சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Saturday, December 7, 2013
சிறப்புக் கட்டுரை: 'உறைவிடம் சுவனமாக்கிக் கொண்டவர்கள்!'
Friday, December 6, 2013
சிறப்புக் கட்டுரை: 'எவ்வளவோ பிரச்னைகள் இருக்க.. தங்களைப் பற்றியே பேசுவது ஏன்"
அண்மையில், வலைப்பூக்களுக்காக செய்திகளை பதிவேற்றிக் கொண்டிருந்த ஒரு பரபரபப்பான சூழலில் இன்பாக்ஸில் ஒரு நண்பர் அழைத்தார். என் பதிவு சம்பந்தமான ஒரு சிறு விளக்கமும் வேண்டினார். அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்வியும் கேட்டார். அதற்கான பதிலை அளிக்க இயலாமல் அன்றைய இரவு முழுவதும் சரியான உறக்கமின்றி தவித்ததோடு இதுவரையிலும், சங்கடப் பட்டவாறே இருக்கிறேன்.
“நாட்டில் எல்லா மக்களும் பாதிக்கப்படும் வகையில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, இந்த முஸ்லிம்கள் பெரும்பாலும் தங்கள் பிரச்னைகள் பற்றிதான் எப்போதும் பேசிக் கொண்டிருப்பதையே காண்கின்றேன். மற்ற பிரச்னைகளை முஸ்லிம்கள் முன்னெடுத்து செல்வதில்லையே ஏன்? அடுத்தவர் பிரச்னைகளுக்காக அவர்கள் குரல் எழுப்புவதில்லையே ஏன்?”
இஸ்லாத்தின் வருகையே மனித இனத்தின் அடிமைத் தளைகளைத் தகர்த்து அவர்களுக்கு விடுதலைப் பெற்றுத் தருவதுதான் நோக்கம். ஒவ்வொரு இறைத்தூதரும், தீர்க்கத்தரிசியும் இந்தப் பணியைத்தான் செய்யும்படி இறைவனால் பணிக்கப்பட்டார்கள். இதற்காக அருளப்பட்ட வாழ்வியல் வழிகாட்டியான திருக்குர்ஆனும் மனிதர்களை நோக்கிதான் உரையாடுகிறது. அன்பு நபியும் மனித நலன் போராளியாகவே தங்கள் ஜீவிதம் முழுக்க செயல்படுகிறார்கள்.
ஹீரா மலைக்குகையில், முதன்முதலாக இறைவனின் திருச்செய்தி அருளப்பட்டு நபிகளார் இறைத்தூதராக அறிவிக்கப்பட்ட நாள் முதற்கொண்டு சற்றும் அயராது உழைத்து.. அந்த திருச்செய்தியை மக்களுக்கு எப்பாடுபட்டாவது சேர்த்திட துடியாய் துடித்தவர்கள்.
