NewsBlog

Wednesday, December 5, 2012

'சூரிய மின் சக்தியும்-டிராகன் ஸ்டேடியமும்!'



அணுமின் என்னும் அசுரனை விரட்டியடிக்க உலக மக்களிடையே விழிப்புணர்வு வளர்ந்துவரும் நிலையில், சத்தமில்லாமல் சூரிய சக்தியைக் கொண்டு ஏற்கனவே பெரும் சாதனைப் படைத்துவிட்டது தாய்வான்! அதுவும் 2009-லேயே தாய்வான் இந்த சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.சிந்திப்போருக்கு ஓராயிரம் நல்வழிகளைத் திறந்து வைப்பான் படைப்பாளன் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

தாய்வானின் 'காவுஹ்சிங்' (Kaohsiung) நகரில் அமைக்கப்பட்டுள்ள 'டிராகன்' விளையாட்டரங்கம் உலகின் முதன்மையான சூரிய சக்தியிலான விளையாட்டரங்கம் என்பது முக்கியமானது.

ஜப்பானைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர் 'டோயோ' இதை வடிவமைத்தார். குதிரை லாடத்தின் வடிவிலான விளையாட்டரங்கத்தின் கூரை முழுவதும் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டு அதன் மேற்புறம் முழுவதும் சூரிய சக்தியைப் பெறுவதற்கான தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.



ஜுலை, 2009-இல், நடந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்ட அரங்கம் இது. 19 ஏக்கர் நிலப்பரப்பில் 55,000 பேர்  அமரும் வசதிக் கொண்டது.

உலக விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு தற்போது அந்த விளையாட்டரங்கம் தாய்வானின் தேசிய அளவிலான கால்பந்தாட்ட அரங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரை வட்ட வடிவில், 'டிராகனின்' தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டதே இந்த விளையாட்டரங்கத்தின் பிரத்யேகத் தன்மையாகும்.

விளையாட்டு வீரர்களையும், பார்வையாளர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் விதமாக  இதன் வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டதாக போட்டியின் அமைப்பாளர் தெரிவிக்கிறார்.




சூரிய சக்தியைப் பெறுவதற்கு வசதியாக 8,844 தகடுகள் பொருத்தப்பட்டுள்ள அரங்கில், தேவைக்கு அதிகமான மின்சாரம் கிடைக்கிறது. இதன் மூலம் 3,300 விளக்குகள், இரண்டு பெரும் திரைகளில் தொலைக்காட்சி ஒளிப்பரப்பும் வசதிக்கான மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. 

ஆண்டுக்கு சுமார் 1.14 மில்லியன் கிலோவாட் மின்சாரம் கிடைக்கிறது. இதன் மூலம் 660 டன் கார்பன்டை ஆக்ஸைடு  சுற்றுச்சூழலில் கலப்பது தடுக்கப்படுகிறது. 

தேவைக்கு அதிகமான உபரி மின்உற்பத்தியை தாய்வான் அரசாங்கம் விற்று காசாக்கி விடுவது இதன் மற்றொரு சிறப்பு எனலாம்.

  SOURCE: 'Daily Mail'


0 comments:

Post a Comment