - தாடை எலும்பும் நாக்கும்,
- உத்காதாவ் - வயிறு,
- பிரதிகர்த்தாவ் - கழுத்து,
- மைத்ராவருணன் - வலது தொடையின் கீழ்ப்பாகம்,
- பிராம்ணாச்சம்ஸி - இடது தொடையின் கீழ்ப்பாகம்,
- அச்சாவாகன் - வலது தொடையின் மேல்பாகம்,
- அக்னீதரன் - இடது தொடையின் மேல்பாகம்,
- நேஷ்டாவ் - வலது முன்காலின் கீழ்ப்பாகம்,
- போதாவ் - இடது முன்காலின் கீழ்ப்பாகம்,
- அத்ரேயன் - வலது முன்காலின் மேல்பாகம்,
- ஸதஸ்யன் - இடது முன்காலின் மேல்பாகம்,
- அத்வர்யூ - முதுகோடு சேர்ந்த வலப்பக்கம்,
- பிரதிபிரஸ்தாவ் - முதுகோடு சேர்ந்த இடப்பக்கம்,
- கிராவஸ்துதன் - கழுத்து இறைச்சி,
- சுப்ரமணியன் - தலை
Saturday, June 6, 2015
Monday, April 20, 2015
Friday, April 10, 2015
Tuesday, April 7, 2015
காலப்பெட்டகம்: இடிந்தகரை: சிறைபடாத போராட்டம்: 1, பயத்தோடு வாழ முடியுமா?
படிப்பறிவு இல்லை. பெரிதான கட்டமைப்புக் கொண்ட சமூகமும் அல்ல. கடலுக்குச் சென்றால்தான் வாழ்க்கை என்பதாய் அன்றாடம் காய்ச்சி குடும்பம்தான். மனைவியை நேசிக்கும் குடும்ப பொறுப்புள்ள அன்பான கணவன். இரண்டு சிறு குழந்தைகள் என்றாகிப் போன வாழ்க்கையிலிருந்துதான் சுந்தரி என்னும் அந்த புயல் மையம் கொண்டு, பெரும் சூறாவளியாய் உருவெடுத்து வீசிக் கொண்டிருக்கிறது.
ஆயுதம் ஏந்தாமல், கானகங்களில் மறைந்திராமல், எந்த சட்டம் பொய்யான வழக்குகள் மீது வழக்குகளாய் போட்டு போராட்ட குணத்தை மழுங்கடிக்க நினைக்கிறதோ அதே சட்டத்தை கொண்டு நெடிய போராட்டம் நடத்திவரும் இடிந்தகரை சுந்தரியின் நிஜக் கதை இது.
மக்களுக்காக தெருவில் இறங்கிய ஒரே காரணத்தால் நமது மக்களாட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு வெகுஜனத்திடமும் நடந்து கொள்ளும் முறையை தனது அனுபவங்களிலிருந்தே சமூகத்தின் முன் வைக்கிறார் சுந்தரி.
பெண் என்பவள் ஆணுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவள் அல்ல என்று அணு உலைக்கு எதிராக உக்கிரமாக நடந்துவரும் அறப்போரின் நாயகியாய் தனது தியாகங்களிலிருந்தே ஜொலிக்கும் சுந்தரியின் நிஜக் கதையை அவரே சொல்வதை இனி கேளுங்கள்.
விழுப்புரம், ஐந்திணை வெளியீட்டகத்தாரின் ‘இடிந்தகரை: சிறைபடாத போராட்டம் என்னும் சமகாலத்து வரலாற்று நூலிலிருந்து சில முக்கிய பகுதிகளை பாமரன் நன்றியோடு சகோதரி சுந்தரியின் போராட்ட அனுபவங்களை தொடராய் அளிக்கிறது.
கடல்தாயின் மடியில் தலை வைத்து விளையாடிய மீனவ பெண் நான். எனது 35 வயதுவரை படிக்கும் பழக்கமோ, எழுதும் பழக்கமோ அதிகம் இல்லை. சமுதாயத்தில் நடக்கும் எதன் மீதும், எவ்வித அக்கறையும் இன்றி, தொலைக்காட்சி, சினிமா, பாட்டு, தொலைக்காட்சி தொடர்கள் என்று மட்டுமே வாழ்ந்து வந்த சராசரி சுந்தரி என்ற என்னை அனைவரும் கவனிக்கும்படி மாற்றியது அணுஉலை போராட்டம்தான்! ஒரு பொம்மை போல எதுவும் அறியாமல் வாழ்ந்துவந்த எனக்கு அணுஉலை போராட்டத்தின் மூலம் உயிர் கொடுத்தவர்கள் எங்கள் போராட்டக்குழு தலைவர்கள்தான். அணுஉலைப் போராட்டத்தில் என்னை இணைய வைத்த பெருமையெல்லாம் முதலில் எங்கள் ஊர் பங்குதந்தை பாதர் ஜெயக்குமார் அவர்களையே சாரும்.
