NewsBlog

Wednesday, December 4, 2013

உடல் நலம்: 'நீரழிவு நோய்க்கு எளிய மருத்துவம்'


சர்க்கரை நோய் எனப்படும் நீரழிவு நோயாளிகளுக்கான ஓர் எளிய மருத்துவம் இது. பயன்படுத்துவதற்கு முன்னும், பயன்படுத்தியதற்கு பின்னும் ஒரு முறை சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொண்டால் ஒப்பீடு செய்ய ஏதுவாக இருக்கும்.

மளிகைக் கடைகளில் கிடைக்கும்,  

  • வரக்கொத்தமல்லி (தனியா) அரை கிலோவும்
  • வெந்தயம் கால் கிலோவும் 

வாங்கிக் கொள்ளுங்கள். இவற்றை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித்தனியாகவே பொடியாக்கி பிறகு ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். 
 
இப்படி கலந்த இரண்டு தேக்கரண்டி அளவுள்ள தூளை, இரண்டு டம்ளர் அதாவது இருநூறு மில்லி குடிநீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு இந்த கஷாயத்தை வடிகட்டி மூன்று வேளை சாப்பாட்டிற்கு சுமார் முக்கால் மணி நேரத்துக்கு முன்பாக குடிக்க வேண்டும். அப்படி குடித்த பிறகு சுமார் முக்கால் மணி நேரம் வரை குடிநீரைத் தவிர - அதுவும் தேவைப்பட்டால் - வேறு எதையும் அருந்தக் கூடாது. 

எளிய இந்த மருத்துவத்தை ஒரு மாதம்வரை பயன்படுத்தி வந்தால் வியக்கத்தக்க முறையில் நீரழிவு நோய் கட்டுக்குள் வரும் என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள். 

எளிய பயனுள்ள இந்த மருத்துவத்தை பயன்படுத்திதான் பாருங்களேன்!

0 comments:

Post a Comment