NewsBlog

Tuesday, December 18, 2012

தில்லி பயங்கரம்: 'கால் நூற்றாண்டாயினும், மாறாத பாதக செயல்கள்'!



தில்லியில் ஓடும் பஸ்ஸில் பலாத்காரம்! மக்களவையில் சுஷ்மா ஆவேசம்!! கண்ணீர்விட்டு அழுத ஜெயா பச்சன்!!!

ஒரு படுபாதக செயல் குறித்து இன்று காரசாரமாக மக்களிடையே விவாதங்கள், அனலுரைகள், சட்ட ஆலோசனைகள் என்று எங்கும் ஆவேசங்கள்! 

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தில்லியில் இத்தகைய ஒரு படுபாதகச் செயல் நடந்தது. அதை கண்டித்து மணிச்சுடர் நாளேட்டில் 14.10.1988 'அபாபீல்' என்ற புனைப் பெயரில் நான் எழுதிய கட்டுரையை மிஸ்டர் பாமரன் வாசகர்களுக்காக மீண்டும் தருகிறேன். 

ஒரு துரும்பளவாவது நமது சமூக ஒழுக்கம் மேம்பட்டிருந்தால்... அதற்கான முயற்சிகளை நமது ஆட்சியாளர்கள் அன்று மேற்கொண்டிருந்தால்.. நமது சமூக நலன் விரும்பிகள் நற்சமூகம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டிருந்தால்.. இந்நிலையை தவிர்த்திருக்க முடியும். 

நதிகளை, மலைகளை புனிதமாக்கிய நாம் மனிதர்களை மதிக்க மறந்ததேன். அதிலும் குறிப்பாக மனுஷிகளை புனிதப்படுத்த தவறுவதேன்?

 தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவியான மோனிஷா வர்மா பகல் 11.00 மணிக்கு டிடிசி (தில்லி மாநகர போக்குவரத்துக் கழகம்) பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தார். 

ள்ளே ஐந்து பேருந்து ழியர்கள் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு கண்களில் வெறித்தனத்துடன் பார்வையை மோனிஷாவின் மீது வீச அவள் சங்கடத்தில் நெளிந்தாள். பேருந்திலோ அவளைத் தவிர வேறு பயணிகள் இல்லை. 

பேருந்து ஊழியர்களின் கிண்டலும்- கேலியும் அவளின் இதயத்துடிப்பை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன. 


சிறிது நேரத்தில் அவர்கள் அவளைத் தொட்டு சீண்ட ஆரம்பித்ததும், இனியும் பொறுத்தால்.. பேராபத்து என மூளை எச்சரிக்க இறங்கும் வழி நோக்கி மோனிஷா ஓடினாள். 

பேருந்து வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. 

னால், மோனிஷா தன்னை இறங்க விடாமல் வழிமறித்த ஒரு காமுகனையும் இழுத்துக் கொண்டு ஓடும் பேருந்திலிருந்து குதித்தே விட்டாள். பாத எலும்பு முறிந்தும்கூட அவள் துவண்டவிடவில்லை. நேராக ரிக்‌ஷாவில் ஏறி கல்லூரியை அடைந்தாள். அடுத்த சில மணி நேரத்தில் காட்டுத் தீயாய் செய்தி தலைநகர் முழுவதும் பரவியது.

குற்றத் தடுப்பு போலீசார் மூன்று படை பிரிவுகளை அமைத்து தில்லி முழுவதும் சல்லடைப்போட்டு குற்றவாளிகளைத் தேடினர்.

தில்லி மாநகர பேருந்து கழகமோ தன்னுடைய 40 ஆயிரம் ஊழியர்களில் ஒவவொருவரையும் துருவி.. துருவி.. விசாரித்தது.

அடுத்த நாள் மாலை.

ஓட்டுநர் ஜெயசந்தும், நடத்துனர் ரோஹ்தாஸ் சிங்கும் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

"நாங்கள் இந்த நிகழ்ச்சியால்.. தலைகுனிவிற்கு ஆளாகியிருக் கிறோம். இந்த பாதகர்கள் தூக்கிலிடபட வேண்டியவர்கள்"- என்று டிடிசியின் தலைவர் எஸ்.சி.வைஷ் மனம் வெதும்பி வருத்தப்பட்டார்.

மாணவர்களின் மிக பிரமாண்டமான ஊர்வலங்கள் நடந்தன. டிடிசி ஊழியர்கள் பெயர் வில்லைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அவர்களுக்கு பயணிகளிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள் குறித்து பயிற்சிகள் அளிக்க வேண்டும்  என்ற வலுவான கோரிக்கைகள் எழுந்தன.

