சாத்தான்குளம் கொடூரன்களைவிட கொரோனா எவ்வளவோ மேல்!
இன்று ஜுன் 26, சித்திரவதையால் (International Day in Support of Victims of Torture) பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஆதரவு தரும் நாள். மனித உரிமைகள் சம்பந்தமான விழிப்புணர்வு, முன்னெடுக்க வேண்டிய நாள். தன்னார்வலர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் அமைப்புகள் ஒன்று சேர்ந்து சித்திரவதையால் பாதிக்கப்படுவோருக்கு உரத்து குரல் எழுப்பி, நீதியைப் பெற்றுத் தர வேண்டிய நாள்! ~இக்வான் அமீர்.
சாத்தான்குளம் காவல்நிலைய கொட்டடி கொலைகளும், பிச்சைக்காரனும்!
மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய மக்களின் நேரடி வரிப் பணத்தில் சம்பளம் பெற்று குடும்பம் நடத்தும் காக்கிசட்டைகள் மக்கள் சேவகர்களாக இருப்பதில்லை. அதிகார ஆணவத்தின் உச்சாணியில்தான் இருக்கிறார்கள். அநீதிகளும், அக்கிரமங்களுமாய்தான் காவல்துறையின் வரலாறு தொடர்கிறது. கீழ்நிலையிலிருந்து, மேல்நிலை அதிகாரிவரை வாய் திறந்தாலே வெறும் பொய்தான்! பொய்யான குற்றச்சாட்டுகள், பொய்யான புனைவுகள், பொய்யான விசாரணைகள், பொய்யான சாட்சிகள், மேலதிகாரிகளின் பொய்யான விளக்கவுரைகள்! என்று எல்லாமே பொய்கள்தான்!~இக்வான் அமீர.
வடசென்னையில் சூரிய கிரணம்
21, ஜூன் 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வடசென்னை எண்ணூரில் தெரிந்த சூரிய கிரண காட்சி இது.
காக்கிசட்டை கொலைக்காரர்களுக்கு மரணதண்டனை எப்போது?
சாத்தான்குளத்தில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸீம் சிறையில் கொல்லப்பட்டதற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பும் நீதியாக இருக்க முடியாது.
டிராகன் பழச் செடியை கவாத்து செய்வது எப்படி?
How To Prune Dragon Fruit ....
Friday, September 20, 2013
Wednesday, September 18, 2013
சிறப்புக் கட்டுரை: 'சொந்த நாட்டின் அடிமைகளான முஸ்லிம்கள்!'
Tuesday, September 17, 2013
காலப்பெட்டகம்:'சொந்த மண்ணின் அந்நியர்கள்!'
நிவாரண முகாம்கள், உறவினர்களின் வீடுகள், நலம் விரும்பிகளின் இல்லங்கள், காவல்நிலையங்கள் என்று புகலிடம் தேடிக் கொண்டு உயிர் காத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள்!
கொல்லப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த கோரக் காட்சிகளைக் காண சகியாமல் அதிர்ச்சியில் உறைந்து போன கொடுமைகள்!
"1947 இல் நாட்டு பிரிவினையின் போது இங்கேயே தங்கி அமைதியுடன் வாழலாம் என்று நேருவும், அவரது காங்கிரஸீம் சொன்னதை நம்பியதற்கான பரிசா இது?" - என்று பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பிரதமரிடம் அழுது முறையிட்ட அவலங்கள்!
நாடு மீண்டும் ஒருமுறை பிரிவினை அடைந்ததுபோன்ற வெறிச்சிட்ட கிராமங்களின் காட்சிகள்..!
இவையெல்லாம் நடந்திருப்பது.. உபியின் வடக்கு பகுதியில்.. சொந்த மண்ணில் அந்நியர்களாகிப் போன துரதிஷ்டசாலிகளின் கண்ணீர் கதைகள்.!
Monday, September 16, 2013
காலப்பெட்டகம்: '135 வருடப் பாரம்பரியத்திலிருந்து ஓர் அரிய முத்து உதயம்!'
"பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல. சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துக்களைச் செழுமைப்படுத்தி உருவாக்குவதும் ஆகும். ...Saturday, September 14, 2013
Friday, September 13, 2013
சிறப்புக் கட்டுரை: 'செயின்ட் பீட்டர்ஸிலிருந்து.. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்வரை'
"போர்.. போரைத்தான் தோற்றுவிக்கும்! வன்முறை.. வன்முறையைத்தான் உருவாக்கும்!" - வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் திரளாக குழுமியிருந்த மக்கள் முன்பாக நேற்றைய ஞாயிறுக்கு முன் ஞாயிறு அன்று போப் பிரான்சிஸ் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி இது. வினை விதைத்தால் வினைதானே அறுவடை செய்ய வேண்டியிருக்கும்? விதைப்பவைதானே முளைக்கும்? ஒவ்வொரு விசையும், அதே அளவிலான எதிர்விசை கொண்டவை என்ற அறிவியல் கருத்தை போப் உணர்த்தியிருக்கிறார்.
Thursday, September 12, 2013
Tuesday, September 10, 2013
Thursday, September 5, 2013
Wednesday, September 4, 2013
சிறப்புக் கட்டுரை: 'காலாவதியாகும் ‘கௌபாய்’ போர்கள்!'
- நம்முடைய வாழ்வியல் மாண்புகளை தீர்மானித்து அதன்படியே மற்றவரையும் வாழச் செய்வது.
- ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கான உலகின் ஆளுமைப் பண்பின் முன்னுதாரணமாய் திகழ்வது.
- மத்திய கிழக்கில் மண்டிகிடக்கும் கல்வியின்மை, வறுமை இவற்றை களைவதற்கான செயல்முறையிலான தீர்வுகளை அளிப்பது.
- எரிபொருள் செல்வாக்குகளின்.. அழுத்தங்களின் தீர்மானங்களை எடுப்பதைத் தவிர்த்து மாற்று எரிபொருளைத் தேர்வு செய்வது.
- முதலில் நம்மிடம் குவிந்து கிடக்கும் பேரழிவு ஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வது.
- மனித குலத்து தீமை விளைவிக்கும் அமைப்புகளை தெளிவாக உலகுக்கு அடையாளம் காட்டுவது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது.
- ஆட்சியாளர்களால் அடக்கியாளப்படும் சொந்த மக்களை மேலும் அடக்கி, ஒடுக்க ஆயுதங்கள் வழங்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பது.
- மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் அரசு சாரா அமைப்புகளுக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்வது.
- பிரச்சனைகளை வன்முறை வழியில் கையாளாமல்.. பேசி தீர்ப்பது.
- ஜனநாயகத்துக்கு எதிரான மோசமான சர்வாதிகாரிகளின் வாழ்வை பாதுகாக்க.. சாதரண மக்களின் வாழ்க்கையை அச்சத்தில் உறையச் செய்யாமல் நீதியை நிலைநாட்டுவது.
- சிரியா உட்பட வன்முறையில் நம்பிக்கையற்ற ஆயுதம் ஏந்தாத அரசியல் அமைப்புகளின் ஒத்துழைப்போடு அவர்களையே முன்னிறுத்தி வன்முறையற்ற தீர்வுகளுக்கான அழுத்தம் கொடுப்பது.






