"போர்த்து மூடி உறங்குபவரே! எழுந்திருங்கள்! மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்!" (74:1,2) - இறைக்கட்டளைப் பிறந்ததும், 'ஸபா மலைக்குன்றின் மீது ஏறிக் கொண்டு துளியும் அஞ்சாமல் மக்களை இறைவனின் பக்கம் அழைத்தவர்கள்,
சத்தியத்திற்காக, அதை மேலோங்க செய்ய இரத்த பந்துக்களான உறவினரின் கடும் பகைக்கு ஆளாகி தாய் மண்ணான மக்காவின் தெருதோறும் உதிரம் கொட்டியவர்கள்,
'தாயிப்' எனப்படும் தொலை நகரில் இறைத்தூதை சமர்பிக்கச் சென்றவர்கள், அந்த இறைச்செய்தி நிராகரிக்கப்பட்டு தெருக்களில் ஓட ஓட விரட்டப்பட்டு ரத்தக்களறியாய் ஆனவர்கள்,
13 ஆண்டுக்காலம், தாய் மண்ணில் சொல்லொண்ணாத துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளானவர்கள், சத்தியத்தை சொன்னதற்காக துன்புறுத்தப்பட்டவர்கள்,
தாயகம் துறந்து, மதீனா சென்ற பின்பும் எதிரிகள் நிம்மதியாய் விடுவதாயில்லை. ஒரு 10 ஆண்டுக்காலம், தற்காப்பு யுத்தமுனைகளில் வாள் ஏந்தி நின்றவர்கள் என்று,
திருக்குர்ஆனின் அழைப்பை இதோ கேளுங்கள்: "மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்" (49:13)
திருக்குர்ஆனின் இந்த திருவசனம், நபிகளாரை மனித இனத்துக்கு பொத்தாம் பொதுவானவர் என்கிறது இதோ: “நபியே! நாம் உம்மை மனிதகுலம் முழுமைக்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும்தான் அனுப்பி வைத்துள்ளோம்!” (திருக்குர்அன்: 34:28)
ஹஜ்ஜின் போது, அரஃபா திடலில் ஆயிரக்கணக்கான நபித்தோழர் மற்றும் நபித்தோழியரின் முன்பாக நபிகளார் இனத்தையும், நிறத்தையும் கடுமையாக கண்டித்து உரையாற்றுகிறார்கள். (ஆதார நூல்: முஸ்னது அஹ்மது)
இதை இறைவனும் திருக்குர்ஆனில் இப்படி சுட்டிக் காட்டுகின்றான்: “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே! திண்ணமாக இவற்றில் எல்லாம் அறிவுடையோருக்கு நிறைய சான்றுகள் உள்ளன’ (30:22) (மேலும் படிக்க: http://mrpamaran.blogspot.in/2013/10/blog-post_1122.html)
"இந்தப் பிரச்னையின் தாக்கம் எந்தளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது என்றால்,
- தொழுகை என்ற கடமையை நிறைவேற்றுகின்ற ஒருவர்,
- கல்வி என்னும் கடமையை இகழ்ந்துரைக்கிறார். அதேபோல,
- கல்வி என்னும் கடமையை நிறைவேற்றியவரோ
- சகோதரத்துவம் என்னும் கடமையை குழிதோண்டிப் புதைக்கிறார்.
- சகோதரத்துவம் என்னும் கடமையை வலியுறுத்தும் ஒருவர்
- நபிகளாரைப் பின்பற்றும் கடமையை இகழ்ந்துரைக்கிறார்.
முஸ்லிம்கள் கடமைகளை உயிர்பிக்க முனைவதற்கு முன்பாக மனிதர்களை உருவாக்க முயன்றிருந்தால் இத்தகைய விபரீதங்களை தவிர்த்திருக்கலாம்" - என்கிறார். (ஆதாரம்: அழைப்பின் நிலம், பக்.69)
புற்றீசல்களைப் போன்று பெருகிவரும் பல்வேறு இயக்கங்கள் ஒன்றுபட 'மனிதர்களை' உருவாக்கும் செயல்பாடுகளில் கவனம் செலுத்தினாலே ஒற்றுமை தானாக வந்து பிணைந்துவிடும். அந்த பிணைப்பின் உறுதியில் இழந்து போனவைகள் அனைத்தும் நிலைநிறுத்தப்படும். தங்களைக் காத்துக் கொள்வதோடு பிற மனிதர்களையும் காக்கும் போராளிகளாக்கிவிடும்.
பேரறிஞர் முஃப்தி முஹம்மது ஷஃபி (ரஹ்) தனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தை இப்படி பதிவு செய்கிறார்:
"உலமாக்கள் கூடிப் பேசி மார்க்க விஷயங்களை பரஸ்பரம் விவாதித்து தெளிவு பெறுவதற்கு ஓர் அரும் வாய்ப்பாக அமையும் அந்த மாநாட்டை ஒட்டி அன்றும் காதியான் கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
மாநாட்டின் இரண்டாம் நாள், வைகறை தொழுகைக்குப் பின்னர், மஸ்ஜிதின் திண்ணையில், அல்லாமா கஷ்மீரி சோகமாக அமர்ந்திருந்தார்.