மக்களவையிலும் இந்த சம்பவம் சூடான விவாதமானது.

நமது தலைநகரான தில்லியில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன.

வரதட்சணை மரணங்களும், சிறுமிகள் கற்பழிப்புகளும் நாட்டிலேயே அதிகமாக தில்லியில்தான் நடக்கின்றன.

 மோனிஷாவின் சம்பவத்தின் மூலமாக அரசின் கவனம் இத்தகைய குற்றத் தடுப்பு விவகாரங்களின் பக்கம் திரும்பியுள்ளது.

டிடிசியும் தன் பங்குக்கு குற்றவாளிகளான ஜெய்சந்தையும், ரோஹ்தாஸ் சிங்கையும் வேலை நீக்கம் செய்துவிடுவதாகவும், அதிகளவில் பிரத்யேக மகளிர் பேருந்துகளை விடுவதாகவும், இன்னும் அதிகமான பெண் நடத்துநர்களை வேலைக்கமர்த்துவதாகவும் உறுதியளித்துள்து.

மொத்தத்தில், இன்று நாட்டில் பட்டப்பகலிலேயே பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதையும், பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழல் உருவாகி வருவதையும் இச்சம்பவம் தெளிவுபடுத்துகிறது.

நடந்துள்ள நிகழ்வு கொடியதுதான் மறுப்பதற்கில்லை! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.. உண்மை! ஆனால், மீண்டும் மோனிஷாவிற்கு உண்டான நிலைமை மற்றவர்களுக்கு உண்டாமலிருக்கக் கூடிய நிரந்திர தீர்வுகளையல்லவா நாம் உருவாக்கி இருக்க வேண்டும்?

மோனிஷா கல்லூரி மாணவியாக இருந்ததாலும், துணிச்சல் மிக்க பெண்ணாக இருந்ததாலும் ஒரு பேராபத்திலிருந்து தப்பித்துக் கொண்டாள். இத்தகைய சமூகத் தீமைகள் மீண்டும் நடைபெறா என்பதற்கு என்ன உத்திரவாதம்? இந்த தீர்வுகள் எப்படி தீமைகளைக் களைய பயன்படப்போகின்றன? இதற்கு நிரந்தர தீர்வல்லவா காண வேண்டும்?

பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்கள் எப்போதும் நடக்கா வண்ணம் வேறுடன் களைவதல்லவா புத்திசாலித்தனம்!

அதிகமான மகளிர் ஸ்பெஷல் பேருந்துகளை இயக்குவதாலும், அதிகமான பெண் நடத்துநர்களை பணிக்கமர்த்திக் கொள்வதாலும் இத்தகைய குற்றங்கள் எப்படி குறையப் போகின்றன?

உண்மையில், இத்தகைய படுபாதக செயல்கள் நடைபெறுவதற்கு என்ன காரணம்?

நாகரீகம் என்ற போர்வையில் அணியப்படும் அரைநிர்வாண உடைகள், சமத்துவம் என்ற தவறான பொருளை பிரதிபலிக்கும் அடக்கமற்ற தன்மைகள், திரும்பும் இடமெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், மனதை கெடுக்கும் திரைப்படங்கள், மூளையை மயக்கி அடிமைப்படுத்தும் போதை வஸ்துக்கள், மது பான வகைகள், ஆணையும், பெண்ணையும் ஒரு சேர நெருக்கிக் கொண்டிருக்கும் சமூக அமைப்பு இப்படி ஓராயிரம் காரணங்கள் இந்த சமூக தீமைக்கு சாதகமாக இருக்கின்றன.

படைப்பிலேயே ஆணும்-பெண்ணும் தனித்தனி தன்மை கொண்டவர்கள். இது ஒரு பொதுவான நியதி. இருசாரருக்கும் பொருந்தக்கூடியது.

பெண்ணுக்கு சமுதாயத்தில் உயர்வான அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும். பெண்களை எக்காரணம்  கொண்டும் கேளிக்கைப் பொருளாக்கக்கூடாது!  பெண்களுக்கு கண்ணியமளித்து அவளைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பால் மட்டுமே மோனிஷாக்களுக்கு கண்ணியம் ஏற்படும்.

இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது. கண்ணியத்தோடு வாழ அழைக்கிறது.

நன்றி: மணிச்சுடர் நாளேடு - 14.10.1988

0 comments:

Post a Comment