வீட்டைவிட்டு வெளியே வந்தபின்தான் இந்த சமூகத்தை முழுமையாக அறிந்தேன். அரசாங்கம், அரசியல் கட்சிகள், அதிகாரிகள் இவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து துடித்துப் போய்விட்டேன்.
அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் இடிந்தகரை பெண்களை உலகெங்கும் தெரியவைத்துள்ளது. எண்ணற்ற பெண்களை பேச்சாளர்களாக மாற்றியது. இந்தியாவில் எங்கு போராட்டம் நடந்தாலும் இடிந்தகரை பெண்களை பேச அழைக்கும் கவுரவத்தைத் தந்தது. எட்டுவயது குழந்தை முதல் எண்பது வயது முதியவர்கள்வரை அணுஉலைப் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களாக மாற்றியதோடு அல்லாமல் அதன் தீய விளைவுகள் குறித்து சரளமான பரப்புரைகளை மக்கள் முன் வைக்க செய்தது. இடிந்தகரையைச் சேர்ந்தவர்கள் அணுஉலைக்கு எதிரான கவிஞர்களாக, ஓவியர்களாக, எழுத்தாளர்களாக மாற்றியதும் இந்தப் போராட்டத்தின் விளைவுகள்தான்!
இந்தப் போராட்டமே எனக்கு சிறை என்ற இன்னொரு உலகத்தை அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. எனது சிறை அனுபவங்களையும், போராட்டக் களத்தில் போராடிய அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதுவேன் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.
சிறையில் இருந்து விடுதலையாகி மதுரைக்கு நிபந்தனை பிணையில் இருந்தபோது போராட்டக் குழு தலைவர்களின் தூண்டுதலால்தான் அந்த 50 நாட்களில் நான் இதை எழுதினேன்.
சிறை போராட்ட அனுபவம் என இதில் எழுதப்பட்டுள்ள எதுவும் நான் மட்டும் பெற்றதல்ல. என்னோடு இணைந்து களத்தில் இருந்த அனைவரும் கூட்டாய் சேர்ந்து செய்த தொகுப்பின் அனுபவங்களாகும்.
12 ஆண்டுகளுக்கு முன், ஒருநாள்.
இடிந்தகரையில் உள்ள எங்கள் தெருவில் பறைச் சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்து வெளியே தெருவில் வந்து பார்த்தேன். அங்கு கல்லூரி மாணவர்கள் தெருவில் பறையடித்து எங்களை எல்லாம் கூட்டி வைத்து ஒரு நாடகம் நடத்தினார்கள்.
அப்போது, எனக்கு அணுஉலை பற்றி முழுமையாகப் புரியவில்லை. கூடங்குளத்தில் இந்தத் தொழிற்சாலை வந்தால் நம்ம ஊரும் பெரிய வசதிகள் உள்ள நகரமாக மாறிவிடும் என நினைத்துக் கொண்டு அப்போது இதைப் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்வில்லை. அணுஉலையின் ஆபத்தும் அப்போது எனக்கு முழுமையாக தெரியாது.
மார்ச் 11, 2011.
புகுஷிமா விபத்து நடந்த சில மாதங்களிலேயே நாகர்கோவிலில் இருந்து வெளிவந்த பேப்பரில், "அணுஉலையைக் கட்டி முடித்து இயக்கும்போது விபத்து ஏதாவது ஏற்பட்டால், மக்கள் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டும். எச்சரிக்கை சத்தம் வந்தவுடன் வீட்டிற்குள் சென்று கதவு, சன்னல் அனைத்தையும் மூடிவிட வேண்டும். மின்சாரத்தை அணைத்துவிட வேண்டும். எந்த உணவுப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. அயோடின் மாத்திரையை உடனே சாப்பிட வேண்டும்!" - என்று எச்சரிக்கை மேல் எச்சரிக்கையாக பிரசுரமாகியிருந்தது.
இப்படிப்பட்ட அணுஉலையை வைத்துக் கொண்டு நாம் வாழ முடியுமா? என்ற கேள்வி ஊரில் அனைவரிடமும் எழுந்தது. என்னால், இந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. உடனே எங்கள் ஊரின் பங்கு தந்தையைச் சந்தித்து, "ஏதாவது செய்யுங்கள் ஃபாதர்!" - என்று கேட்டுக் கொண்டேன்.
