NewsBlog

Monday, December 16, 2013

விருந்தினர் பக்கம்: 'சாராயம் ஒழிக்க முயன்றபோது, வழக்கு பதிவு செய்யப்பட்டது!'

"நான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றியபோது, பன்னாட்டு நிறுவனமான பெப்சியின் குறிப்பிட்ட குளிர்பானம் குடிக்க இயலாததாக உள்ளது என புகார் வந்தது. 

இதனைத் தொடர்ந்து அந்த நிறுவன தொழிற்சாலைக்கு சீல் வைக்க முனைந்தபோது, பல விதங்களில் எனக்கு தடைகள் வந்தன. என்னுடைய சட்ட அறிவின் மூலம் பல்வேறு தடைகளை முறியடித்து பெப்சி தொழிற்சாலைக்கு சீல்  வைத்தேன்.

அழகுசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்பதால் பலர் இறக்கிறார்கள் என் தகவல் வந்தது. இதனை ஒழிக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காரணம் லஞ்சம், ஊழல். இதனால், என் மீதே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை என் சட்ட அறிவின் மூலமே முறியடித்தேன்.

இந்த நிகழ்ச்சிகளின் மூலம் சாதாரண மக்களுக்கும் சட்ட அறிவு எவ்வளவு அவசியம் என்பது புரியும். சட்ட அறிவை பொதுமக்களிடம் வளர்க்க சட்ட பஞ்சாயத்து இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் உதவ வேண்டும்!"

-உ.சகாயம்,
மேலாண்மை இயக்குனர்,
கோ-ஆப் டெக்ஸ்.
கிராம மக்களுடன் உ. சகாயம். ஐஏஎஸ்



0 comments:

Post a Comment