அல்லாமாவுடன் கலந்துரையாடுவது ஒரு பேரின்ப அனுபவமாகும். குர்ஆனில் எந்த இடத்தில் எந்த வசனம் இடம் பெற்றுள்ளது என்பது அவருக்கு அத்துப்படி. நபிமொழிகளை அறிவிப்பாளர்களின் பெயர்களுடன் 'கிடு கிடு' வென பட்டியலிடுவார். எந்தவிதமான பீடிகைகளும் இல்லாமல் பளிச் பளிச்சென்று நேரடியாக பதில் அளிக்கும் வகையைச் சேர்ந்தவர். 'ஃபிக்ஹ் - இஸ்லாமிய சட்டம்', ஷரீஅத் சட்டங்களில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்.
ஒரு கணம் நான் திகைத்துப் போனேன். "ஹஜ்ரத்! நீங்கள் வாழ்வு முழுவதும் கல்விப் பணியிலும், மார்க்கச் சேவையிலுமே கழித்திருக்கிறீர்கள். உங்களுடைய மாணவர்களே ஆயிரக் கணக்கில் இருப்பார்கள். உங்களிடம் கற்றுத் தேர்ந்த அவர்கள் இன்னும் ஏராளமானோருக்கு அறிவு புகட்டிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வாழ்வு வீணாகிவிட்டது என்றால் பிறகு யாருடைய வாழ்வுதான் பயனுள்ள வாழ்வு?" - என்று கேட்டேன்.
"நான் உண்மையைத்தான் சொல்கிறேன். எனது வாழ்வே வீணாகிவிட்டது சகோதரரே!"
"ஏன் அப்படி சொல்கிறீர்கள் ஹஜ்ரத்?"
"என்னுடைய மார்க்கப் பணி, எனது சொற்பொழிவுகள், என்னுடைய கட்டுரைகள், என்னுடைய முயற்சிகள் எல்லாமே ஒரே அச்சில் சுழன்று கொண்டிருந்தன. மற்ற மத்ஹபுகளைவிட ஹனஃபி மத்ஹப்தான் உயர்ந்தது என்பதை வலியுறுத்துவதே என்னுடைய வாழ்க்கைப் போராட்டத்தின் மையக்கருவாக அமைந்து போனது.
இப்போது யோசித்துப் பார்த்தால் எப்படிப்பட்ட அற்பமான விஷயத்தில் வாழ்வை வீணாக்கிவிட்டோம் என்பது தெரிகிறது. இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்) இன்னும் பிற ஃபிக்ஹீ வல்லுநர்களைவிட இமாம் அபூஹனீஃபாவே உயர்ந்தவர் என்று நிரூபிக்க படாதபாடுபட்டேன். அதன் பயன்தான் என்ன?
எந்த மத்ஹப் சரியானது? எந்த மத்ஹப் தவறானது? என்பது இறுதிநாளில் கூடத் தெரியப் போவதில்லை.
இந்த உலகில் ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகும், இதுவும் சரி, இதுவும் சரி, இதுவும் சரிதான் என்று நான் சொல்ல முடியும். அவ்வளவு ஏன்? மண்ணறையில் முன்கர், நக்கீர் என்னும் வானவர்கள்கூட, 'ஆமீன் மெதுவாகச் சொல்ல வேண்டுமா? சத்தமாக சொல்ல வேண்டுமா?' - என்று வினவ மாட்டார்கள்.
சட்டங்களைத் தொகுத்துத் தந்த எந்த இமாமையும் இறைவன் மறுமை நாளில் அவமானப்படுத்த மாட்டான்.