இந்த நிலையில்தான் அணு உலையின் சோதனை ஓட்டம் என்ற ஒன்றை நடத்தினார்கள்.
ஊரில் மக்கள் இருக்கவே முடியாத அளவுக்கு மிகக் கொடூரமான, கர்ணகடூரமான, காதுகளைக் கிழிக்கும் சத்தம் தொடர்ந்து சில நாட்கள் கேட்டது. இதனால், ஊரில் யாரும் உறங்கவே முடியவில்லை. குழந்தைகள் பயத்தால் கதறி அழுதவாறு இருந்தன. இப்படி சத்தத்தோடும், பயத்தோடும் பயந்து பயந்து நாங்கள் வாழ முடியுமா?
Friday, April 3, 2015
Monday, March 30, 2015
Wednesday, March 4, 2015
வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதம்
Saturday, January 17, 2015
செங்காந்தல் - கார்த்திகைப்பூ
![]() |
| படம்: இக்வான் அமீர். இடம்: சென்னை - எண்ணூர், காட்டுப்பள்ளி |
Sunday, December 21, 2014
சுமப்பதற்கு கனமான அந்த சவப்பெட்டிகள்
அன்று தாஜ் முஹம்மதுக்கு வித்யாசமான நாள். ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைக்குழிகளைத் தோண்டியதால், அவரது உடலெங்கும் மணல் படிந்திருந்தது. முகத்தில் வியர்வை முத்து முத்தாய் துளிர்த்திருந்தது. இருண்ட முகத்துடன் பெரும் கவலையுடன் அவர் காட்சியளித்தார்
என்றைக்கும் இல்லாத விதத்தில் அன்றைக்கு அவர் மிகவும் பரபரப்பாக, பதட்டமாகவும் காணப்பட்டார். கிடைத்த ஒரு சிறு இடைவெளியில் தேநீர் அருந்தியவாறே அதற்கான காரணத்தையும் சொல்லலானார்: "இதுவரை நூற்றுக்கணக்கான ‘ஜனாஸாக்களை’ (உடல்களை) அடக்கம் செய்துள்ளேன். அதேநேரத்தில், ஒருபோதும் கண்ணீர் சிந்தியதில்லை. ஏனென்றால் மரணத்தின்போது, அழக்கூடாது என்பது இஸ்லாத்தின் பொது விதி.
ஆனால், எனது பணிக்காலத்தில் அந்த விதிமுறைகள் தகர்ந்து போனது இன்றுதான். என்னால், அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. தாங்க முடியாத துக்கத்தால் அழுது விசும்பினேன். இன்னும் அழுது கொண்டிருக்கிறேன். காரணம், நான் அடக்கம் செய்தது ஒருபாவமும் அறியாத நூற்றுக்கணக்கான குழந்தைகளை! இன்று பெஷாவர் கபரஸ்தானுக்கு வரிசையாக வந்து சேர்ந்தன குழந்தைகளின் உடல்கள்.!”
இதை சொல்லும்போதே தாஜ் முஹம்மதுவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
சற்று நேர மௌனத்திற்கு பிறகு தொடர்கிறார்: “ என் கைகளால் சின்னச்சிறு குழந்தையின் ஜனாஸாவிலிருந்து, வளர்ந்திருந்த குழந்தையின் ஜனாஸாவரை ஒவ்வொன்றாக அடக்கம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு நான் தள்ளப்பட்டேன்!.
மரணமுற்ற குழந்தைகளில் மிகச்சிறிய குழந்தையின் உடலைத் தூக்கும்போது இதுவரை நான் சுமந்திராத அளவு அதிக கனத்தை உணர்ந்தேன்.கொல்லப்பட்ட குழந்தையின் உடல் கனத்துடன் மனதின் கனமும் சேர்ந்து கொண்டதே அதற்குக் காரணம் என இப்போது எனக்கு புரிகிறது.
எட்டு குழந்தைகளுக்கு தகப்பனான என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவேயில்லை!" – என்கிறார் தாஜ் முஹம்மது.
உடலை அடக்கம் செய்யும் நல்லடக்க பணிகளுக்காக ஒவ்வொரு உடலுக்கும் தாஜ் முஹம்மதுவுக்கு 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், பெஷாவர் தாக்குதலில் பலியான குழந்தைகளை அடக்கம் செய்யவதற்கு அவர் ஒரு பைசாவும் பெறவில்லை.
பெஷாவரில் ராணுவப் பள்ளிக்கூடத்தில் அண்மையில் தெஹ்ரிக் ஏ தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 மாணவர்கள் உள்பட 149 பேர் கொல்லப்பட்டனர்.







+!!!.jpg)
