அந்த மனிதப் புனிதர்களுக்கு இறைவன் அளப்பெரும் அறிவைத் தந்தான். மனிதர்களில் பெரும் பிரிவினரை அவர்களின் வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக ஆக்கியிருக்கிறான். அவர்கள் சத்திய ஒளியை உலகெங்கும் பரப்பினார்கள். அவர்களது வாழ்வு மார்க்க ஒளியை பரப்புவதில் கழிந்தது. எனவே, நிச்சயமாக அவர்களை மஹ்ஷர் மைதானத்தில் நிறுத்தி அபூஹனீஃபாவின் விளக்கம் சரியானதா? தவறானதா? ஷாஃபியின் விளக்கம் சரியானதா? தவறானதா?' - என்று விசாரித்து அந்த மனிதப் புனிதர்களை அவமானப்படுத்தவும் மாட்டான்!
Thursday, December 5, 2013
நடப்புச் செய்தி: 'மனிதநேயத்தின் மறு பெயர் சலீம்!''
பல்வேறு சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளில் டாக்டர் சலீம் ஈடுபட்டு வருகிறார். உட்கார்ந்த இடத்திலேயே லட்சங்களை சம்பாதிப்பதை விட்டு விட்டு தெருக்களில் இல்லாதாரோரின் நிழலாய் தொடர்கிறார் இவர்.
டாக்டர் சலீமின் இல்லத்துணைவியார், கணவரது எல்லா நற்செயல்களிலும் பெரும் துணையாக நிற்கிறார். இவர் ஒரு வழக்குரைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
| Meeramaideen Jamal |
நடப்புச் செய்தி:'அதிகார ஜனநாயகத்தின் அடிமைகளா நாம்?'
அப்போது, அங்கு வந்த நெல்லித்தோப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர், பிரசாரம் செய்து கொண்டிருந்த தொண்டர்களை சரமாரியாக தாக்கினார் (படம்)
கருத்து.......... ?
சுதந்திரம்.............. ?
வாழ்க ஜனநாயகம்! வாழ்க அதிகார ஜனநாயகத்தின் அடிமைகள்!!
Wednesday, December 4, 2013
உடல் நலம்: 'நீரழிவு நோய்க்கு எளிய மருத்துவம்'
- வரக்கொத்தமல்லி (தனியா) அரை கிலோவும்
- வெந்தயம் கால் கிலோவும்
Tuesday, December 3, 2013
ஆய்வுக் கட்டுரை: 'நவீன அரசியல் டுபாக்கூர் - மோடி!'
1880089164 7418381443 7508824278 7878497680
7897813526 8000604117 8003223670 8010093275
8053445210 8099232320 8460148050 8527356181
8696479393 8962876064 9000170213 9011883337
9016680805 9028663484 9033210550 9033235765
9033688635 9046363210 9049722078 9133085157
9266535675 9336504544 9370054516 9412613652
9414207240 9427494307 9427663621
9447364581 9503453710 9527665171
9560580341 9561415109 9574880779 9601436788
9631013051 9647413363 9649553815
9671107002 9679543386 9689686704 9700047010
9727225250 9730779233 9740080158 9741033351
9750033982 9764661778 9812432098 9813180007
9813979044 9814844399 9825053782 9828792792
9831327651 9832067358 9842726988 9844500444
9866699043 9879551708 9897033308 9897436666 9898488501
9899464310 9911727724 9913089668 9913789052
9921847978 9924249897 9925023396 9925092487
9928006787 9942652371 9947076315 9948004469
9963716961 9964905378 9967663797 9978811002
9979156134 9979320504 9981916442 9984175246
9991990707 9994307266 9999185498 7351489242
காலப்பெட்டகம் : போபால் பேரழிவு: 'ஒரு கருப்பு நாள்!'
- அசம்பாவிதம் நிகழ்ந்த இரவோடிரவாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,295.
- கடுமையாய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000
- விபத்தைத் தொடர்ந்து பின்விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.27 லட்சத்துக்கும் மேல்.




























